Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஆபாச பதிவு எழுதுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

அதிகாரவர்க்கம் மட்டுமே ஆட்கொண்டுள்ள நம் நாட்டில் நம் கருத்துக்களை அதிகாரமாக கூற கூட இங்கு வழியில்லை. அப்படியே நாம் கூறினாலும் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்தால் தான் நாம் பேசும் இடத்திலாவது உட்காரும் மனநிலமைக்கு நம் மக்கள் வந்துள்ளனர். இந்த நிலையில் நம் கருத்துக்களை எந்த வித தங்கு தடையின்றி குறிப்பாக எந்த மூலதனமும் செய்யாமல் வெளியிட உதவும் மிகப்பெரிய சேவையை இந்த பிளாக்கர் தளம் நமக்கு வழங்கி உள்ளது. ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பாமரன் கூட தன்னுடைய கருத்தை கூறினால் அதையும் படிக்க நான்கு பேர் இந்த இணையத்தில் உள்ளனர் என நினைப்பதில் சந்தோசமாகவே உள்ளது. ஆனால்  இந்த பிளாக்கர் வசதியை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா.

நீங்களே நினைத்து பாருங்கள் இது போன்ற வசதிகள் நமக்கு இல்லையென்றால் தங்கள் கருத்தை எப்படி வெளிப்படுத்தி இருக்க முடியும்.யாராவது கேட்டிருப்பார்களா அனால் இந்த பதிவுலகத்தில் நீங்கள் இங்கு பதிவு போட்ட அடுத்த வினாடியே உலகம் முழுவதும் உங்கள் பதிவுகளை பார்க்கிறார்கள் நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள் அனைவரிடமும் பரவுகிறது. இது போன்ற அற்புத வசதியை நாம் ஒழுங்காக பயன்படுத்துகிறோமா. இந்த பொன்னான வசதியை நாம் வீணடித்து கொண்டே இருக்கிறோம் என நான் நினைக்கிறேன். உண்மையும் அது தான். 

ஏதேதோ பதிவு எழுதுகிறார்கள் அதையெல்லாம் விட்டு இந்த ஆபாச பதிவர்களை மட்டுமே ஏன் எச்சரிக்கை செய்கின்றேன் என்றால் அடுத்த உலகை ஆளப்போகும் இளைஞர்களில் பாதிக்குமேல் வழிதவறி செல்ல முக்கிய காரணமாக உள்ளது இந்த ஆபாசம் தான். டிவிக்களிலும் செய்திதாள்களிலும் போடறாங்க அவங்களையெல்லாம் கேட்கல நம்பள மட்டும் கேட்க்க வந்துட்டாரு பெரிய பு..... மாதிரி அப்படின்னும் நம்ம நண்பர்கள் ஒரு எதிர்கேள்வி கேட்பாங்க அவுங்களுக்கு என்னுடைய ஒரு எதிர்கேள்வி.


டிவிக்காரன், பத்திரிக்கை காரர்களே திருந்தவே மாட்டிங்களே என்று நாம்மால ஒரு கேள்வி கேட்க முடியுமா அப்படியே கேட்டால் அவர்களின் ஒரே பதில் நீங்கள் என்ன யோக்கியமா உங்களில் எத்தனை பேர் இந்த ஆபாசத்தை எழுதுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா என்று நம்மையே திருப்பி கேள்வி கேட்பார்கள். நம்மில் ஒருவர் தப்பு செய்தாலும் அந்த பழி மொத்த பதிவுலகத்தையே சாரும். எனக்குள் உள்ள ஒரு கேள்வி இந்த மீடியாக்கலாவது பெரிய முதலீடு பண்ணி இருப்பதால் அவர்களின் வருமானத்தை பெருக்கி கொள்ள இது போன்ற செயல்களில் ஈடு படுகிறார்கள். ஆனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் நம் பதிவர்கள் ஏன் இது போன்று எழுதுகிறார்கள் ஹிட்ஸ் காகவா கேவலம் இந்த ஹிட்ஸ் வாங்குவதால் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆங்கிலத்தில் எழுதினாலும் கூகுள் அட்சென்ஸ் மூலமாவது ஒருதொகை கிடைத்திருக்கும் தமிழில் எழுதுவதால் கேவலம் இதுக்கு கூட தகுதி அற்றவர்களாக நம்மை ஒதுக்கி வைத்துள்ளார்கள் அப்படி இருந்தும் நம்மில் பெரும்பாலானோர் நம் சமூகம் கெட்டுபோக நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்பதை  யோசிக்காமல் இது போன்ற பதிவுகளை எழுதுகிறார்களா என நினைக்க தோன்றுகிறது.

இவரு மட்டும் பெரிய பு........., பெரிய சமூக விழிப்புணர்வு பதிவா போடுறாரு கேவலம் ஆங்கில தளத்துல இருந்து காப்பி அடிச்சி செய்திய என்னவோ இவரே கண்டு புடிச்ச மாதிரி போட்டுக்கிட்டு நம்மள குறை சொல்ல வந்துட்டாரு. நம்மாளுங்க இப்படியல்ல இதுக்கு அதிகமாகவே அசிங்கமாகவும் என்னை திட்டலாம் காரணம் நமக்கு தான் ஏதாவது நம்ம பத்தி உண்மைய சொன்னாலே அப்படியே கால்ல இருந்து தலை வரை பத்திகிட்டு எரியுமே.  அவங்ககளுக்கான என் பதில் என்னால் என் நெஞ்சை நிமித்தி சொல்ல முடியும் என் எழுத்தால்  என் சமூகத்தில் ஒருவர் கூட பாதிப்படைய வில்லை, என்று உங்களால் கூற முடியுமா? 

