இன்ட்லி, தமிழ்10 தளத்தில் கமென்ட் போட்டால் வரும் Notification ஈமெயிலை தடுக்க

தமிழ் பதிவர்களுக்கு முக்கியமான தளங்கள் இந்த இன்ட்லி மற்றும் தமிழ்10 தளங்கள்.  இந்த இரண்டு திரட்டிகளிலும் நம் பதிவுகளை இணைத்து அதன் மூலம் வாசகர்களை பெறுகிறோம். இந்த இரண்டு தளங்களிலும் வாசகர்கள் பதிவை பற்றி தங்கள் கருத்துக்களை வெளியிட கருத்துரை பெட்டிகளை வைத்துள்ளனர். இதில் வாசகர்களும் தங்கள் கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனால் இதில் உள்ள ஒரு பிரச்சினை வாசகர்கள் கருத்துரை போட்டதும் அதற்க்கான Notification ஈமெயில் உங்களின் முகவரிக்கு வரும். எத்தனை வாசகர்கள் கமென்ட் போட்டாலும் உங்கள் ஈமெயில் முகவரிக்கு notification வந்து கொண்டே இருக்கும். இதனை ஒரு சிலர் தொந்தரவாங்க நினைக்கலாம் அதில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான் தொடருங்கள்.

இந்த notification ஈமெயில்கள் வராமல் தடுக்கும் வசதிகளை அந்தந்த தளங்களே கொடுத்துள்ளன அவை எப்படி என கீழே பார்ப்போம்.

இன்ட்லி தளத்தில் ஈமெயில்கள் தடுக்க:
  • இதற்க்கு முதலில் இன்ட்லி தளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அங்கு உள்ள Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் கீழே படத்தில் உள்ள Email Notification Preferences பகுதிக்கு செல்லுங்கள்.
  • படத்தில் காட்டி இருக்கும் பகுதியில் உள்ள டிக் குறியை நீக்கி விட்டு கீழே உள்ள Save பட்டனை அழுத்தினால் இனி உங்கள் பதிவுக்கு வாசகர்கள் கமென்ட் போட்டாலும் அதற்க்கான Notification Email உங்களுக்கு வராது.
தமிழ்10 தளத்தில் இருந்து வரும் Notification Email தடுக்க:
  • இந்த லிங்கில் கிளிக் செய்து தமிழ் 10 தளத்திற்கு செல்லுங்கள். உங்களுடைய ஐடி பாஸ்வேர்ட் கேட்டால் கொடுத்துவிட்டு உள்ளே நுழையுங்கள். 
  • Modify என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் கீழே படத்தில் இருக்கும் பகுதியில் yes க்கு பதிலாக No என்பதை கொடுக்கவும்.
  • இதில் No தேர்வு செய்தவுடன் அதில் உள்ள SAVE பட்டனை அழுத்தி உங்கள் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இனி தமிழ்10 தளத்திலும் வாசகர்கள் கமென்ட் போட்டால் உங்களுக்கு notification Email வராது.
டிஸ்கி: எனக்காக நான் தேடிய பொழுது கிடைத்தது மற்றவர்களுக்கும் பயன்படும் என்பதால் பதிவில்.

Comments