தமிழ்10 ஓட்டு பட்டையில் பிரச்சினையா

 நம்முடைய பதிவுகளை உலகறிய செய்யும் திரட்டிகளில் மூன்றாவது இடத்தை (அலெக்சா ரேங்க் படி) பிடித்துள்ள தமிழ்10 திரட்டியில் கடந்த சில வாரங்களாக நுழைவதிலும் ஓட்டு பட்டையிலும் பிரச்சினை வந்து கொண்டு உள்ளது. காரணம் அந்த தளத்தின் URL www.tamil10.com/submit என்பதில் இருந்து www.tamil10.com என்று சுருக்கி உள்ளனர். ஆதலால் தான் இந்த பிரச்சினை நிலவுகிறது.

ஆகவே ஓட்டு பட்டை தெரியவில்லை என்றால் யாரும் கவலை கொள்ள வேண்டாம் அது கூடிய சீக்கிரம் இந்த பிரச்சினை தீர்க்க படும். ஆனால் ஒரு சிலருக்கு அவர்களின் உறுப்பினர் கணக்கிற்கு உள்ளேயே நுழைய முடியவில்லை அவர்கள் இந்த லிங்கில் http://tamil10.com/module.php?module=rcContactus க்ளிக் செய்து அந்த தளத்திற்கு சென்று அங்கு உள்ள படிவத்தில் உங்கள் பிரச்சினை மற்றும் விவரங்களை தெரிவித்தால் போதும். அடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தமிழ்10 தளத்தில் இருந்து உங்களுக்கு மெயில் அனுப்புவார்கள்.
எவ்வளவோ வேலைகளுக்கிடையில் நாம் அனுப்பும் மெயிலுக்கு மதிப்பளித்து உடனே பதில் போடுகின்றனர். அதில் உங்களுக்கு புதிய கடவுச்சொல் தருகின்றனர். அதில் நுழைந்தால் எந்த சிரமுமின்றி நம் கணக்கில் நுழைய முடிகிறது.  

மேலும் பிரச்சினை என்றாலும் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறும் அவர்களின் நல்ல மனதுக்கு பாராட்டுக்கள்

நான் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எனக்கு அனுப்பிய  மெயில் செய்தி.

கூடிய விரைவில் வழக்கம்போல் நம் தமிழ்10 தளம் அனைத்து வசதிகளுடன் இயங்கும்.

டுடே லொள்ளு 
பதிவர்கள் எல்லாம் வளர்ற புள்ளைங்க நல்லா லூஸ் விட்டு தையுங்க 
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments