Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

மனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை அனிமேஷன்களாக காட்டும் தளம்

வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமானதாகி விட்டது. இணையதளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது.  மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம் போல் செயல் பட்டு கொண்டிருக்கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல் படுகிறது என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம். தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல் படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணையதளம் வழங்குகிறது. இந்த தளத்தை கண்டிப்பாக உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் படுத்தி வையுங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், இலகுவாக புரிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

இந்த தளம் ஆங்கிலம் ஸ்பானிஷ் போன்ற இரு மொழிகளில் காணப்படுகிறது. இந்த லிங்கில் கிளிக் செய்து வரும் விண்டோவில் முதலில் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


மொழியை தேர்வு செய்தவுடன் அடுத்து நீங்கள் எந்த உடல் உறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த உறுப்பின் அனிமேசனும் அந்த உறுப்பின் செயல் படும் விதமும் கொடுத்து இருப்பார்கள்.

இதில் நீங்கள் கர்சரை ஒவ்வொரு பகுதியாக நகர்த்தினால் அந்த பாகத்தின் பெயரும் அது என்ன வேலையை மேற்கொள்கிறது என்ற விவரங்களும் உங்களுக்கு காட்டப்படும். 

இப்படி ஒவ்வொரு உறுப்புகளாக தேர்வு செய்து நம் உடல் பாகத்தின் உறுப்புகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இந்த தளத்திற்கு செல்ல - http://medtropolis.com/

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

15 comments :

  1. நம்முடைய உடலைப்பற்றியும் அதன் இயக்கத்தையும் பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும் தளங்களை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. வணக்கம்!அருமையான தகவல்,பள்ளிப் பிள்ளைகளுக்கு உபயோகமாய் இருக்கும்! நன்றி பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  3. நல்ல தகவல்..
    தளத்தைப் புத்தககுறியிட்டு வைத்துக்கொண்டேன்..

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. எப்பவுமே ஒரு விசயத்த படிச்சு தெரிஞ்சுக்கறத விட காட்சியா பாத்தா நல்லா மனசில பதியும்,சீக்கிரம் மறக்கவும் செய்யாது.

    நம்ம உடலுறுப்புகள் வேலை செய்யும் விதத்தை காட்சியா பாக்கறது
    பிரமிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது நன்றி!

    ReplyDelete
  5. ஹாய் ...இன்னா நைனா சசி ஒவொரு பதிவிலயும் ஓரே சிக்சரா அடிகிரிங்கோ ...
    அல்லாத்தையும் பட்சிகினு வாறேன்...அல்லாமே சூப்பர் பா...
    இதுக்குமேலே சொல்றதுக்கு எங்கிட்டே எதுவும் இல்லபா ஏன்னா ....
    நா கொயந்த பய .....ஆங் .....

    ReplyDelete
  6. அட வித்தியாசமான காட்சி... நம் உடல் இயங்குவது போன்று நாமே பார்ப்பது சூப்பர்... பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  7. அருமையான காட்சி. நன்றி! நன்றி!!

    ReplyDelete
  8. நல்லதோர் பதிவு மச்சி,

    வீட்டில் குழந்தைப் பசங்க உள்ளவங்களுக்கு இன்னும் சூப்பரான பதிவு.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press