Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

ஏதேதுக்கோ இணையதளங்கள் வந்து விட்ட நிலையில் இந்தயாவில் உள்ள ஊர்களின் பின்கோடுகளை அறிய ஒரு தேடியந்திரம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. பின்கோடுகள் என்பது மிகவும் அவசியமான ஒன்று ஏதோ கொரியர் அனுப்பவோ அல்லது லெட்டர் அனுப்ப நேரிட்டால் இந்த பின்கோட் என்பது மிகவும் கட்டாயமான ஒன்று சில நேரங்களில் இந்த பின்கோடுகள் தெரியாமல் நாம் சிரம பட்டிருப்போம்.  இந்த பிரச்சினைகளை தவிர்க்க ஒரு தேடியந்திரம் உள்ளது. இதில் நமக்கு தேவையான ஊர்களின் பெயரை டைப் செய்து என்டர் தட்டினால் போதும் உடனே  அந்த ஊரின் பின்கோட் வந்துவிடும்.
  • இந்த தளத்திற்கு சென்றவுடன் அங்கு இருக்கும் காலி கட்டத்தில் உங்களுக்கு தேவையான ஊரின் பெயரை பிழையின்றி ஆங்கிலத்தில் டைப் செய்து உங்கள் கீபோர்டில் உள்ள என்ட்டர் தட்டவும்.
  • என்ட்டர் அழுத்திய அடுத்த நொடியே உங்கள் ஊருக்கான பின்கோட் வந்துவிடும் இது போல உங்களுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் தேடி கொள்ளலாம்.
  • இதில் நாம் கொடுக்கும் ஊரின் வரைபடமும் சேர்ந்து வருவது இதன் கூடுதல் சிறப்பு.

  • மற்றும் இதில் பின்கோட் தவறாக இருந்தாலோ அல்லது ஏதாவது ஊருக்கு பின்கோட் இல்லாமல் இருந்தாலோ நாமே எடிட் செய்யும் வசதியை கொடுத்து உள்ளனர்.
  • அந்த பக்கத்தில் உள்ள எடிட் க்ளிக் செய்தால் வரும் விண்டோவில் நாம் மாற்றம் செய்யலாம். இதற்க்கு பயனாக நம்முடைய தளத்தின் லிங்கையும் கொடுத்து செவ் செய்து விட்டால் போதும்.
  • பதிவர்களுக்கு இது கூடுதல் பயனை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த தளத்திற்கு செல்ல- http://www.getpincode.info

டுடே லொள்ளு 




என்னய்யா சாப்டறத பார்த்ததே கிடையாதா இப்படி பார்க்கறீங்க போங்கப்பா வேற வேலை இருந்தா பாருங்க, எனக்கு வயிறு வலிக்க போகுது 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

  1. சூப்பரான தகவல் பகிர்வு நண்பரே..!!

    ReplyDelete
  2. டுடே லொள்ளும் ஹா ஹா ஹா... கலக்கல்..

    ReplyDelete
  3. நிறைய கஷ்டபபடுறிங்க போல...
    ரொம்ப நன்றிங்க..
    இது நிறைய பேருக்கு தேவைப்படும்...

    ReplyDelete
  4. தொடர்ந்து பயனுள்ள தகவல்களை தரும் மாப்ள சசி வாழ்க..

    ReplyDelete
  5. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  6. சசியின் டாப் 10 போஸ்ட் என ஒரு லிஸ்ட் எடுத்தா இந்த போஸ்ட்டும் அதுல அடங்கும்

    ReplyDelete
  7. மாப்ள உபயோகமான விஷயங்கள் சொல்லிட்டு வர்ற நன்றிய்யா!

    ReplyDelete
  8. குரியர் காரர்களே இப்போதெல்லாம் பின்கோடு கேட்கிறார்கள்...அவசியமான தகவல்..நன்றி

    ReplyDelete
  9. ரொம்ப தேவையான விஷயம்ண்ணே...அப்புறம் டுடே லொள்ளு சான்சே இல்ல .

    ReplyDelete
  10. சூப்பரான தகவல் ...... நன்றி நண்பரே

    ReplyDelete
  11. மிகவும் பயனுள்ள தகவல்...

    ReplyDelete
  12. எப்பவும் போல அசத்தலான பயன் மிக்க பதிவு சசி!

    ReplyDelete
  13. உபயோகமான தகவல். நன்று நண்பரே

    ReplyDelete
  14. பயனுள்ள தகவல் நண்பா...

    ReplyDelete
  15. மிகவும் பயனுள்ள பதிவு..நன்றி சசி!!

    ReplyDelete
  16. keep rocking friend....:):)

    ReplyDelete
  17. சகோ, புதுசு புதுசா அறிமுகப்படுத்தி அசத்துறீங்களே.
    நன்றி சகோ.

    ReplyDelete
  18. சகோ, புதுசு புதுசா அறிமுகப்படுத்தி அசத்துறீங்களே.
    நன்றி சகோ.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press