6/02/2011

ட்விட்டரின் புதிய Follow Button பிளாக்கில் இணைக்க

சமூக தலைமகளின் வளர்ச்சி மிக பிரம்மிக்கும் வைக்கும் உள்ளது. அதிலும் பேஸ்புக் தளத்தின் வளர்ச்சி பிரம்மிக்கும் வகையில்  அமைந்துள்ளது.நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்தி பேஸ்புக் தளம் அதன் வாசகர்களை அதிகரித்து கொள்கிறது. ஆதலால் மற்றொரு பிரபல தளமான  ட்விட்டர் தளமும் அதனுடைய புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது அந்த வகையில் தற்போது Follow பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்டனை உங்கள் பிளாக்கில் இணைப்பதனால் வாசகர்கள் உங்கள் ட்விட்டர் கணக்கில் சுலபமாக பின்தொடரலாம் மற்றும்  உங்கள் ட்விட்டர் கணக்கின் பின்தொடர்பவர்களை (Followers) கணிசமாக அதிகமாக்கலாம். 

                                                      இதன் மாதிரியை கீழே காணுங்கள் • இதற்க்கு முதலில் ட்விட்டரின் இந்த Twitter Developers பக்கத்திற்கு செல்லுங்கள். 
 • அங்கு சென்றவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் பட்டன் தோற்றத்தை உங்கள் விருப்பம் போல தேர்வு செய்து கொள்ளுங்கள்.

 • உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து முடித்தவுடன் அங்கு உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.
 • உங்கள் பிளாக்கில் சைடுபாரில் கொண்டு வர மற்றும் பதிவிற்கு கீழே கொண்டுவருவது எப்படி என்றும் கீழே கொடுத்துள்ளேன் அதை பார்த்து உங்களுக்கு தேவையான இடத்தில் நீங்கள் பொருத்தி கொள்ளுங்கள்.
சைடுபாரில் பட்டனை வரவைக்க: 
 • Dassboard - Design- Add a Gadget - Add Html JavaScript - பகுதிக்கு சென்று இந்த கோடிங்கை பேஸ்ட் செய்தால் உங்கள் பிளாக்கில் சைடுபாரில் Follow Button வந்து விடும்.


முழு பதிவிற்கு கீழே வர வைக்க 
 • Dassboard - Design- Edit Html - Expand Widget Template சென்று கீழே உள்ள கோடிங்கை கண்டறியவும்.
<data:post.body/>
 • இந்த வரிக்கு கீழே நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
 •  பேஸ்ட் செய்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி சேமித்து கொண்டால் உங்கள் பிளாக்கில் Twitter Follow Button சேர்ந்து விடும்.

பதிவின் தலைப்பிற்கு கீழே வர வைக்க:

 • Dassboard - Design- Edit Html - Expand Widget Template சென்று கீழே உள்ள கோடிங்கை கண்டறியவும்.
<data:post.body/>
 • இந்த வரிக்கு மேலே நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
 •  பேஸ்ட் செய்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி சேமித்து கொண்டால் உங்கள் பிளாக்கில் Twitter Follow Button சேர்ந்து விடும்.
டுடே லொள்ளு பைக் ஓட்ட சீட்டு, ஸ்டியரிங் எல்லாம் கொடுத்தும் இந்த லூசு  எப்டி ஒட்டுது பாரு. நாட்ல பல பேர் இப்டி தான் அலையுதுங்க 

டிஸ்கி- அலுவலக பணி நிமித்தமாக பெங்களூர் செல்வதால் நான்கு நாட்களுக்கு பதிவுகள் வெளிவருவது சந்தேகமே.. அடுத்த செவ்வாய்(07-06-11) முதல் பதிவுகள் வழக்கம் போல வெளிவரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home