நான் ஒருத்தன்  மட்டும் திருந்தினால் இந்த ஒட்டுமொத நாடும் திருந்தி விடுமா என்று என நீங்கள் நினைத்தால் முதலில் நம்மை திருத்தி கொண்டால் தான் மற்றவர்களை திருத்தும் தகுதி நமக்கு உண்டாகிறது. ஒரு இளைஞன் திருந்தினால் அவன் ஒருவனுக்கு மட்டும் தான் பயன் ஆனால் ஒரு பதிவர் திருந்தினால் குறைந்தது பத்து இளைஞர்களை திருத்தும் சக்தி அவரின் எழுத்துக்களுக்கு உண்டு என்பதை யாரும் மறக்க வேண்டாம். 

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம் இவ்வளவு சொன்ன பிறகும்  பிளாக்குகளில் செக்ஸ் பற்றியோ ஆபாசமாகவோ எழுதக்கூடாதா. இயற்க்கை நமக்கு வழங்கி உள்ள அற்ப்புத உணர்வு செக்ஸ் அதை பற்றி எழுதக்கூடாதா என்று சில கேள்வி மனதில் தோன்றினால் என்னுடைய பதில் நீங்கள் உங்கள் விருப்பம் போல எழுதிகொள்ளுங்கள் என்பதாகும் (இவ்வளவு கூறிய பிறகும் இவனுங்க எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன என்று நீங்கள் கூறும் போது உங்களை ஒன்னும் பண்ண முடியாது) ஆனால் அப்படி எழுதும் போது  உங்கள் பிளாக்குகளுக்கு நீங்கள் Adult Content Warning என்ற வசதியை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். அந்த வசதி இருப்பது எங்களுக்கு தெரியாது, வசதி இருப்பது தெரியும் ஆனால் எப்படி அதை வைப்பது என தெரியாது என்று ஏதாவது சப்பை கட்டு கட்டுபவர்களுக்கு உங்கள் பிளாக்கில் DASSBOARD - SETTINGS - ADULT CONDENT - YES கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

இதையும் மீறி நாங்களெலாம் தலைப்பிற்கு 18+ போடுகிறோமே அப்புறம் ஏன் அந்த பதிவை படிக்க வருகிறார்கள் என முட்டாள் தனமான கேள்வி உங்கள் மனதில் தோன்றினால் நீங்கள் போடும் பதிவு என் ஒருவனுக்கு மட்டும் பிரச்சினையல்ல என்னுடைய ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் பிரச்சினை என்பதை உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன்.(எத்தனையோ மொழிகளில் பதிவுகள் வெளிவந்தாலும் தலைப்பில் 18+ என்று ஒன்றை கண்டறிந்தது தமிழ் பதிவர்களாக தான் இருக்கும் என நினைக்கிறேன்)
நான் அப்படி தான் எழுதுவேன் உன்னால என்ன பண்ண முடியும்:

இவ்வளவு கத்திய பிறகும் நீங்கள் இவற்றில் எதையும் கடைபிடிக்க வில்லை என்றால் அவர்களுக்கான என் எச்சரிக்கை உங்கள் பிளாக்கை பற்றி திரட்டிகள், பிளாக்கர், கூகுள் தளங்களில் புகார் கூறினால் உங்கள் நிலைமை என்னவாக இருக்கும். திரட்டிகளும், பிளாக்கர் மற்றும் கூகுள் தளங்கள் ஒரு போதும் இந்த தளங்களை அனுமதிப்பதில்லை. பிளாக்கர் தளத்தில் புகார் செய்தால் அது உங்கள் பிளாக்கை செயல் இழக்க வைக்கலாம். கூகுள் உங்கள் தளத்தை சாதாரணமாக தேடலின் போது உங்கள் தளத்தை தடை செய்யும். ஆபாச சம்பந்தமாக தேடும் போது மட்டுமே உங்கள் பிளாக் வர வாய்ப்பு இருக்கலாம். மற்றும் திரட்டிகளும் ஒருபோதும் இந்த தளங்களை அனுமதிப்பதில்லை என்று அவர்களின் விதிமுறைகளில் கூறி உள்ளனர்.


(நண்பர்களே மேலே உள்ள அனைத்தையும் விடுங்கள் உங்கள் வீடுகளில் உங்கள் தம்பியோ,தங்கைகளோ இது போன்று ஆபாச பதிவுகளை படிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா என்பதை மனச்சாட்சியோடு யோசித்து பாருங்கள், மற்றவர்களையும் நம் தம்பி, தங்கைகள் போல பாவித்து இது போன்ற பதிவுகளை இனி தயவு செய்து எழுத வேண்டாம் என்று உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்).

டிஸ்கி- இதுவரை நான்கு பதிவர்களை குறித்து வைத்துள்ளேன் இனியும் அவர்கள் தங்களை மாற்றி கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக நான் மட்டுமல்ல என்னோடு கைகோர்க்கும் அனைவரும் சேர்ந்து திரட்டிகள்,பிளாக்கர்,கூகுள் போன்ற தளங்களுக்கு புகார் அனுப்புவோம் என்பதை மன வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

83 comments :

 1. எல்லாம் ஹிட்டுக்காகத்தான் தம்பி.. அந்த மாதிரி வலைப்பக்கங்களில்தான் மக்கள் மொய்க்கிறார்கள்...

