குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தாச்சு பேஸ்புக் மொபைல்கள் சாதிக்குமா?

நம்மாளுங்க காலைல தூங்கி எழுந்து குளிக்கிராங்களோ இல்லையோ நேரா கம்ப்யுட்டர ஆன் பண்ணி பேஸ்புக் ஓபன் பண்ணி என்ன அப்டேட்ஸ் என்று பாக்குறத பொழப்பா வச்சிக்கிட்டு இருக்காங்க. ஒரு நாளைக்கு இவங்களுக்கு பேஸ்புக் தளத்தை பார்க்கலைன்னா வேலையே ஓடாது. அதே நினைப்பாவே இருப்பாங்க. அப்படி என்னதான்யா இருக்குது அந்த பேஸ்புக்ல யாராவது கேட்டுட்டா போதும் இருக்கிற கோவத்தை எல்லாம் அவுங்க மேல காட்டிருவாங்க. அவர்களுக்கே தெரியாமல் பேஸ்புக் தளம் அவர்களை அடிமை படுத்த காரணம் பறந்து விரிந்த நண்பர்கள் வட்டமே. இது போன்றவர்களை மையப்படுத்தி வந்துள்ளது தான் பேஸ்புக் மொபைல் போன்கள்.

வோடோபோன் நிறுவனம் புதிதாக Vodafone555 blue என்ற மொபைலை அறிமுகம்செய்து வைத்துள்ளது.   இது முழுக்க முழுக்க பிரபல சமூக இணையதளமான பேஸ்புக் தளத்திற்கு உபயோகிப்பாளர்களுக்கு என்று தயாரிக்கப்பட்டுள்ளது.   பேஸ்புக்கின் அபார வளர்ச்சியையும் வாசகர்களின் எண்ணிக்கையையும் கண்டு பேஸ்புக் தளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த போன்களை வடிவமைத்துள்ளது. ஒரே பட்டனை அழுத்தினால் பேஸ்புக் தளத்திற்கு செல்லும் வகையில் வடிவமைத்துள்ளது. மிகவும் அழகாகவும் வல்வேறு வசதிகளுடனும் இதனை வடிவமைத்துள்ளது வோடபோன் நிறுவனம். இதன் விலையும் அதிகமில்லை வெறும் Rs.4950 தான்.சிறப்பம்சங்கள்:
  • 2.4 inch display (not touch screen)
  • Navigation through an optical touchpad
  • Full QWERTY keypad
  • 2MP camera with flash
  • FM Radio with 3.5 mm jack
  • Loaded with Opera Mini 5 browser
  • Bluetooth 2.1 and Micro USB 2.0
  • 40MB internal memory that is expandable up to 16GB with MircoSD

நீங்கள் பேஸ்புக்கிற்கு அடிமை என்றால் இந்த மொபைல் கண்டிப்பாக உங்க கையில் இருந்தால் போதும் எப்பொழுதும் பேஸ்புக்கில் இருக்கலாம்.

Tech Shortly

Comments