5/08/2011

உங்கள் பழைய கணினியின் அனைத்து தகவல்களையும் புதிய கணினிக்கு சுலபமாக மாற்ற

கணினி என்பது மனிதனுக்கு ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தினம் ஒரு தொழில்நுட்ப வசதி கணினி சம்பந்தமாக வெளிவருகிறது.  நம்முடைய பழைய கணினி பழுதாகினாலோ அல்லது வேறு காரணத்திற்க்காக புதிய கணினியை வாங்குகிறோம். அப்படி வாங்கும் போது நம்முடைய பழைய கணினியில் உள்ள தகவல்கள் மென்பொருட்கள் அனைத்தையும் அப்படியே நம்முடைய புதிய கணினிக்கு மாற்ற மிகுந்த சிரமப்படுவோம். கால நேரமும் அதிகமாகும். இந்த பிரச்சினையை தீர்த்து பழைய கணினியில் உள்ள அணைத்து தகவல்களையும் சுலபமாக புதிய கணினிக்கு மாற்ற இரு இலவச மென்பொருள் உள்ளது.
  • இது முற்றிலும் PickMeApp ஒரு இலவச மென்பொருள் இருந்தாலும் தாங்கள் இந்த தளத்தில் உறுப்பினர் ஆகினால் மட்டுமே இந்த மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்ய முடியும். 
  • இந்த முறையில் நீங்கள் உங்கள் மென்பொருளை புதிய கணினியில் மாற்றும் போது நாம் செய்து வைத்திருந்த செட்டிங்க்ஸ் கூட மாறாமல் வரும் என்பது இதன் இன்னுமொரு சிறப்பம்சம்.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ததும் இந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் புதிய கணினிக்கு மாற்ற வேண்டிய மென்பொருட்களை தேர்வு செய்து கொண்டு அதன் ரெஜிஸ்டரியை அப்படியே புதிய கணினியில் நிறுவினால் அந்த மென்பொருள் உங்களின் புதிய கணினியில் வந்து விடும். 
  • உதவிக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். 


டுடே வாழ்த்துகள் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home