  ReplyDelete
 2. கட்டுரையின் கடைசி நாலு வரிகள்தான் ஹய்-லைட் சசி!
  பிளாக் எழுதிவிட்டால் ஏதோ தேவ லோகத்தில் இருப்பது போல ஒரு தவறான உணர்வுடன் சிலர் நடந்துகொள்வதை எளிதில் இங்கு உணரலாம்.

  ReplyDelete
 3. தங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பா...

  உண்மைதான் மக்களும் இது போன்ற தளங்களைத்தான் அதிகம் நாடிச்செல்கிறார்கள்.. இதைகண்டிப்பாக மாற்றியக வேண்டும்..
  இதுபோன்ற தளங்கள் குறைந்தால் கண்டிப்பாக படிப்பவர்களும் மாறிக் கொள்வார்கள்.

  ReplyDelete
 4. கூகுள் ஆண்டவர் புண்ணியத்தில் தம்முடைய கருத்தை படைப்புகளை பகிர்ந்துக் கொள்ள ஒரு வழிக்கிடைத்துள்ளது.. இதை நல்வழியில் பயன்படுத்தினால் எல்லாம் நன்றாக அமையும்...

  ReplyDelete
 5. வாக்குகளோடு இப்போது வருகிறேன், பின்னூட்டங்களோடு பின்னாடி வாறேன்!

  ReplyDelete
 6. உங்கள் கருத்துக்கு +1

  ReplyDelete
 7. என்னுடைய கவிதைகளை தொகுத்து இரண்டு புத்தகமாக வெளியிட்டேன் அவை அதிகபட்சமான இரண்டு மூன்று மாவட்டங்கள் மட்டுமே பயணித்தது ஆனால் இந்த பிளாக்குகள் இருப்பதால் என் எழுத்துக்கள் உலகம் முழுவதும் சென்றுள்ளது...

  ஆகையால் நன்றாக சிந்திப்போம்.. நல்லதையே யோசிப்போம் பின்பு அவையே எல்லாமாகிவிடும்...

  நன்றி..

  ReplyDelete
 8. எழுதியுள்ளீர்கள் சசி! மிகவும் வரவேற்கப்படவேண்டிய விஷயம்! ஓவராகவும், கொச்சையாகவும், வெளிப்படையாகவும் எழுதாமல், ரசிக்கும்படி, அளவோடு, எழுதினால் தப்பில்லை என்று நினைக்கிறேன்!

  ReplyDelete
 9. உங்களுக்குள்ள சமுக அக்கறை அனைவருக்கும் வர வேண்டும்.

  ReplyDelete
 10. நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் நான்கு பதிவா்களையும் தெரிஞ்சுக்கலாமா?

  ReplyDelete
 11. பொது சபை என்பதால் தெரிவிப்பது நாகரிகமாக இருக்காது.

  ReplyDelete
 12. வணக்கம் சசிகுமார் சார்,

  நிச்சயம் இதுபோன்ற வலை எழுத்தாளர்களை தடுக்க வேண்டும் ..

  நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் நியாயமானவை ..

  நிச்சயம் நாங்கள் உங்களை பின் தொடர்வோம்

  நன்றி

  சிவ.சி.மா.ஜானகிராமன்
  http://sivaayasivaa.blogspot.com

  ReplyDelete
 13. இந்த விஷயத்துல நான் உங்களுக்கு முழு சப்போர்ட் ...

  ReplyDelete
 14. துணிவாக எடுத்து சொன்னதுக்கு நன்றி..

  ஆபாச படமோ ஆபாச எழுத்தோ செய்பவர்கள் தன் குடும்பத்து பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ள தயங்காதவர்கள்தான் ...

  அடுத்த வீட்டு பெண்ணை ஆபாசமா பார்க்கும் எவனும் தன் வீட்டு பெண்ணைத்தான் அவமானப்படுத்துகிறான். அனுமதிக்கிறான் அதே போல் ஆபாசமாக பார்க்க..

  இதே தான் சினிமா எடுப்பவரும்..நடிகை ஆடையை குறைத்து படம் பிடிப்பவரும் அங்கே தன் தாயை, மனைவியை , மகளையே அப்படி செய்கிறார்..

  அப்ப அந்த நடிகை படத்தை தன் தளத்தில் போடுபவர்..?. அதேதான்.. தன் குடும்பத்து பெண்கள் படத்தையே போடுறார்..தன் குடும்பத்து பெண்களையும் ஆபாசமாகவே பார்ப்பார் .

  இவர்கள் அனைவரும்தான் கோவை மோகராஜ்களை உருவாக்குகின்றனர் என்பதில் ஏதும் ஐயமுண்டா என்ன?..

  ஆனால் பாலியல் தொழிலாளி மீது பரிதாப்படுறீங்களே னு கேட்டால், ஆம் ..ஆனால் பாலியல் தொழிலுக்கு அனுப்பும் இத்தகையோர் மீதல்ல..

  சரிதானே?..

  ( திருந்திடுவாங்களா ?.. அது தேவையில்லை.. நாம் சொல்லவேண்டியது கடமை )

  ReplyDelete
 15. அந்த நபர்களின் பெயர்களை வெளியிடுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

  ReplyDelete
 16. திருந்துவாங்களா பார்க்கலாம்...உங்கள் பதிவுக்கு சல்யூட்

  ReplyDelete
 17. //உங்கள் பதிவுகளை பார்க்கிறார்கள் நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள் அனைவரிடமும் பரவுகிறது. இது போன்ற அற்புத வசதியை நாம் ஒழுங்காக பயன்படுத்துகிறோமா. இந்த பொன்னான வசதியை நாம் வீணடித்து கொண்டே இருக்கிறோம் என நான் நினைக்கிறேன். உண்மையும் அது தான்.///

  உண்மைதான் நண்பரே,
  எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கும்போது ஏன் ஆபாசமாகவும் அருவெறுப்பாக்வும் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை...

