6/10/2011

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நிறைவேற உங்கள் ஆதரவை பதியுங்கள், நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்

நம் நாட்டின் ஊழலை பற்றி திரும்பவும் இங்கு சொல்ல வேண்டியதில்லை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் குழந்தை பிறந்ததிலிருந்து அவன் சுடுகாடுக்கு போகும் வரை லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் இந்தியாவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஊழலை ஒழிக்கும் என்று வீராவேசமாக பேசினாலும் ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர் மீது அது இதுன்னு சொல்லி ஏதேதோ வழக்குகள் போட்டு அவர்களை படாத பாடு படுத்திடுவாங்க.
ஹன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் பாபா ராம்தேவ் யோக்கியன் இல்லை என்று அவருக்கும் கோடிகணக்கில் சொத்துக்கள் இருக்கிறது என்று பல பேர் கூறுகிறார்கள் இவை எல்லாம் உண்மையாக இருந்தாலும் இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தது இந்த அரசு. இந்த வழக்குகளை ஏன் முன்பே போடவில்லை என்ற பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளது. 

இதில் ஹன்னா ஹசாரே கொள்கை ஊளைக்கு எதிரான லோக்பால் மசோதா கொண்டு வருவதே. இதற்க்கு மத்தியரசு சம்மதித்தது போல நடித்தாலும் அவர்கள் இந்த மசோதாவை கொண்டுவருவதில் வேண்டுமென்றே பல பிரச்சினைகளை எழுப்பி காலம் தாழ்த்துகின்றனர். அதில் தற்பொழுது 25 கோடி மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த மசோதாவை நிறைவேற்றுவோம் என்று ஒரு கேவலமான நிபந்தனையை நம்ம பாரத பிரதமர் சோனியா காந்தி(Acting Manmoganji) கூறி உள்ளார். 
  1. மக்களின் வரிப்பணத்தை திருடுபவர்களை கண்டிக்க வரும் மசோதாவை மக்கள் எதிர்ப்பார்களா?  
  2. ஹன்னா ஹசாரா உண்ணாவிரதம் இருந்த பொழுது கூடிய கோடானுகோடி மக்களை பார்த்தும் தெரியவில்லையா மக்களின் மனநிலை?
  3. இது உண்மையிலேயே மக்கள் கருத்தை அறியவா இல்லை 25 கோடி மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்று இந்த மசோதாவை கிடப்பில் தூக்கி போடவா?
மக்களே மதிய அரசின் இந்த கபட நாடகத்தை நாம் முறியடிக்க வேண்டும். ஆகவே கீழே உள்ள எண்களில் ஏதேனும் ஒரு எண்ணிற்கு உங்கள் போனில்  இருந்து தொடர்பு கொள்ளுங்கள். ஒரு ரிங் அடித்தவுடன் இந்த தொடர்பு தானாக துண்டிக்கப்படும். உங்களின் ஆதரவும் பதிந்து விடும். அதற்க்கு சாட்சியாக உங்கள் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். இப்படி வந்தால் நீங்களும் ஊழலுக்கு எதிரான போரில் நீங்களும் பங்கு பெறுங்கள். 

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
+9122 6155 0789  (அல்லது) 022- 6155 0789.

ஆதரவு தெரிவித்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்

Thanks for registering your support. If you want or volunteer, please log on to www.indiaagainstcorruption.org or send an sms at 09212472681 giving your details.

இதற்க்கு உங்கள் போனில் எந்த வித கட்டனும் பிடிக்கப்பட மாட்டாது. 


நண்பர்களே 25 கோடி பேர் ஆதரவு என்பது மிக அதிகம். நம் நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு. செய்திதாள்கள் படிப்பவர்கள் இந்த அளவு இருப்பார்களா என தெரியவில்லை ஆகவே இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் முதல் உங்களால் முடிந்த அளவு உங்கள் ஊரில் உள்ள அனைவரிடமும் தெரிவியுங்கள். இந்த மசோதாவை அனுமதிக்காமல் காங்கிரஸ் எதாவது சப்பை கட்டு கட்டுவதை தவிர்ப்போம். 

இந்த பதிவை தேவையென்றால் யார் வேண்டுமென்றாலும் காப்பி செய்து கொண்டு அவர்களின் பிலாக்கிலோ அல்லது ஈமெயிலிலோ பரப்புங்கள் 25 கோடி பேர் அல்ல 50 கோடி மக்களின் ஆதரவு இதற்க்கு கிடைக்க நம்மால் முடிந்த அளவு உழைப்போம். 

வந்தே மாதரம்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home