மொபைலை இலவசமாக ரீசார்ஜ் செய்யலாம் - இணையத்தில் சம்பாதிக்க [Earn Money Online]

இன்றைய உலகில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது. இந்தியாவில் பிரம்மிக்கும் வகையில் மொபைல் போனின் பயன்பாடு உள்ளது. இன்னும் ஒரு படி மேலே போனால் மொபைல் போனில் இணைய பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அபரிமிதமாக வளர்ந்து கொண்டு உள்ளது. மொபைல் போன்கள் அவற்றில் உள்ள வசதிகளின் படி விலைகளில் விற்க படுகின்றன. நீங்கள் எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் பணம் கொடுத்து ரீசார்ஜ் செய்து தான் ஆகவேண்டும். இது அனைத்து நெட்வொர்க்களுக்கும் பொருந்தும். ஆனால் இணையத்தில் காசு கொடுக்காமல் இலவசமாக உங்களுடைய மொபைல்களை ரீசார்ஜ் செய்ய ஒரு வழி உள்ளது.
  • இந்த சேவையை நமக்கு Amulyam என்ற இணைய தளம் வழங்குகிறது. முதலில் இந்த தளத்தில் சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். 
  • உறுப்பினர் ஆகிய உடன் Fill Wallet பகுதிக்கு சென்றால் உங்களுக்கான சலுகைகள் இருக்கும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.

இந்த பகுதியில் உள்ள படிவங்களில் No purchase required என்று இருந்தால் நீங்கள் எதையும் வாங்க வேண்டிய அவசியமில்லை. அந்த படிவத்தை பூர்த்தி செய்தாலே போதும் அந்த குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் சேர்ந்து விடும். 

அல்லது நீங்கள் ஏதேனும் ஆன்லைனில் டிக்கட் புக் பண்ணுவதாக இருந்தாலோ ஹோட்டல் ரூம் புக் பண்ணுவதாக இருந்தால் இவர்கள் கொடுத்துள்ள Offer Link ல் கிளிக் செய்து டிக்கெட் வாங்கினால் அங்கு குறிப்பிட்டுள்ள தொகையை உங்கள் கணக்கில் சேர்த்து விடுவார்கள். 

விதி முறைகள்:
  • இந்த தளத்தில் நீங்கள் எந்த ஒரு தொகையையும் பணமாக பெற முடியாது நீங்கள் கொடுத்துள்ள மொபைலுக்கு ரீசார்ஜ் செய்யப்படும் அல்லது சினிமா டிக்கெட்டாக பெற்று கொள்ளலாம்.
  • குறைந்தது Rs.10/- வந்தவுடன் அந்த தொகையை உங்கள் மொபைலில் பெறமுடியும்.
  • உங்கள் referal மூலம் சேரும் நபர்கள் பெரும் தொகையில் 20% உங்களுக்கு கமிஷனாக தரப்படும்.
  • குறிப்பிட்ட கால அளவுக்குள் செய்யப்படும் பரிமாற்றத்திற்கு மட்டுமே உங்களுக்கு பணம் தருவார்கள்.
  • இதில் No purchase சலுகைகள் மிக குறைந்த அளவு தான் தருவார்கள்.
  • இந்த தளத்தில் மேலும் ஒரு வசதியாக இலவசமாக SMS அனுப்பி கொள்ளலாம்.
  • Aircel, Airtel, Vodafone, Idea, Reliance, tata போன்ற அனைத்து மொபைல்களுக்கும் இந்த சேவை அளிக்கப்படுகிறது. 
Link- Amulyam

டிஸ்கி - இணையத்தில் சம்பாதிக்க உள்ள தளங்களை பற்றி தான் இங்கு எழுதுகிறேன். இவர்களின் நேர்மையை பற்றி என்னால் எந்தவித உத்திரவாதமும் தர முடியாது.



//**Also Check **//

Comments