  உங்கள் கருத்துக்களை தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள்.... பார்க்கலாம் திருந்துவார்களா என்று?

  ReplyDelete
 18. கைகோர்ப்போம் ஆபாச பதிவர்களையும்,அறுவெறுப்பாக எழுதுபவர்களையும் தடை செய்வோம்

  ReplyDelete
 19. வந்தேமாதரத்திலிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவேயில்லை சசி! அருமை.. ! நல்ல சமூக அக்கறையோடு, இளைஞர்களின் எதிர்காலத்தை எண்ணி சிறப்பாக பதிவிட்டிருக்கிறீர்கள்.. வாழ்க.. வளர்க. !

  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சசி!

  ReplyDelete
 20. வணக்கம் சசி அவர்களே!

  ஆபாசமாக எழுதும் பதிவர்களை கண்டிப்பாக தடைசெய்ய வேண்டும்.
  அதில் யாருக்கும் எந்த முரண்பாடும் இருக்க கூடாது , இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்திருக்கும் முயற்சியை ஏனைய பதிவர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்.

  ஆனால்,இந்த விஷயத்தை கை எடுத்து போராடும் தகுதி உங்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. இது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது.
  ஆபாசமாக எழுதும் பதிவர்களை இனம் கண்டு பிடித்த நீங்கள் பதிவுகளுக்கு இடையே ஆபாச கருத்துக்கள், கவர்ச்சிப்படங்களை காட்டும் பிரபல பதிவர்களின் பதிவிற்கு சென்று நல்லாயிருக்கு என கூறி பல்லளிப்பதும், பின்னூட்டத்தில் ஆபாசமாக பேசுவோரின் பதிவுகளில் பின்னூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்வதும் மட்டும் நியாயம் என்று கருதீர்களா?

  ஆபாசமாக என்பது ஒரு வகை தீங்கு என்பது மாதிரி வேறு எந்த வகையிலும் பதிவு கலாச்சார சீர்கேட்டினையும் நீங்கள் தட்டி கேட்பவராக இருக்கவேண்டும்.

  இதுவரை நீங்கள் நடுநிலையாக ஒரு பதிவையாவது படித்து பார்த்து விமர்ச்சனம் செய்தது உண்டா?
  நீங்கள் நடுநிலையோடு அனைத்து விஷயங்களையும் பார்ப்பது என்ற எண்ணம் இருந்தால் மட்டும் இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஏனைய பதிவர்களின் ஆதரவு கிடைக்கும்.

  இல்லையெனில், மற்ற பதிவர்கள் இந்த மாதிரியான எண்ணங்களை பிரதிபலிக்கும் போது 'ஹிட்ஸ்'க்காக எழுதிகிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வருவது போல உங்களின் பதிவையும் ஒதுக்கி தள்ளுவர்.

  ReplyDelete
 21. நல்லது.சமூக அக்கறைக் கொண்டப் பதிவு.அதற்கு என் உதவியும் உண்டு

  ReplyDelete
 22. மிகவும் அருமையான ஒரு பதிவு, என்ன இதை யாரும் பொருட்படுத்த போவதில்லை, நீங்க அவிங்க வீட்டு பெண்கள் விபசாரம் செய்கிறார்கள் என்று சொன்னால் கூட ஒ அப்படியா ஒரு நைட்டுக்கு என்ன ரேட்டுன்னு கேட்பாங்கா.......................இன்னும் கொஞ்சம் மண்டையில உறைகிற மாதிரி சொல்லுங்கள். அதுலேயம் ஒருத்தன் இருக்கான் தன்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிக்கிட்டு.....................அது யாருன்னு உங்களுக்கே தெரியும். அந்த மூதேவி 18 + இல்லாமல் அவருடைய வாரந்திரத்தை போடவே மாட்டாரு.................

  ReplyDelete
 23. விழிப்புணர்வு தரும் சமூக அக்கறைக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 24. சசிகுமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  மாப்ள நீ அவுங்களுக்கு ஆதரவா பேசறியா இல்ல .........
  May 9, 2011 1:00 PM
  ====================================
  இன்று இப்படி ஒரு பின்னூட்டம் நீங்கள் போட்ட பதிவில் பெண்கள் அமர்ந்து இருக்கிறார்களே! அது ஆபாசமாக இல்லையா? பின்னூட்டத்தில் கண்டித்து இருக்கலாமே!நீங்கள் போட்ட்டுள்ள பதிவிற்கும், பின்னூட்டம் இட்டுள்ள விதமும் எதிர்மறையாக உள்ளது. உங்களை எந்த கணக்கில் வைத்துக்கொள்வது? போராடுவது தவறு அல்ல அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
 25. @விமர்சனம்

  நண்பரே எதுவும் எல்லை மீறும் போது தான் அதன் விபரீதம் தெரிகிறது. எனக்கு தான் தகுதி இல்லை அட நீங்களாவது போட்டு இருக்கலாமே. யாராவது ஆரம்பிதே ஆகவேண்டும் நண்பா. இங்கு நீங்கள் என்னை குறை கூறும் நோக்கில் ஆபாசத்தை மறைமுகமாக ஆதரிக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். அனைவரின் கையும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இவைகளை தடுக்க முடியும். அப்படி இல்லாமல் நமக்குள்ளே எதிர்கருத்து இருந்தால் அது கூட்டாளிகளுக்கு தான் கொண்டாட்டம்.

