கூகுள் Buzz, Plus, Picasa தளங்களில் நீங்கள் பகிர்ந்த அனைத்து தகவல்களையும் டவுன்லோட் செய்ய

இணையம் உபயோகிப்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் பயனை அனுபவிக்கின்றனர். இணைய நிறுவனங்களில் கூகுள் தான் எப்பொழுதும் முதல் இடம். கூகுள் பல வசதிகளை நமக்கு வயங்கி வருகிறது. நம்முடைய செய்திகளை உடனுக்குடன் பகிர Google Buzz, நம்முடைய போட்டோக்களை பகிர Picasa , தற்பொழுது புதிய வசதியாக இவை அனைத்தையும் ஒரே இடத்தில் பகிர Google Plus என இதன் சேவைகள் நீள்கிறது. நாம் இந்த தளங்களில் தகவல்களை பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். அப்படி அந்த தளங்களில் பகிர்ந்த அனைத்து தகவல்களையும் எவ்வாறு டவுன்லோட் செய்வது என பார்ப்போம்
  • நீங்கள் பகிர்ந்த தகவல்களை டவுன்லோட் செய்ய இந்த Google Takeout தளத்திற்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். அங்கு உள்ள அனைத்து சேவைகளில் இருந்தும் தகவல்களை டவுன்லோட் செய்ய விரும்பினால் அங்கு உள்ள CREATE ARCHIVE என்பதை கொடுக்கவும்.
  • அல்லது குறிப்பிட்ட ஒரு தளத்தில் பகிர்ந்த தகவல்களை மட்டும் டவுன்லோட் செய்ய விரும்பினால் Choose Services என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
  • CREATE ARCHIVE கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். 
  • அதில் உங்கள் தகவல்கள் அனைத்தும் ஒன்று திரட்டி டவுன்லோட் வசதி வரும்.
  • அந்த டவுன்லோட் பட்டனுக்கு அருகில் உங்கள் பைலின் மொத்த அளவு மட்டும் எண்ணிக்கை ஆகியவை வந்திருக்கும். 
  • அடுத்து நீங்கள் டவுன்லோட் பட்டனை அழுத்தவும். 
  • Download பட்டனை அழுத்தியவுடன் உறுதி படுத்த உங்களின் user name, Password கேட்கும் அதை சரியாக கொடுத்தால் போதும் அடுத்த வினாடி உங்கள் தகவல்கள் அனைத்தும் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகிவிடும். 
டுடே லொள்ளு 

எதையுமே நேரடியா பார்த்தான் தான் இன்ட்ரெஸ்டிங் இருக்கும் 

Comments