Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கணினியை கவனமாக பாதுகாக்க அவஸ்ட் இலவச ஆன்ட்டி வைரஸ் புதிய பதிப்பு- 6.0.1125

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் நம்முடைய கணினிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.  
இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகபடுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்த படுகிறது. இப்பொழுது இந்த ஆண்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்: 
  • அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது.
  •  கணினியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.
  • இணையத்தில் சில மால்வேர் பாதிக்க பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.
  • ஹார்டிஸ்கில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுத்து கொள்வதால் கணினியின் வேகம் குறைவதில்லை. 
  • வேகமாக பைல்களை ஸ்கேன் செய்ய கூடியது.
  • பைல் உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.
  • ஸ்க்ரீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.
  • கணினி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.
  • E-mail Scanner. மேலும் பல வசதிகள் இதில் அடங்கியுள்ளது ஆகவே இந்த மென்பொருளை கணினியில் நிறுவி உங்கள் கணினியை பாதுகாத்து கொள்ளுங்கள்.  



இன்ஸ்டால் செய்யும் முறை:
  • நீங்கள் இந்த ஆன்ட்டி வைரசை ஏற்க்கனவே உபயோகித்து கொண்டு இருந்தால் நீங்கள் சுலமாக இந்த அப்டேட் வெர்சனை நிறுவி கொள்ளலாம்.
  • முதலில் கீழே டாஸ்க்பாரில்  உள்ள அவஸ்ட் லோகோ மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Update என்பதை க்ளிக் செய்து பிறகு Program என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கணினியில் புதிய பதிப்பு இன்ஸ்டால் ஆகிவிடும்.

  • ஏற்க்கனவே இந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை உபயோகிக்காதவர்கள் இந்த லிங்கில் க்ளிக் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொண்டு உங்கள் கணினியில் உள்ள வைரஸ்களை நீக்கி தங்கள் கணினியை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.


டுடே லொள்ளு 

அய்யோ இன்னைக்கு வகையா மாட்டிகிச்சு ஒரு புடி புடிக்கவேண்டியது தான். 
ஏலே கண்ணு வைக்காதிங்கப்பா அந்த பக்கம் திரும்புங்க 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

11 comments :

  1. Post a comment - தேடி கண்டுபிடிச்சிட்டேன். :-))))))

    ReplyDelete
  2. ஆஹா...இது புதிய அண்டி வைரஸ் புரோகிராம் ஆக அல்லவா இருக்கிறது.

    பகிர்விற்கு நன்றிகள் சகோ.

    ReplyDelete
  3. நண்பா மீண்டும் ஒரு அவசியமான, தேவையான பதிவு! புக் மார்க் பண்ணிக்கறேன்! டுடே லொள்ளு சூப்பர் நண்பா! ரொம்ப நல்லா ஆடுறாரு!




    அப்புறம் நம்மளோட ப்ளாக் டிசைன் பண்ணும் போது உங்க ப்ளாக் க பயங்கரமா கிண்டி கிளறுவோம்!!



    ஒனிடா விளம்பரம் மாதிரி .....




    " உங்களைப் பார்த்தே டிசைன் செய்தோம்! "

    ReplyDelete
  4. இதைத்தான் பயன் படுத்த ஆரம்பித்திருக்கிறேன் ஒரு வாரம் முன்பிருந்து. நல்ல தகவல். பலருக்கும் பயனாகும்.

    ReplyDelete
  5. எல்லோருக்கும் பயனளிக்கும் இந்த ஆண்டி வைரஸ் புரோகிராமை நானும் பயன்படுத்தி பார்க்கிறேன். நன்றி சசி.

    ReplyDelete
  6. மாப்ள இந்த anti virus தான் நான் யூஸ் பண்றேன் தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  7. அருமையான தகவல்..
    தற்போது அடிக்கடி என் தளம் ஹாக் செய்யப்படுகிறது..


    எல்லோருக்கும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. நான் பயன்படுத்தி பார்த்ததில் உண்மையிலே இது சிறந்த மென்பொருள் தான் .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. பதிவிறக்கம் செய்துவிட்டேன், இனி இதனை தான் பயன்படுத்த போகிறேன். அடுத்த அப்டேட் வேர்சன் வரும் போது சொல்லுங்கள்..

    ReplyDelete
  10. வலைச்சரத்தில் தாங்கள் இட்ட கருத்துரைக்கு நன்றி.பதில் இட்டுள்ளேன் சென்று பாருங்கள்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press