  ReplyDelete
 26. நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிங்க... பல நல்ல நண்பர்களின் வலைப்பூக்களிலும் இப்ப இதனை போல் பதிவுகள் வருகிறது... அங்கு போய் பல நேரங்களில் பதில் போடமுடியாமல் திருப்பிருக்கேன்..

  இந்த பகிர்வை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சசி!

  ReplyDelete
 27. உங்கள் முயற்சிகள் பலிக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

  ReplyDelete
 29. ரொம்ப சரியா சொன்னிங்க தல, இந்த மாதிரி ஆளுக சமூக புற்று நோய்கள், இவர்களுக்கு துந்த படம் கற்பிக்க வேண்டும், அப்பத்தான் மற்றவர்கள் திருந்துவார்கள்

  ReplyDelete
 30. உங்கள் தைரியத்துக்கு ஒரு சபாஷ்.

  உண்மையிலே இது காலத்தின் கட்டாயம்.உங்களுடன் கைகோர்ப்பதில் பெருமைப்படுகின்றேன்.

  இது வெறும் வார்த்தையாக மட்டும் நின்றுவிடாமல் செயற்படுத்தப் படவும் வேண்டும்.

  ReplyDelete
 31. சரியான நேரத்தில் வெகுண்டெழுந்துள்ளீர்கள்.

  வலைப்பூக்களின் தரம் உயர் வேண்டும் என்பதற்காக குரல் அதிக அளவில் கேட்க தொடங்கியுள்ளது நல்ல அறிகுறியே. மற்றம் வரும் என்று நம்புவோம்.

  உங்களுக்கு துணை நிற்க ரோஜாப்பூந்தோட்டம் உறுதி பூணுகிறது.

  ReplyDelete
 32. உங்கள் வலைப்பூவில் உள்ள சில விளம்பரங்களை நீக்கினால் நன்றாக இருக்கும். இந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிடுங்கள்

  ReplyDelete
 33. ஒரு சமூக அக்கறை உள்ள பதிவு,
  வாழ்த்துக்கள் நண்பா ..

  ReplyDelete
 34. rombha nyayamaana thevayaana padhivu nandri

  ReplyDelete
 35. நல்ல விஷயத்தை சொல்லி இருக்கீங்க.

  இத்தனை பதிவர்கள் இருந்தும் யாருமே எதிர்கேள்வி கேட்கவில்லை.தாங்கள்
  தைரியமாக வெளியீட்டமைக்கு பாராட்டுக்கள். நானும் பெண் எழுத்து பதிவில் இதைப்பற்றி
  எழுதியிருந்தேன்.


  நாம் தவறை சுட்டிக்காட்டவில்லை என்றால்,இன்னும் அதிகமாக
  எழுதுவார்கள்.


  உங்கள் வலைப்பூவில் சில
  விளம்பரங்களை நீக்கவும்.

  ReplyDelete
 36. அவசியமான விழிப்புணர்வுமிக்க பதிவு நண்பரே..!! தங்கள் சேவை தொடரட்டும். பாராட்டுகள் தலைவா.

  ReplyDelete
 37. தங்களது வலைப்பூ IE 8ல் ஆப்ரேசன் அபார்டட் என எரர் வந்து //What you can try: Diagnose Connection Problems // இதுபோன்று வருகிறது நண்பரே..!! அதனால் கடந்த சில நாட்களாக தங்களது வலைப்பக்கம் வரமுடியவில்லை. தங்போது மொசில்லா ஃபயர்பாக்சில் படிக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 38. நண்பர் சசிகுமார்!

  இதில் பிரச்சினை என்னனா "அடல்ட் காண்டெண்ட்" வார்னிங் கொடுத்தால் அதை தமிழ்மணம் போல திரட்டிகள் திரட்டாதுனு நெனைக்கிறேன். அதனாலதான் 18 பிளஸ் வார்னிங் கொடுக்கிறாங்க. தமிழ்மணம் ஓரளவுக்கு சகித்துக்கொள்கிறார்ர்கள் அதற்கு காரணம்: "ஆபாசம்" என்பதை யாரும் தெளிவாக வரையுறுக்க முடியாது! ஒருவருக்கு காதல் ஆபாசம், ஒருவருக்கு கவர்ச்சி ஆபாசம், இன்னொருவருக்கு காமம் ஆபாசம். ஒரு சிலருக்கு எதுமே ஆபாசமா தெரிவதில்லை!

  Who is going to define what is "aabaasham"?

  ReplyDelete
 39. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 40. நண்பரே இந்த கமென்ட் மிகவும் கொச்சையாக இருந்ததால் நீக்கி விட்டேன். நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை நான் மேலே பதிவிலேயே கொடுத்துள்ளேன் அதை உங்கள் பார்வைக்கு.


