Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கர் பதிவை எப்படி AUTO PUBLISH செய்வது

 பிளாக்கர் தளம் அனைவரும் தங்கள் கருத்துக்களை சுலபமாக இந்த உலகத்திற்கு சேர்க்கும் மிக அற்ப்புதமான பணியை செய்து வருகிறது. இதில் ஏராளமான வசதிகள் உள்ளன. இந்த வரிசையில் நாம் இன்று பார்க்க போகும் பதிவு நாம் ட்ராப்டில் சேமித்து வைத்திருக்கும் பதிவை எப்படி Auto Publish செய்வது என்று பார்க்க போகிறோம். (இந்த வசதி நிறைய பேருக்கு ஏற்க்கனவே தெரிந்திருக்கலாம் இருந்தாலும் தெரியாதவர்களுக்காக) நாம் ஒரு சில நேரங்களில் நாம் எங்காவது வெளியூர் அல்லது வெளியில் சென்று விடும் நேரத்தில் நம் தளத்தில் பதிவுகளை உருவாக்கி டிராப்டில் சேமித்து அதெற்கென பப்ளிஷ் ஆகவேண்டிய நேரத்தை செட் செய்து விட்டால் நம்முடைய பதிவுகள் நீங்கள் செட் செய்த நேரத்தில் தானாகவே பப்ளிஷ் ஆகிவிடும். 


 • இந்த வசதியை செய்ய நீங்கள் எப்பவும் பதிவு எழுதுவது போல New post பகுதிக்கு செல்லுங்கள்.
 • அதில் நீங்கள் உங்கள் பதிவை எழுதி முடித்தவுடன் கீழே இருக்கும் Post Options என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள். • அந்த Post Options என்ற லிங்கை க்ளிக் செய்தவுடன் இன்னொரு பகுதி ஓபன் ஆகும். 
 • கீழே படத்தில் நான் காட்டி இருக்கும் வரிசைப்படி நீங்கள் தேதி, நேரத்தை தேர்வு செய்யவும்.
 • உங்களின் பதிவு பப்ளிஷ் ஆகவேண்டிய நேரம் காலம் அனைத்தையும் செட் செய்தவுடன் PUBLISH POST என்ற பட்டனை அழுத்திவிட்டால் போதும். 
 • Publish Post அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

 • மேலே படத்தில் உள்ளதை போல செய்தி வரும். அவ்வளவு தான் இனி நீங்கள் செட் செய்த நேரத்தில் சரியாக அந்த போஸ்ட் பப்ளிஷ் ஆகி விடும்.
டிஸ்கி- பதிவை ஆட்டோ பப்ளிஷ் செய்தாலும் திரட்டிகளில் நாமோ அல்லது வேறு யாரோ இணைத்தால் தான் இணையும். 


டுடே லொள்ளு 
எங்களுக்கும் கிருஸ்துமஸ் இருக்குப்பா 


நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

23 comments :

 1. புதிய பதிவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் பயன்படும் நண்பரே!

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே,

  இந்த வசதி முன்னமே தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்கு மற்றும் புதியவர்களுக்கு உதவியாய் இருக்கும்

  பகிர்வுக்கு நன்றி :)

  ReplyDelete
 3. பிளாக்கர் டிப்ஸ்க்கு நன்றி சசி.

  ReplyDelete
 4. எப்பா ..சசி கண்ணு..... இங்க வந்தா சத்தியமா டெம்ப்ளட் பின்நூட்டமாதான் போட வருது என்ன பண்றது. ஆமா உங்க வீட்டு பூனைக்கு மார்ச் மாசம்தான் க்ருஸ் மஸ் வருமா?

  ReplyDelete
 5. இதே போன்ற பதிவு நானும் ஏற்கனவே பதிவிட்டு இருக்கிறேன் நண்பரே...

  http://007sathish.blogspot.com/1980/01/blog-post.html

  ReplyDelete
 6. எனக்கு மி உதவியாக இருந்தது .
  மிகவும் நன்றி
  என்றென்றும் அன்புடன் ,
  சுகி ...

  ReplyDelete
 7. சசி.. கிறிஸ்துமஸ் முடிஞ்சிடுச்சே.. ஒரு வேளை பூனை நினைச்சுப்பாக்குதோ..?

  ReplyDelete
 8. Nalla uthavi payanulla thagaval

  ReplyDelete
 9. நன்றி தோழா அருமையான பதிவு பிரயோசனமாக அமைந்தது

  ReplyDelete
 10. சார் நான் adsense உபயோக்கிறேன் ..உங்கள தளத்தில் அட்சென்சே விளம்பரம் இல்லை ..நான் என்னுடைய ads ஐ ..publish .பண்ண விரும்புகிறேன் ..ஒரு banner ad and oru normal ad .. இதற்காக நான் மாதந்தோறும் உங்களுக்கு பணம் செலுத்த ரெடி ஆக உள்ளேன் .. உங்கள் reply ஐ எதிர்பார்கிறேன் . balanwindows@gmail.com

  ReplyDelete
 11. உபயோகமான தகவல்

  ReplyDelete
 12. பூனைக்கு விளக்கு அலங்காரம் செய்து அழகு பார்த்த(சசி)வள்ளலே நீவிர் வாழ்க! எனக்கு தெரியாததை தெரிந்து கொண்டேன் நண்பா!!

  ReplyDelete
 13. உண்மையில் எனக்கும் முயற்சிக்க ஆசை தான் அனால் திரட்டிகள் இணைப்பு தடங்கல் வரும் அல்லவா ?

  ReplyDelete
 14. சந்தேகம்..

  பழைய பதிவை இப்படி திகதியை மாற்றிக்காட்டினால் முன்னுக்கு வந்து பப்பிளிஸ் ஆகுமா ?

  ReplyDelete
 15. சகொதரம் இப்போ புளொக்கரை கவனித்திர்களா ? றிசென்ட் போஸ்ட், பொபுலர் போஸ்ட் என்பவற்றின் படங்கள் தெரிவதில்லை.. என்ன காரணமாக இருக்கலாம்...

  ReplyDelete
 16. ப்ளாகர்ஸ் அறிந்திருக்கவேண்டிய பதிவு. நன்றி!

  ReplyDelete
 17. dear brother,
  if u know how to add message box please share with as..its very useful to all.thank u for ur useful tips...
  saleem

  ReplyDelete
 18. நல்ல பயனுள்ள தகவல் நன்றி!

  ReplyDelete
 19. நல்ல பயனுள்ள தகவல் நன்றி!

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press