Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

சுலபமாக உங்கள் கணினியின் விவரங்களை அறிய

கணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவும் மற்றும் பிடித்தவர்களுடன் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அரட்டை அடிக்கவும், பெரியவர்களுக்கு அலுவலக வேலைகளை சுலபமாக்குவதற்கு என்று எல்லோருக்கும் தற்பொழுது கணினி ஒரு முக்கிய பொருளாகி விட்டது. கணினி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணினியின் சில அடிப்படை விஷயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும்.  
ஆகவே நம் கணினி பழுதானால் சர்வீஸ் இன்ஜினியர் என்ன சொன்னாலும் அதுக்கு தலையை ஆட்டிவிட்டு அவன் கேட்கிற தொகையை கொடுத்துடுவோம். அவனும் இது தாண்டா சேன்ஸ் என்று நெனச்சி இஸ்டதிர்க்கும் ஏதாவது பொய் சொல்லி காசை கறந்து விடுவான். ஆகவே இன்றைய சூழ்நிலையில் கணினியை பற்றி சில அடிப்படை விஷயங்களையாவது தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இவைகளை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சுலபமாக அறிந்து கொள்ள ஒரு சூப்பர் இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருளினால் கணினியை பற்றி அதிக தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம். 
  • இந்த மென்பொருளில் உள்ள இன்னொரு வசதி இந்த விவரங்களை Picture, HTML பைல்களாக உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.
  • பிரிண்ட் எடுத்தல், ஈமெயில் அனுப்புதல் போன்ற முக்கியமான வசதிகளும் இதில் உள்ளது.
  • இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக இயக்கலாம்.
  • இதில் நம்முடைய கீபோர்டில் Numlock, Capslock, Scroll Lock போன்ற கீகள் செயலில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியும். 
  • இந்த மென்பொருள் 1.04MB அளவே உடைய ஒரு இலவச மென்பொருளாகும்.
உபயோகிக்கும் முறை:
  • இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று SimpleSys Info 2.8 உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • டவுன்லோட் முடிந்ததும் இந்த மென்பொருளை நேரடியாக இயக்குங்கள். 
  • உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் வரும். 
  • அந்த விண்டோவில் சுமார் 10 க்கும் டேப்கள் இருக்கும் அதில் ஒவ்வொன்றாக க்ளிக் செய்து உங்களுடைய கணினியின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
டுடே லொள்ளு 

பதிவ படிச்சு முடிச்சுடீங்களா அப்ப எல்லோரும் வரிசைல வந்து ஆளுக்கொரு ஊசி போட்டுக்கோங்க, ஓசியிலேயே படிச்சுட்டு போகலாம்னு நெனச்சீங்களா... ஹா ஹா ஹா 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

29 comments :

  1. வழக்கம் போலவே மிகவும் பெறுமதியான பதிவொன்றை போட்டுள்ளீர்கள் சசி! மிக்க நன்றி!

    ReplyDelete
  2. haa haa ஹா ஹா நோ ஓசி.. ஓட்டும் கமெண்ட்டும் போடறமே சசி?

    ReplyDelete
  3. பதிவ படிச்சு முடிச்சுடீங்களா அப்ப எல்லோரும் வரிசைல வந்து ஆளுக்கொரு ஊசி போட்டுக்கோங்க, ஓசியிலேயே படிச்சுட்டு போகலாம்னு நெனச்சீங்களா... ஹா ஹா ஹா ///

    ஐயையோ ஊசி போட்டா வலிக்குமே! ஏதாவது டாபிலேட் இருந்தா குடுங்க! குடிச்சுட்டு போயிடுறேன்!! ஹி.....ஹி.....!!!

    ReplyDelete
  4. சின்ன சின்ன விஷயங்களைக்கூட தெரியாமல் இருந்தேன் தங்கள் பதிவுகளை படிக்க படிக்க கணினிப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன்...

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. சசி..

    ReplyDelete
  5. திடீர் நண்பர்களை நம்பி, எம்மைப் போன்ற பழைய நண்பர்களை இழக்க வேண்டாம் சசி! நாங்கள் எப்போதும் உங்களுடனேயே இருப்போம்!

    ReplyDelete
  6. மிகவும் பயனுள்ள செய்தி நண்பா

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  10. மீண்டும் ஒரு பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல்.

    பகிர்வுக்கு நன்றி சசி!

    ReplyDelete
  12. ஓட்டும் போட்டாச்சு..தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  13. நன்றி
    சார்லஸ்

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி... //டுடே லொள்ளு (படம் வரவில்லை)

    பதிவ படிச்சு முடிச்சுடீங்களா அப்ப எல்லோரும் வரிசைல வந்து ஆளுக்கொரு ஊசி போட்டுக்கோங்க, ஓசியிலேயே படிச்சுட்டு போகலாம்னு நெனச்சீங்களா... ஹா ஹா ஹா // சசி உங்கள் பதிவுகளை புத்தகமாக வெளியிடுகள்... காசு கொடுத்து படிக்க நான் ரெடியாக இருக்கேன்

    ReplyDelete
  15. நல்ல தகவலுக்கு நன்றி ...

    ReplyDelete
  16. பதிவிறக்கம் செய்து பார்த்து பின் வருகிறேன்.

    ReplyDelete
  17. நல்ல தகவல் நண்பரே...

    ReplyDelete
  18. பதிவுக்கும் நன்றி... ஊசிக்கும் நன்றி...ஆண்டி வைரஸ் ஊசி?

    ReplyDelete
  19. ஆகா நல்ல பதிவு

    ReplyDelete
  20. பதிவுக்கும் நன்றி

    ReplyDelete
  21. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  22. இந்தப் பதிவு நேற்றைய தினத்தந்தி கணிணி மலரில் வந்துள்ளது சில மாற்றத்துடன். போன வாரம் என்னுடைய பதிவு அப்படியே வந்துள்ளது. பெயர் குறிப்பிடாமல் போட்டுள்ளார்கள். அனுமதி கேட்காமல் செயல்படும் இவர்களை என்ன செய்யலாம்?

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press