  //டிவிக்காரன், பத்திரிக்கை காரர்களே திருந்தவே மாட்டிங்களே என்று நாம்மால ஒரு கேள்வி கேட்க முடியுமா அப்படியே கேட்டால் அவர்களின் ஒரே பதில் நீங்கள் என்ன யோக்கியமா உங்களில் எத்தனை பேர் இந்த ஆபாசத்தை எழுதுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா என்று நம்மையே திருப்பி கேள்வி கேட்பார்கள். நம்மில் ஒருவர் தப்பு செய்தாலும் அந்த பழி மொத்த பதிவுலகத்தையே சாரும். எனக்குள் உள்ள ஒரு கேள்வி இந்த மீடியாக்கலாவது பெரிய முதலீடு பண்ணி இருப்பதால் அவர்களின் வருமானத்தை பெருக்கி கொள்ள இது போன்ற செயல்களில் ஈடு படுகிறார்கள். ஆனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் நம் பதிவர்கள் ஏன் இது போன்று எழுதுகிறார்கள் ஹிட்ஸ் காகவா கேவலம் இந்த ஹிட்ஸ் வாங்குவதால் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆங்கிலத்தில் எழுதினாலும் கூகுள் அட்சென்ஸ் மூலமாவது ஒருதொகை கிடைத்திருக்கும் தமிழில் எழுதுவதால் கேவலம் இதுக்கு கூட தகுதி அற்றவர்களாக நம்மை ஒதுக்கி வைத்துள்ளார்கள் அப்படி இருந்தும் நம்மில் பெரும்பாலானோர் நம் சமூகம் கெட்டுபோக நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்பதை யோசிக்காமல் இது போன்ற பதிவுகளை எழுதுகிறார்களா என நினைக்க தோன்றுகிறது.//

  ReplyDelete
 41. Dear Sasikumar!

  Now you made my comment as inappropriate! That is fine.

  நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கலாமே? மறுபடியும் கேக்கிறேன்.

  டாக்டர் ஷாலினியின் கட்டுரைகள் "அடல்ட் காண்டெண்ட்" வார்னிங் கொடுக்கனுமா இல்லை வேண்டியதில்லையா?

  இதில் ஆபாசம் எதுவுமில்லை. அதனால இதையும் டெலீட் செய்றாதீங்க! நன்றி :)

  ReplyDelete
 42. இனிய பிறந்த நாள் வாழ்ததுக்கள் சசி...
  http://vazthalamvanga.blogspot.com/2011/05/blog-post_08.html

  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 43. @வருண்

  நண்பரே செக்ஸ் என்பது இயற்க்கை அனைவருக்கும் அளித்துள்ள ஒரு உணர்வு. மருத்துவர்கள் அவர்கள் படித்ததை வைத்து வாசகர்களுக்கு சந்தேகத்தை தீர்த்து வைக்கிறார்கள் இது எப்படி குற்றமாகும் இது அவர்களின் தொழில் மருத்துவர்கள் அவர்களின் கடமையை தான் செய்கின்றனர் ஆனால் மருத்துவர்களையும் இவர்களையும் நீங்கள் ஒப்பிட்டு பேசுவது தான் எனக்கு வியப்பாக உள்ளது.

  ReplyDelete
 44. யப்பா தூங்க போறேன் எதுனா சொல்றதா இருந்தா சொல்லிட்டு போங்க காலைல வந்து பதில் சொல்றேன் நண்பா.

  ReplyDelete
 45. ***சசிகுமார் said...

  @வருண்

  நண்பரே செக்ஸ் என்பது இயற்க்கை அனைவருக்கும் அளித்துள்ள ஒரு உணர்வு. மருத்துவர்கள் அவர்கள் படித்ததை வைத்து வாசகர்களுக்கு சந்தேகத்தை தீர்த்து வைக்கிறார்கள் இது எப்படி குற்றமாகும்****

  ஓ அப்படியா? சிறுவர் சிறுமியர்களும் மருத்துவர் கொடுக்கும் செக்ஸ் அறிவுரையை கேட்கலாமா? அதில் தப்பு இல்லையா?


  ***இது அவர்களின் தொழில் மருத்துவர்கள் அவர்களின் கடமையை தான் செய்கின்றனர்***

  மருத்துவர் தொழில் 4 சுவற்றுக்குள் செய்வார்கள். ஊருக்கெல்லாம் தெரிரிகிறார்ப்போல செய்ய மாட்டாங்க.

  **ஆனால் மருத்துவர்களையும் இவர்களையும் நீங்கள் ஒப்பிட்டு பேசுவது தான் எனக்கு வியப்பாக உள்ளது.***

  மருத்துவர்னு ஒரு பட்டம் இருந்தால் நான் என்ன வேணா எழுதலாம்!

  சசிகுமார்! நீங்க என்ன சார், தரம் தராதாரம் எல்லாம் பார்த்து ஒருவருக்கு ஒரு நியாயம் இன்னொருவருக்கு வேற நியாம் சொல்றீங்க?

  Google has the SAME rule for ANYBODY. It does not matter who that person is. If there is adult content they NEED TO WARN no matter who the hell he/she is. You better KNOW THAT. Thanks!

  ReplyDelete
 46. நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

  மிகவும் தேவையான ஒரு சமூக அக்கறை கொண்ட நல்ல பதிவு, சகோ..!

  ஆபாசம்,
  இல்லாததை இருப்பதாய் பொய் கூறி பயங்கரவாதத்தை தூண்டல்,
  ஆதாரம் இன்றி பிறர் மீது பழி போட்டு ஒருவருக்கு அவப்பெயர் ஏற்படுத்துதல்...

  ...போன்ற தவறான வழிகாட்டல்கள் வலைத்தள உலகில் நடைபெறாமல் இருப்பதே நமக்கு நல்லது.

  தங்களுடைய எச்சரிக்கை கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்.

  மிக்க நன்றி சகோ.வந்தேமாதரம்.

