Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

உங்களின் புதிய போட்டோக்களை ஒரே நிமிடத்தில் பழைய கால போட்டோவாக மாற்றலாம்

வளர்ந்துவிட்ட நவீன தொழில் நுட்பத்தில் போட்டோக்களை மிகவும் துல்லியமாகவும் அழகாகவும் எடுக்கும் வசதிகள் உள்ளது. இந்த முறையில் நாம் நமக்கு தேவையான போட்டோக்கள எடுத்து மகிழ்கிறோம். ஆனால் வீட்டில் நம் பாட்டி அல்லது தாத்தாவின் போட்டோக்கள் இருப்பதை பார்த்து இருப்போம் அந்த போட்டோக்கள் தெளிவற்றும் கலர் இழந்தும் காணப்படும். இதை போன்று நம் நவீன டிஜிட்டல் படங்களையும் எப்படி இந்த படங்கள் போல மாற்றலாம் என்று பார்ப்போம்.

இது என் மகளின் புதிய போட்டோ 

மாற்றிய பின் 
 • இது போல மாற்ற போட்டோஷாப் போன்ற மென்பொருள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை ஒரே நிமிடத்தில் தேவையான படத்தை மாற்றி கொள்ளலாம்.
 • இதற்கு முதலில் இந்த Your Old Picture தளம் சென்று உங்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Uplod பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் படம் பழைய படமாக மாறி விடும். 
 • மாறிய படத்தை அங்கிருந்தே சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
 • உங்கள் படங்களையும் இதுபோல் மாற்றி மகிழுங்கள்.  
டுடே லொள்ளு 

எது உண்மை இவ்ளோ நாள் ஏமாந்து விட்டேனா  


நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

24 comments :

 1. அருமை நண்பா,

  மிகவும் பயனுள்ள தளத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  உங்கள் மகள் செம க்யூட்டா இருக்காங்க...

  நன்றி நன்றி

  ReplyDelete
 2. வழக்கம்போல் அருமை சசி. டு்டே லொள்ளு... ஹ...ஹா.. செம சூப்பர்.

  ReplyDelete
 3. அட்டகாசம் அழகு உங்கள் மகளும் ....டுடே லொள்ளும்

  ReplyDelete
 4. thank u sasi....

  cute doll.....!!

  ReplyDelete
 5. புதுச பழசா மாத்தினாலும் அந்த "குட்டி " கொள்ளை அழகாதான் இருக்கா. :)))))
  நல்லாயிருக்கு சசி.

  ReplyDelete
 6. பயனுள்ள பதிவு சசி, உங்க மகளுக்கு என்ன வயசு சசி? அப்படியே என் மகள் போலவே!!! she is now in India, i miss her Sasi.

  ReplyDelete
 7. @வைகை

  என்ன பண்றது சொந்தங்களை விட்டு பிரிந்து படும் கஷ்ட்டம் எப்பொழுது தான் நீங்க போகிறதோ.
  என் மகளுக்கு 11/2 வயது தான் ஆகிறது. பெயர் யுதிஷா

  ReplyDelete
 8. ஹாய் சசி,

  ஒரு வேண்டுகோள்:
  பிளாக்கரில் நாம் இடும் commandகளுக்கு Reply வந்துள்ளதா என்று பார்க்க திரும்பவும் அந்த பதிவுக்கு சென்றுதான் பார்க்கவேண்டி உள்ளது. சில தளங்களில் மட்டுமே Subscribe by email வசதி உள்ளது.

  நாம் இடும் எல்லா command களுக்கும் reply வந்துள்ளதா என்று பாக்க எதாவது வழி உண்டா.??

  சொல்லவும். உதாரணமாக உங்கள் தளத்தில் நான் இந்த command போட்ட பின்பு இதற்கு ஏதாவது reply நீங்கள் போட்டால் நான் எப்படி எந்த பதிவுக்கு திரும்ப வராமல் அந்த reply வை படிப்பது.

  என்றும் உங்கள் நண்பன்.

  ReplyDelete
 9. @WiNnY...

  Subscribe by email வசதியின் மூலமாகவே நீங்கள் கேட்பது போல் அறிய முடியும் நண்பா. வேறு வழி இருக்கிறதா என எனக்கும் தெரியவில்லை.

  ReplyDelete
 10. @sanjai

  Subscribe by email வசதி தவிர வேறு இருந்தால் என்னை போன்று எந்தந்த தளத்தில் எல்லாம் பின்னுட்டம் போட்டோம் என்ற மறதிகாரர்களுக்கு வசதியாய் இருக்கும்...

  இருந்தாலும் நன்றி நண்பரே

  ReplyDelete
 11. ரொம்ப உபயோகமான இடுகை.

  இதுபோல புதுசு புதுசா பகிர்றதாலதான் நீங்க என் தமிழ்ப் பதிவர் திரட்டுல இடம் பிடிச்சீங்க சார்

  ReplyDelete
 12. தகவலுக்க மிக்க நன்றி சகோதரா...

  ReplyDelete
 13. இது உங்க பொண்ண... சொல்லவே இல்லை...

  ReplyDelete
 14. அழகை வர்ணித்தால் அழகு கோபப்படும் என்பதால் வர்ணிக்கல...

  ReplyDelete
 15. மிக அருமை சசி.. என்னோட தமிழம்மா எம் ஏ சுசீலா வலைத்தளத்தில் உங்க ப்லாக்கை போட்டு இருக்காங்க சைட் கேட்ஜெட்ல..:))

  ReplyDelete
 16. மகளின் படம் அருமை

  ReplyDelete
 17. நான் வலைதளத்திற்க்கு புதியவன்
  என்னுடைய வலைதளத்தில் add gedget பகுதியில் என்னை கவர்ந்தவர்களின் புகை படங்களை slide show மூலமகவோ அல்லது gif file மூலமாகவோ இணைக்க விரும்புகிறேன்.எது எளிது எப்படி இணைப்பது எனக்கு உதவுங்கள் நண்பரே...

  ReplyDelete
 18. @கிராமத்தான்

  நண்பரே நீங்கள் நேரடியாக இங்கு போட்டோவை அப்லோட் செய்து வெளியிட முடியாது. நீங்கள் picasa, Flikr, Photo bucket போன்ற தளங்கள் போட்டோவை பதிவேற்றி விட்டு அந்த பயனர் பெயரை இங்கு கொடுத்தால் தான் slideshow உங்கள் பிளாக்கில் கொண்டு வர முடியும்.

  ReplyDelete
 19. அருமையான தகவல் நண்ப...!!

  ReplyDelete
 20. அருமையான தகவல் நண்ப...!!

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press