பதிவுகளில் உள்ள போட்டோக்களை மற்றவர்கள் பயன்படுத்த முடியாமல் தடுக்க புதிய வழி

பிளாக்கர் பதிவுகளில் நாம் பலவேறு வகையான புகைப்படங்களை இணைத்திருப்போம். வாசகர்கள் ரசிக்கவும், நாம் சொல்ல வரும் விஷயம் வாசகர்களுக்கு சுலபமாக புரிய வைக்கமும் பதிவுகளில் புகைப்படங்களை இணைக்கிறோம். இப்படி போடும் போட்டோக்களில் ஒரு சிலர் வாட்டர் மார்க் போட்டு போட்டோவை இணைப்பார்கள் ஆனால் வாட்டர் மார்க்கை இருந்த இடம் தெரியாமல் அழிக்க நிறைய மென்பொருட்களும், இணைய தளங்களும் வந்து விட்டதால் அந்த போட்டோக்களையும் காப்பி செய்து தங்கள் பிளாக்குகளில் போட்டு கொள்கின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு சுலபமான புதிய ட்ரிக்ஸ் ஒன்று உள்ளது.
கீழே உள்ள போட்டோவை சாதரணமாக சேமிப்பது போன்று( Save Image) உங்கள் கணினியில் சேமித்து பாருங்கள்.


சேமித்து விட்டீர்களா இப்பொழுது அந்த போட்டோவை உங்கள் கணினியில் திறந்து பாருங்கள் ஒரு வெற்றிடம் மட்டுமே தெரியும். இன்னொரு பிளாக்கில் அப்லோட் செய்தாலும் போட்டோ தெரியாது காப்பி செய்தாலும் இதே நிலைமை தான்.

சாதரணமாக உங்கள் பிளாக்கரில் போட்டோக்கள் போடும் பொழுது உங்களுடைய கோடிங் இது போல இருக்கும். 

<img src="http://1.bp.blogspot.com/waterdrops.jpg" width="500" height="250">

உங்கள் போட்டோக்களை மற்றவர்கள் பயன்படுத்த முடியாமல் தடுக்க கோடிங் கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.
<img style="background-image:url(http://1.bp.blogspot.com/waterdrops.jpg);"
src="data:image/gif;base64,
R0lGODlhAQABAIAAAP///wAAACH5BAEAAAAALAAAAAABAAEAAAICRAEAOw=="
width="500" height="250">
  • நீங்கள் NEW POST பகுதிக்கு சென்றவுடன் மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து EDIT HTML பகுதியில் பேஸ்ட் செய்யவும். 
  • அடுத்து இதில் சிவப்பு நிறத்தில் உள்ள URL பதிலாக உங்களுடைய புகைப்படத்தின் URL கொடுக்கவும். 
  • உங்கள் புகைப்படத்தின் அளவுகளை தேர்வு செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இனி நீங்கள் எப்பொழுதும் போல பதிவை பப்ளிஷ் செய்து விடுங்கள். 
  • சாதரணமாக இந்த புகை படத்தை காப்பி செய்யும் நபர்களிடமிருந்து பாதுகாத்து கொள்ளலாம். 
ஒவ்வொரு முறையும் இந்த கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்வதற்கு பதிலாக Settings - Formatting - Post Template பகுதியில் சேமித்து விட்டால் போதும் நீங்கள் new post சென்றால் அந்த கோடிங் வந்திருக்கும் நாம் URL மட்டும் மாற்றி பப்ளிஷ் செய்து விடலாம். 

இந்த முறையில் செய்தால் முற்றிலுமாக போட்டோவை காப்பி செய்யாமல் தடுக்க முடியாது. Screen shot, Source Code சென்று புகைப்படத்தை மற்றவர்கள் சேமித்து கொள்ளலாம். ஆனால் பெருமாலானவர்கள் Save Image வசதியின் மூலம் தான் எடுக்கிறார்கள் என்பதால் காப்பி செய்யும் விகிதத்தை பெருமளவு குறைக்கலாம்.

இதையும் பாருங்கள்:

Comments