  ReplyDelete
 47. friends my side pidikuma? Www.Illamai.blogspot.com

  ReplyDelete
 48. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே,

  வாழ்வில் எல்லா வளங்களும்பெற்று நலமுடன் மென்மேலும் சிறக்க இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 49. பயனுள்ள பதிவு நண்பரே..நன்றி
  ஆபாச இணையதளங்களை தடுக்க K9 Web Protection
  http://ayangudipost.blogspot.com/2011/05/k9-web-protection.html

  ReplyDelete
 50. அவசியமான விழிப்புணர்வுமிக்க பதிவு நண்பரே..!! தங்கள் சேவை தொடரட்டும். பாராட்டுகள்

  ReplyDelete
 51. //டிஸ்கி- இதுவரை நான்கு பதிவர்களை குறித்து வைத்துள்ளேன் இனியும் அவர்கள் தங்களை மாற்றி கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக நான் மட்டுமல்ல என்னோடு கைகோர்க்கும் அனைவரும் சேர்ந்து திரட்டிகள்,பிளாக்கர்,கூகுள் போன்ற தளங்களுக்கு புகார் அனுப்புவோம் என்பதை மன வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.//
  நான் கை கோர்க்கிறேன்

  ReplyDelete
 52. தங்களுடன் நானும் கைக் கோர்க்கிறேன்.

  சுயப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தராமல் ஆபாசத்தினை வைத்துக் கொண்டு ஹிட்ஸ் வாங்குவது என்பது

  நல்ல தரமான திரைப் படங்கள் பிளாப் ஆவதும் அதற்கு பதிலாக "ஷகிலா படங்கள்" வெற்றி பெறுவதை போலவே நான் உணருகிறேன்.

  அப்படியானல் இவர்களுக்கும் மூன்றாம் தரப் படங்கள் எடுப்பவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?????????

  ReplyDelete
 53. ITS NOT NEW ATTEMPT WE ALREADY HVE WRITTEN A LOT ABT THIS BUT THOSE STUPID FAMOUS BLOGGERS STILL CONTINUE.
  ONE BLOGGER IS EVEN WORSE HE PUT 18 PLUS IN HIS BLOG BUT DOESNT ACTIVATE ADULT CONTENT. ONE QUESTION WILL THEY SHOW THEIR BLOG TO THEIR DAUGHTERS OR SONS

  ReplyDelete
 54. சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு.. வாழ்த்துக்கள். கொட்டு பத்துமா?

  ReplyDelete
 55. சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு.. வாழ்த்துக்கள். கொட்டு பத்துமா?

  ReplyDelete
 56. சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு.. வாழ்த்துக்கள். கொட்டு பத்துமா?

  ReplyDelete
 57. பூனைகளுக்கு மணி.......நல்முயற்சி.

  ReplyDelete
 58. இதுபோல் மதவாதப் பதிவுகளையும் தடைசெய்ய எதாவது முயற்சி எடுங்க, மதவா(ந்)திகளின் தொல்லை தாங்கவில்லை

  ReplyDelete
 59. நான் பார்த்தவரை 30 வாக்குகள் அனைத்தும் + வாக்குகள் உங்கள் கருத்தை சரி என்கின்றன. சம்பந்தப்பட்ட ஆபாச எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் இதை பலமான எதிர்ப்பாக எடுத்துக் கொள்வதுடன் மதித்து செயலாற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன்

  ReplyDelete
 60. உண்மைதான் சசி வலைப்பதிவர்களுக்கு கடமை இருக்கிறது.
  கருத்துச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களால் வலைப்பதிவு எழுதும் எல்லோருமே தான் பாதிப்படைகிறார்கள்.

  ReplyDelete
 61. ஆமாம் தலைபப பார்க்கும் போதே எரிச்சலாவரும்,

  நல்ல சொன்னீங்க

  ReplyDelete
 62. ////கேவலம் ஆங்கில தளத்துல இருந்து காப்பி அடிச்சி செய்திய என்னவோ இவரே கண்டு புடிச்ச மாதிரி போட்டுக்கிட்டு நம்மள குறை சொல்ல வந்துட்டாரு.////

  யாரப்பா சொன்னாக... உங்க தளம் இல்லாட்டி என்னொட தளம் எங்க வீட்டு ஓலை படலை (வாசல் கதவு) மாதிரித் தான் இருந்திருக்கும்..

  ReplyDelete
 63. சகோ நான் ஆபாசம் ஆழமாய் தொனிக்க எழுதுவதில்லை இருந்தாலும் சில பதிவக்கு 18 பிளஸ் போட வேண்டியிருக்கிறது காரணம் அது போடாவிடில் எனது முழு பதிவையும் (உதாரணத்தக்கு 18 வயதுக்கு மேல் தேவைப்படும் அறிவியல் விசயம்)அந்த மாதிரி என கருதி விடுவார்களே என்ற பயம் தான்...

  ReplyDelete
 64. தமிழ் 10 திரட்டியில் ஒரு பதிவின் தலைப்பில் கொண்டம் என்று பாவித்ததற்காக தானியங்கியாக நிரகரித்த அனுபவம் எனக்கிருக்கிறது...

  ReplyDelete
 65. தெளிவா தொடங்கி சிறப்பா முடிச்சுட்டிங்க சசி. உறைத்தால் சரி.

