Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கரில் தவறுதலாக டெலிட் செய்த வலைப்பூவை மீட்க -புதியவர்களுக்காக

இந்த பிளாக்கர் தளம் கடந்த இரண்டு நாட்களாக சரிவர இயங்காமல் இன்னைக்கு தான் வழக்கம் போல இயங்க ஆரம்பித்து இருக்கிறது. நம்முடைய எழுத்துக்களையும் சிந்தனைகளையும் உலகறிய செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பிளாக்கர் இணையதளம் நாம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். 

இந்த பிளாக்கர் தளம் இருப்பதாலே நம்மால் நம்முடைய கருத்துக்களை சுதந்திரமாகவும் நடுநிலைமையாக வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட பெரிதும் பயன்படுகிறது. இதுவே அடிக்கடி மக்கர் பண்ணா நாம யார தேடி போவதுன்னு ஒண்ணுமே புரியலப்பா. காசுகொடுத்து ஹாஸ்டிங் வாங்குற அளவுக்கு நம்ம கிட்ட பணமும் இல்ல. ஒருவேளை இந்த அரசாவது அனைத்து பதிவர்களுக்கும் இலவச ஹாஸ்டிங் வாங்கி கொடுத்தா புண்ணியமா போகும் ஹா ஹா ஹா...


நண்பர் ஒருவர் மெயிலில் தொடர்பு கொண்டு அவர் தவறுதலாக அவருடைய பிளாக்கை டெலிட் செய்து விட்டதாகவும் அதை எப்படி மறுபடியும் கொண்டு வருவது என்றும் கேட்டு இருந்தார். அவருக்கு அனுப்பிய மெயிலை சில மாற்றங்கள் செய்து கீழே பதிவாக போட்டு உள்ளேன் புதிய பதிவர்களுக்கு தேவைப்படும் என்று தெரியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள். 
 • இது சப்ப மேட்டருங்க சும்மா ஒரே நிமிஷத்துல மீண்டும் கொண்டு வந்துடலாம். 
 • உங்களுடைய பிளாக்கை டெலிட் செய்தாலும் அந்த பிளாக் முழுமையாக அழிந்து விடாது. டாஸ்போர்ட் பகுதியிலேயே குறிப்பிட்ட சில நாட்களுக்கு இருக்கும். 
 • ஆகவே அதை மறுபடியும் சுலபமாக கொண்டு வரலாம். 
 • முதலில் உங்கள் டாச்போர்ட் பகுதிக்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிளாக் இருந்தால் அங்கு காட்டி உள்ள Show All என்ற லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.
 • இந்த லிங்கை க்ளிக் செய்ததும் உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பிளாக்குகளும் வரும்.
 • அதற்க்கு கீழே நீங்கள் அழித்த பிளாக்கின் பக்கத்தில் Undelete this blog என்ற ஒரு லிங்க் காணப்படும். அந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.
 • இந்த லிங்க்கை அடுத்த கணமே உங்கள் பிளாக் திரும்பவும் செயல் பாட்டிற்கு வந்து விடும். 
 • இதை உறுதி படுத்த டாஸ்போர்டில் Your blog was successfully restored என்ற செய்தி வரும்.
 • அவ்வளவு தான் உங்கள் பிளாக் வழக்கம் போல வேலை செய்ய ஆரம்பித்து விடும் தாங்களும் இனி தொடர்ந்து உபயோகித்து கொள்ளலாம். 
டுடே லொள்ளு 

அய்ய பல்ல பார்ரா அவனுக்கு, என்ன தெனாவட்ல சிரிக்கிறான் அடுத்த ஆட்சி நாங்க வரும் போது உன்ன கவனிச்சிக்கிறோம். 

(மனசுல: இவனெல்லாம் என்ன பார்த்து சிரிக்கிறான் ஆனா நாம எப்ப வந்து, எப்ப ஜெயிச்சி, எப்ப உன்ன கவனிக்கறது )

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

 1. கண்டிப்பாக அனைத்து பிளாக்கர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்...

  நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி... புதியவர்கள் என்றில்லை தெரியாத எவருக்கும் உதவியானது தான்... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ////
  ஒருவேளை இந்த அரசாவது அனைத்து பதிவர்களுக்கும் இலவச ஹாஸ்டிங் வாங்கி கொடுத்தா புண்ணியமா போகும்/////


  விடுங்க சசி இதுசம்மந்தமா அம்மாவுக்கு ஒரு மனு போட்டுட்டா போச்சி...

  ReplyDelete
 4. //இந்த அரசாவது அனைத்து பதிவர்களுக்கும் இலவச ஹாஸ்டிங் வாங்கி கொடுத்தா புண்ணியமா போகும் ஹா ஹா ஹா...//

  சொந்த செலவுல சூனியம் வச்சுக்க சொல்றீங்க:)

  ReplyDelete
 5. பயனுள்ள தகவல் தந்ததற்கு நன்றி சசி..

  ReplyDelete
 6. சூப்பரா விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் . நானும் ப்ளாக்கர் வெளியிட என்ன செய்ய வேண்டும். தயுசெய்து விபரம் சொல்லவும். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  நன்றி பலகோடிகள்.

  சாய்ராம்

  ReplyDelete
 7. சூப்பரா விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் . நானும் ப்ளாக்கர் வெளியிட என்ன செய்ய வேண்டும். தயுசெய்து விபரம் சொல்லவும். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  நன்றி பலகோடிகள்.

  சாய்ராம்

  ReplyDelete
 8. பயனுள்ள விளக்கம் நன்றி ..

  ReplyDelete
 9. மிகவும் பயனுள்ளவை, நன்றி

  ReplyDelete
 10. பயனுள்ள பதிவு சகோ.

  நன்றிகள்.

  ReplyDelete
 11. நல்ல பகிர்வு ... என்னுடைய ப்ளாக் ஒன்று டெலிட் ஆகி 1 ஆண்டுகள் மேல் ஆகிறது நீங்கள் சொல்வது போல் எனது டாஷ்போர்டில் இல்லையே

  ReplyDelete
 12. பல நண்பர்களுக்கு இது வரப்பிரசாதம்

  ReplyDelete
 13. பகிர்வுக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 14. சசி.. 2 டவுட்ஸ்

  1. தமிழ்மணம் உங்களுதுல இணைய லேட் ஆகுதா? ( இண்ட்லில 27 ஓட்டு த ம 4 ஓட்டு)

  2. ட்விட்டர்ல பதிவு செஞ்ச யூசர் நேம்மை மாற்ற முடியுமா?

  ReplyDelete
 15. இப்போதைய சூழ்நிலையில் தேவையான பயனுள்ள பதிவு.

  ReplyDelete
 16. அருமையான தகவல்..நன்றி...

  http://zenguna.blogspot.com

  ReplyDelete
 17. சகோதரம் குகுல் ஏதோ பெரிய சிக்கலில் இருக்குது போல எமது ஊருக்கான புளொக்கில் எடிட் போஸ் ற்கு போக முடியல தடுக்கிறத அந்த கோட்டை கொண்டு போய் புளொக்கர் உதவு பக்கத்தில் கொடுத்தேன் அங்கே பலருக்கு இதே பிரச்சனை...

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press