இணையத்தில் பிரபல வீடியோ தளமான யூடியுப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த தளத்தில் லட்ச கணக்கான வீடியோக்கள் குவிந்து காணப்படுகின்றன. இதில் வாசகர்களும் தங்கள் வீடியோக்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த தளத்தில் வீடியோ பைல்களை மட்டுமே பகிர முடியும். ஆனால் உங்களிடம் உள்ள ஆடியோவை மற்றவர்களுடன் யுடியுபில் பகிர ஒரு சுலபமான குறுக்கு வழி.
இதற்க்கு முதலில் இந்த தளத்தில் Mp3tou செல்லுங்கள் உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Choose Background Image பகுதியில் உள்ள லிக்கை கிளிக் செய்யவும்.
- அதில் உங்கள் வீடியோவில் தெரியவேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- போட்டோ அதிகபட்சம் 5MB மேல் இருக்க கூடாது JPEG பைலாக இருக்க வேண்டும்.
- போட்டோவை தேர்வு செய்த வுடன் அந்த போட்டோ அப்லோட் ஆகி அந்த தளத்தில் சேர்ந்து விடும்.
- அடுத்து Step 2 உள்ள Choose backsound file என்பதை கிளிக் செய்து உங்கள் MP3 பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதிக பட்சம் 35MB தான் இருக்க வேண்டும்.
- MP3 பைலின் அளவை பொருத்து அது அப்லோட் ஆக நேரம் எடுக்கும் அதுவரை பொறுத்திருக்கவும். அப்லோட் ஆகி முடிந்ததும் கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள Go Create என்பதை கிளிக் செய்யவும.
- Go Create கிளிக் செய்ததும் உங்கள் வீடியோ ரெடியாகும். அதில் இரண்டு லிங்க் இருக்கும் Download it என்பதை கிளிக் செய்தால் வீடியோ உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகிவிடும்.
- டவுன்லோட் செய்த பிறகு யூடியுப் தளத்திற்கு சென்று upload பட்டனை அழுத்தி வீடியோவை யூடியூபில் பகிர்ந்து கொள்ளலாம்.
- அல்லது இந்த தளத்தில் உள்ள Upload it to youtube லிங்கை கிளிக் செய்து நேரடியாக யூடியுப் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
- ஆனால் அந்த முறை பாதுகாப்பானது இல்லை என்பதாலும் நமது ஈமெயில் முகவரிக்கு ஸ்பாம் மெயில்கள் அனுப்பப்படும் ஆபத்தும் உள்ளதால் அந்த முறையை உபயோகிக்க வேண்டாம்.
இந்த பதிவு பலரை சென்றடைய கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும்.
Comments