  ReplyDelete
 66. நல்ல முடிவு எடுத்து இருக்குறீர்கள் சசி. ஆனால், 18+ போடும் பதிவர்கள், அதுவும் நீங்கள் சொன்ன அந்த 4 போரையும் என்னால் அடையாளம் காண முடியாவிட்டாலும், "நான் இப்படிதான் எழுதுவேன், எவனும் என்னை கேட்க கூடாது, விருப்பம் இருந்த வ இல்லன வராதே" என்று சொல்லி, சர்வதேச அளவில் வெளியான கில்மா படங்களை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார். அவரை நாம் கண்டும் காணாமல் தானே இருக்கிறோம். இன்னும் சொல்ல போனால் அவர் தான் இப்போது பிரபல பதிவர்களில் மூன்றாவதாக இருக்கிறார். நீங்களும் பல முறை அவருடைய படங்களுக்கு கருத்து சொல்லி கொண்டு தான் இருந்தீர்கள். நீங்களும் அவரும் கூட நண்பர்கள் தான் என்று நான் அறிவேன். அதையும் தாண்டி ஒரு பதிவராக இப்போது நீங்கள் எடுத்து இருக்கும் முடிவு மிக நல்ல முடிவு. பொதுவாக பிற மொழிகளில் ஆபாசமாக எழுதுவதோ அல்லது படங்கள் போடுவதோ அவர்கள் மொழி சார்ந்த பதிவர்கள் பார்த்து கொள்ளட்டும். நாம் செய்ய வேண்டியது தமிழில் இது போன்ற விஷயங்களை தடுக்க வேண்டும். நிச்சயம் எல்லோரும் இணைவோம். உங்கள் கையோடு என் கையும் இணைந்து ஓசை தர நான் தயார்.

  ReplyDelete
 67. good i like your action.
  "Say to eay but action is very difficult" so stop all Sx Sites then you write. anyway good luck your social activities


  Ragavan
  Srilanka

  ReplyDelete
 68. //thousands of singles online..start flirting // remove these kind of ads in your blog
  then advise others

  ReplyDelete
 69. நண்பர் மிக அருமையான பதிவு ...அவர்கள் மிகமிக கேவலமான மனிதர்கள். இந்த முட்டாள் மனிதர்களால் இளைய தலைமுறையே திசை மாற்றப் படுகிறது. அவர்கள் காசுக்காக சோரம் போகக்கூடியவர்கள்.தன் மனைவி,குழந்தைகளையும் காசுக்காக விற்கக்கூடிய வேசிமகன்கள். ஆங்கில பதிவுகள் பரவாயில்லை தேடினால்தான் ஆபாச பதிவுகள் கிடைக்கின்றன ;ஆனால் தமிழ் பதிவினைத் திறந்தாலே போதும் ஆபாச பதிவுகளாகவே வந்து விழுகின்றன.என் பிள்ளைகளுக்காக இணையதளத்தை புதிதாக பெற்ற நான் இதைப் பார்த்து மிரண்டு போய்விட்டேன்.இவற்றை யாரும் தேடித் போவதில்லை. அந்த எழுத்து விபச்சாரிகள் நாகரிகம் என்ற ஆடையை அவிழ்த்துக்காட்டும் போது ரோட்டோடு போகின்றவர்கள் கூட நின்று பார்ப்பது இயல்பு..அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது

  ReplyDelete
 70. நண்பரே உங்கள் கருத்திற்கு நான் தலை வணக்குகின்றேன். குறிப்பாக கணனிக்கும் இணையத்திற்கும் புதிய நண்பர்களுக்கு கூகுளில் தமிழ் தேடுதல் பற்றி கூறும் போது எந்த எழுத்தை அடித்தாலும் அதில் ஏதாவது ஆபாச குறிப்பு வந்துவிடுகிறது. எந்த பலவீனரும் அந்த தளங்களிற்கு போக வாய்ப்பு உள்ளது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

  விமலன் (அக்கினிக்குஞ்சு tfvimalan.blogspot.com)

  ReplyDelete
 71. ஆபாச ஆதரவாளர்களின் பேச்சை தவிர்த்து தடுக்கும் செயலில் இறங்குவோம் ...

  ReplyDelete
 72. ஆபாச ஆதரவாளர்களின் பேச்சை தவிர்த்து தடுக்கும் செயலில் இறங்குவோம் ...

  ReplyDelete
 73. வரவேற்கபட வேண்டிய பதிவு...கண்டிப்பாக உங்களுடன் சேர்ந்து ஆதரவு கொடுப்போம்...

  ReplyDelete
 74. கருத்துச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களால் வலைப்பதிவு எழுதும் எல்லோருமே தான் பாதிப்படைகிறார்கள். ஆங்கில பதிவுகள் பரவாயில்லை தேடினால்தான் ஆபாச பதிவுகள் கிடைக்கின்றன.

  ReplyDelete
 75. வரவேற்கபட வேண்டிய பதிவு...கண்டிப்பாக உங்களுடன் சேர்ந்து ஆதரவு கொடுப்போம்...

  ReplyDelete
 76. அற்புதமான பதிவு..

  பதிவர்களின் எழுத்துசுதந்திரம் தவறாக பயன்படுத்துத்ல் கூடாது...

  நன்றியுடன்,

  சம்பத்குமார்.பொ

  http://parentsactivitytamil.blogspot.com

  ReplyDelete
 77. நன்றாக சொன்னிர்கள் செவிட்டில் அறைந்த மாதிரி ........
  //என் நெஞ்சை நிமித்தி சொல்ல முடியும் என் எழுத்தால் என் சமூகத்தில் ஒருவர் கூட பாதிப்படைய வில்லை, என்று உங்களால் கூற முடியுமா?//
  நானும் வயசுக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தகப்பன் .......இவர்கள் செய்வதை பார்த்தால் வெட்கமாக இருக்கிறது...எப்போதுதான் திருந்துவார்களோ ????!!!!!
  துணிவாக எடுத்து சொன்னதுக்கு நன்றி..சகோ

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press