Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

உங்கள் பிளாக்கிற்கு எந்தெந்த தளத்தில் இருந்து லிங்க்(Backlinks) கொடுக்க படுகிறது என கண்டறிய

பிளாக் எழுதும் அனைவரும் நினைப்பது நம்முடைய பிளாக் பிரபலமடைய வேண்டும் அதன் மூலம் நம்முடைய எழுத்துக்கள் பிரபலமடைய வேண்டும் என்பதே. இதற்கு முக்கிய தேவைகளுள் ஒன்று இந்த Backlinks. பேக் லிங்க்ஸ் என்றால் நம் பிளாக்கிற்கு மற்ற தளங்களில் இருந்து கிடைக்கும் லிங்க் ஆகும். இப்படி நம் தளத்தின் லிங்க் மற்ற தளங்களில் கொடுப்பதன் மூலம் அந்த லிங்க் மூலம் நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இப்படி நம் தளத்திற்கு எந்தெந்த தளத்தில் இருந்து லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது என சுலபமாக கண்டறிய
 • இந்த லிங்கில் ANALYZE BACKLINKS சென்று இந்த தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பத போல விண்டோ வரும்.
 • அதில் மேலே உள்ள சிறிய கட்டத்தில் உங்களுடைய பிளாக்கின் URL கொடுத்து பின்னர் Begin என்று கீழே உள்ள பட்டனை க்ளிக் செய்யவும். 
 • இப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு வரும் லிங்க்குகளை ஆராய்ந்து உங்களுக்கு முடிவை தரும். 
 • இதில் சுமார் 1000 லிங்க் வரை முடிவு தரும். ஒரே தளத்தில் உள்ள லிங்க்குகள் மீண்டும் மீண்டும் வந்தால் இந்த தளத்தில் கீழே உள்ள Don't repeat backlink from same domain என்ற வசதியில் க்ளிக் செய்து பின்னர் Begin பட்டனை அழுத்தவும்.
 • இப்பொழுது வந்த தளமே திரும்பவும் வராது. இதில் நீங்கள் எத்தனை தளத்தின் URL பரிசோதித்து கொள்ளலாம்.
டிஸ்கி- இது 100% துல்லியமான முடிவுகளை தருமா என்பது சந்தேகமே. துல்லியமான முடிவுகளை அறிந்து கொள்ள BLOGGER - DASSBOARD - STATS சென்றால் அறிந்து கொள்ளலாம்.

குரோம் நீட்சி - Google Dictionary
நாம் இணையத்தில் உலவும் போது ஒரு சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் என்னவென்று பார்க்க நம் டிக்ஸ்னரி தேடுவோம். இனி அப்படி செய்ய வேண்டியதே இல்லை. இந்த நீட்சியை நம் குரோம் உலவியில் நிறுவினால் போதும் நமக்கு புரியாத வார்த்தையின் மீது இரண்டு க்ளிக் செய்தால் நமக்கு ஒரு சிறிய விண்டோ வந்து அதற்க்கான அர்த்தத்தை தெரிவிக்கும்.


அந்த வார்த்தையை பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டுமாயின் கீழே உள்ள more லிங்கை க்ளிக் செய்தால் அறிந்து கொள்ளலாம்.

டுடே லொள்ளு
அழாதட செல்லம், அந்த எலியை நாளைக்கு பிடிச்சுடலாம். 
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.  

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

25 comments :

 1. வாசித்த வேகத்திலேயே பரிட்சித்து பார்த்து விட்டேன். உபயோகமான பதிவு.

  ReplyDelete
 2. கொஞ்சம் இருங்க செக் பண்ணி பாத்துடுறேன்! நன்றி பகிர்ந்தமைக்கு!!

  ReplyDelete
 3. ஒவ்வொரு பதிவிலும் வித்தியாசம்.. பயனுள்ள வகையில் பதிவிடுகிறீர்கள்..! தொடருங்கள் சசி! வெற்றிப் பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள்..! அலெக்ஸா ரேங்கிங் எகிறிக்கொண்டிருக்கிறது உங்களுக்கு..! எனக்கு பொறாமையாக இருக்குங்க..

  ReplyDelete
 4. வழக்கம்போலவே உபயோகமான அசத்தல் பதிவு
  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சசி

  ReplyDelete
 5. //எனக்கு பொறாமையாக இருக்குங்க..//

  போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது
  ஹிஹிஹி

  ReplyDelete
 6. ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் சசி இதை.... நன்றி

  ReplyDelete
 7. mikavum upayookamaana thakaval.

  ReplyDelete
 8. இன்னும் உங்ககிட்டயிருந்து நிறைய எதிர்பார்கிறோம்.

  ReplyDelete
 9. நான் கூட ஒரு BLOG உருவாக்கி இருக்கின்றேன் அதை பிரபல படுத்தமுடியும் THANKS

  ReplyDelete
 10. நானும் அதனை போய் செக் செய்கிறேன்...பகிர்வுக்கு நன்றி....

  ReplyDelete
 11. to day lollu is wonderfull sasi. the post is as usual usefull one

  ReplyDelete
 12. நல்ல விஷயம். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 13. பயன்னுள்ள பதிவு.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 14. உபயோகமான பதிவு.

  ReplyDelete
 15. தங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களைப்
  போன்றோருக்கு ஒரு வரப்பிரசாதம்.
  தொடரட்டும் தங்களின் இந்த பணி.

  ReplyDelete
 16. புகைப்படத்தின் மேலே எழுத்துக்களை பொறிக்க அதாவது போட்டோ கமெண்ட்ஸ் போடுவதற்கு... எளிதாக போடுவதற்கு ஏதேனும் மென்பொருள் இருக்கின்றதா...

  பதிலளிக்கவும்... நன்றி...

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்...எனது பிளாக்கில் வைரஸ் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்..அதை கிளிர் பண்ணுவது எப்படி? கொஞ்சம் சொல்லுங்களேன்...நன்றி!

  ReplyDelete
 18. பதிவும் லொள்ளும் அருமை

  ReplyDelete
 19. நல்ல தகவல். நன்றி சசி!

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press