பிலாக்கரில் "ROLLOVER/ MOUSE OVER IMAGE LINK" கொண்டு வர

 நாம் சில தளங்களில் பார்த்திருப்போம் நாம் ஒரு படத்தின் மீது நம் மவுசை வைத்த உடன் அந்த படம் மறைந்து வேறொரு படம் உண்டாகும். இதை சில தளங்களில் அந்த படத்தை யாரும் காப்பி செய்யாமல் இருப்பதற்கும் இது உபயோக படுத்திகிறார்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.




படத்தின் மீது உங்கள் மவுசை நகர்த்தும் போது உங்கள் படம் மாறுவதை காண்பீர்கள். சரி இதை எப்படி செய்யலாம் என்று கீழே காணலாம்.  

<a href="URL OF SECOND IMAGE GOES HERE"><img src="URL OF FIRST IMAGE GOES HERE" onmouseover="this.src='URL OF SECOND IMAGE GOES HERE'" onmouseout="this.src='URL OF FIRST IMAGE GOES HERE'" /></a>
மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொண்டு நம்முடைய பிளாக்கர் அக்கௌண்டில் போஸ்ட் எடிட்டர் பகுதியில் EDIT HTML பகுதியில் பேஸ்ட் செய்து சிவப்பு நிறங்களில் இருக்கும் இடங்களில் உங்களுக்கு தேவையான படத்தின் முகவரிகளை கொடுக்கவும்.


  •  URL OF FIRST IMAGE GOES HERE -என்று இருக்கும் இடத்தில் நமக்கு தெரிகின்ற முதல் படத்தின் URL. (உ -ம்) பதிவில் அந்த பால் கறக்கும் படத்தின் முகவரி.
  •   URL OF SECOND IMAGE GOES HERE -என்று இருக்கும் இடத்தில் மாறும் படத்தின் முகவரி கொடுக்கவும். (உ-ம்) அந்த கிளியின் படம். 
  அவ்வளவு தான் இந்த மாற்றங்கள் செய்து COMPOSE பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய படம் மாறி வருவதை காண முடியும்.

பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேட்கவும்.

டுடே லொள்ளு     
Photobucket
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் 

Comments