6/11/2011

பிளாக்கரில் புதிய வசதி பிளாக்கின் பெவிகானை சுலபமாக மாற்றலாம்

கூகுல் வழங்கும் பிளாக்கர் சேவையை பயன்படுத்தி வரும் நாம் நம்முடைய தளங்களில் பிளாக்கரின் லோகோ டீபால்ட் பெவிகானாக இருக்கும். முன்பு அந்த டீபால்ட் பெவிகானை மாற்றி நம்முடைய பெவிகானை கொண்டு வர கோடிங்கில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும். இது பல பேருக்கு கொஞ்சம் கடினமான வேலையாக இருந்தது.  இதனால் சில பேர் தங்களுடைய பெவிக்கானை மாற்றாமலே இருந்தனர். ஆனால் இனி கோடிங் எதுவும் நாம் மாற்றமோ சேர்க்கவோ செய்ய தேவையில்லை தினம் தினம் புதுபுது வசதிகளை வாசகர்களுக்கு அறிமுக படுத்தி வரும் பிளாக்கர் தளம் இந்த பெவிகானை சுலபமாக மாற்றுவதற்கும் ஒரு புதிய வசதியை வழங்கி உள்ளது.


இந்த முறையில் நாம் கோடிங்கை மாற்றாமல் நமக்கு தேவையான போட்டோவை அப்லோட் செய்தாலே போதும் அது நம்முடைய பிளாக்கின் பெவிகானாக தெரியும்.
  • இதற்க்கு முதலில் இந்த லிங்கில் http://draft.blogger.com க்ளிக் செய்து ப்ளாக்கர் தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • Design என்பதை க்ளிக் செய்யுங்கள் அதில் header பகுதிக்கு மேலே Favicon என்ற புதிய வசதி இருப்பதை காண்பீர்கள் அதில் உள்ள Edit என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அதில் ஓபன் ஆகும் சிறிய விண்டோவில் Choose File என்பதை க்ளிக் செய்து உங்கள் பெவிகானை (.ico) தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • உங்களிடம் .ico பைலில் உங்கள் பெவிக்கான் இல்லை என்றால் http://www.icoconverter.com/ இந்த தளம் சென்று உங்களின் jpg,bmp,gif பைல்களை .ico பைல்களாக மாற்றி கொள்ளவும்.
  • இப்பொழுது Save கொடுத்தவுடன் உங்களுடைய Favicon மாறிவிடும்.
  • நீங்கள் ஏற்க்கனவே உங்கள் பெவிக்கானை மாற்றி இருந்தால் இந்த முறை வேலை செய்யவில்லை எந்த மாற்றமும் செய்யாமல் டீபால்ட் பிளாக்கர் லோகோவே இருந்தால் மட்டுமே இந்த முறை சரியாக வேலை செய்கிறது.


டுடே லொள்ளு

சும்மா என் எடத்துல குப்பைய போடுற ரோட்டோரமா போட வேண்டியதுதானே 

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home