STAGE -I
- உங்கள் தளத்தில் உள்ள படத்தின் அளவை குறைக்கவும். வாசகர்கள் தேவையென்றால் பெரிது படுத்தி பார்த்து கொள்வார்கள்.
- உங்கள் தளத்தில் ஏதேனும் Flashல் உருவான விட்ஜெட் இருந்தால் நீக்கி விடவும். இது லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.
- முடிந்த வரையில் பிலாக்கரின் default விட்ஜெட்டுகளை மட்டுமே பயன் படுத்துவது சிறந்தது.
- உங்களுடைய தளத்தில் உள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் நீக்கி விடுங்கள். தேவையென்றால் புதியதாக சேர்த்து கொள்ளவும்.
- உங்கள் தளத்தில் தேவையற்ற தற்போது உபயோகிக்காத விட்ஜெட்டுகளை கண்டறிந்து நீக்கி விடவும்.
- உங்களுடைய முகப்பு பக்கத்தில் முழு பதிவும் தெரிவதற்கு பதில் ஒரு READMORE என்ற லிங்க் கொடுக்கலாம்.
- மேலே உள்ள மாற்றங்கள் செய்த பிறகும் உங்கள் தளம் மெதுவாக தான் இயங்கு கிறதா.
- எந்த விட்ஜெட் லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று அறியமுடியவில்லையா கவலையை விடுங்கள் உங்களுக்கு ஒரு தளம் உள்ளது.
- இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இந்த தளத்திற்கு செல்ல லிங்க் - pingdom
- அதில் கொடுக்க பட்டிருக்கும் காலி கட்டத்தில் உங்களுடைய தளத்தின் URL கொடுக்கவும்.
- பிறகு அதற்கு அருகே உள்ள Test Now என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய தளம் உங்களுடைய தளம் ஸ்கேன் ஆகும்.
- முடிவில் உங்களுக்கு கீழே இருப்பதை போல முடிவு வரும்.
- இதில் உங்கள் தளத்தில் உள்ள அனைத்து HTML லிங்கும் ஸ்கேன் ஆகி வரும்.
- ஒவ்வொரு லிங்கிற்கு நேராக மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் அடங்கிய பார்(bar) வரும்.
- அதன் மீது நம் மவுசின் கர்சரை வைத்தால் அந்த விட்ஜெட் லோடு ஆக எவ்வளவு நேரம் ஆனது என்று வரும்.
- இது போல் எந்த லிங்க் லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று கண்டறிந்து அதை நம் தளத்தில் இருந்து நீக்கி விடவும்.
- இந்த வேலையை செய்வதற்கு இன்னொரு தளமும் உள்ளது. அந்த தளத்திருக்கு சென்றால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
- இதில் உங்களுடைய தளத்தின் முகவரி கொடுத்து அருகில் உள்ள START TEST என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- கிளிக் செய்தவுடன் உங்கள் தளம் ஸ்கேன் ஆகி உங்களுக்கு முடிவுகள் வரும். இதில் எந்தெந்த பகுதிகள் எவ்வளவுநேரம் எடுத்து கொண்டது என்ற செய்திகள் முடிவுகள் வரும் இதன் படி நம் தளங்களை மாற்றி அமைத்து கொள்ளலாம்.
- இந்த தளம் செல்ல லிங்க் - Webpage Test
Comments