கூகுள்/கேபிள் சங்கர்/சுரேகா/நன்றி/பேஸ்புக்/Tech Shortly

கூகுள்: 
இணையத்தில் கலக்கி கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் புதியதாக Google Wallet என்ற புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது. தற்பொழுது இந்த மென்பொருளை Spirint Nexus 4G மொபைல்களில் உபயோகிக்கலாம். Citi bank நிறுவனத்தின் Master card சப்போர்ட் செய்கிறது. . இந்த வசதி இருந்தால் என்ன பண்ணலாம் என கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.



தற்பொழுது இந்த வசதி அமெரிக்காவில் மட்டும் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து நாடுகளுக்கும் வரலாம்.


சில நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம் என்னுடைய ஆங்கில தளமான Tech Shortly. இந்த தளத்திலும் கணினி சம்பந்தமாகவும்,இணையம் சம்பந்தமாகவும், மென்பொருட்கள் சம்பந்தமாகவும் பதிவுகளை இட்டு வருகிறேன். நீங்கள் வந்தேமாதரம் தளத்திற்கு கொடுத்த மேலான ஆதரவை www.techshortly.com தளத்திற்கும் கொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். நண்பர்கள் அங்கு உள்ள Followers,Facebook Fan box, Email Subscribe போன்றவற்றில் உறுப்பினர் ஆகிவிட்டால் புதிய பதிவுகள் உங்களை தேடி வரும். 

கேபிள் சங்கர்,சுரேகா-நன்றி
பதிவுலகில் இவர்களை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பதிவுலகில் வெகு நாட்களாக வெற்றி நடை போட்டு கொண்டு இருப்பவர்கள். தற்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து பேஸ்புக்கில் ஒரு குரூப் உருவாக்கி உள்ளனர். இதற்க்கு "கேட்டால் கிடைக்கும் ASK" என பெயரிட்டு உள்ளனர். 

எதுக்கு இந்த க்ரூப் என நீங்கள் கேட்கலாம் ஒரு சில நேரத்தில் நம்மை சுற்றியே பல தவறுகள் நடக்கும் கடைக்காரன் MRP விட அதிகமாக பணம் கேட்கலாம், பஸ்சில் கண்டக்டர் மீத சில்லறை தராமல் இருக்கலாம், ஹோட்டல்களில் உணவு தரமற்று இருக்கலாம் இப்படி ஏதாவது பல தவறுகள் நடக்கும். அது போன்ற நேரத்தில் நீங்கள் தவறை தட்டி கேட்பீர்கள் ஆனால் கடைக்காரனின் உனக்கு வேணாம்னா கிளம்பு என்று தெனாவெட்டாக பதில் சொல்லுவான். 

நீங்கள் சண்டை போட்டு கொண்டிருக்கும் பொழுதே அருகில் இருப்பவர் கூடுதல் விலை கொடுத்து அந்த பொருளை வாங்கி கொண்டு செல்வார்கள். நீங்கள் தனியாக அங்கே கத்திகொண்டிருக்க வேண்டியது தான். அது போன்ற தவறுகளை தட்டி கேட்க வந்துள்ளது தான் "கேட்டால் கிடைக்கும் ASK" இதில் சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். பின்பு உங்களுக்கு நேரும் பிரச்சினையை பகிருங்கள். உங்களுக்காக அனைவரும் குரல் கொடுப்பார்கள். அதற்க்கான தீர்வும் கிடைக்கும். ஆக வந்தேமாதரம் வாசகர்களும் "கேட்டால் கிடைக்கும் ASK" க்ரூப்பில் இணைந்து உங்கள் பிரச்சினையை பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றும் Ravi Nag என்பவர் இதில் பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகிறார். அவர் மேலும் பல தகவலை பகிர வேண்டும். 

மேலும் இந்த குழுமத்தில் இருக்கும் அனைவருக்கும் புதியதாக சேரப்போகும் அனைவருக்கும் மிக்க நன்றி.

Comments