12/07/2012

கூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி?

பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும்.

தற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணையதளத்திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கும் இந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் பயனர்களும் இனி தங்களுக்குள் குழுவை உருவாக்கி கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும் மற்றும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தி தங்கள் குழு உறுப்பினர்களுடன் பேசி கொள்ளலாம். மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


உருவாக்குவது எப்படி:
 • முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து இடது புறமாக உள்ள புதிய Communities என்ற ஐகானை கிளிக் செய்யவும் அல்லது இந்த லிங்கில் plus.google.com/communities கிளிக் செய்யவும்.
 • பிறகு Create a Community என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Public or Privacy என்பதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும். இதில் public தேர்வு செய்தால் உங்களுடைய குழு அனைவருக்கும் தெரியும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தெரிய வேண்டுமென்றால் Privacy என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
 • அடுத்து உங்கள் குழுவின் பெயரை கொடுத்து கீழே உள்ள Create  Community என்ற பட்டனை அழுத்தவும். 
 • இப்பொழுது வரும் விண்டோவில் உங்கள் குழுவிற்கான Logo, Description சேர்த்து Done editing என்ற பட்டனை அழுத்தவும். 

 •  அவ்வளவு தான் உங்களுக்காக குழு உருவாக்கப்பட்டு விடும் பின்பு உங்கள் குழுவை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 
மற்றும் உங்கள் Community-ல் உள்ள மற்றொரு நண்பருக்கும் அட்மின் வசதியை தர விரும்பினால் இந்த லிங்கில் Enable Admin Rights to Others சென்று எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.

Labels: ,

12/05/2012

ஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு

இந்தியாவின்  பிரபல வங்கியான ஐசிஐசிஐ தற்பொழுது புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு சேவையை துவங்கி உள்ளது. இதற்கு B2 Digital Banking என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஆன்லைன் வங்கி கணக்கின் மூலம் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்வது மட்டுமின்றி மின்சாரம், தொலைபேசி போன்றவைகளுக்காண பில் தொகையும் செலுத்த முடியும். மற்றும் இந்த சேமிப்பு கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு வருடத்திற்கு 3.5% என்ற வட்டி விகிதத்தில் கூடுதல் பணமும் கிடைக்கும்.


இந்த B2 ஆன்லைன் கணக்கை துவங்க நீங்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை மற்றும் zero balance-ல் கணக்கை தொடர முடியும்.  மற்றும் எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை. இந்த வங்கி கணக்கு தற்பொழுது சென்னை உட்பட சில இந்திய நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே பெற முடியும்.

வழிமுறைகள்:
 • B2 ஆன்லைன் சேமிப்பு வங்கி கணக்கு வேண்டுவோர் இந்த லிங்கில் சென்று Apply here என்ற படிவத்தை பூர்த்தி செய்து வங்கிக்கு அனுப்பவும். 
 • பிறகு படிவத்தில் கொடுத்த ID Proof, Address Proof மற்றும் ஒரு கலர் போட்டோ வை வைத்திருக்கவும்.  
 • மூன்று நாட்களுக்குள் வங்கி நபர் உங்களை தொடர்பு கொண்டு இவைகளை பெற்று கொள்வார்கள்.
 • பின்பு உங்கள் கணக்கு தயாரானவுடன் ஈமெயில் மற்றும் SMS மூலமாக உங்களுக்கு தகவல் அனுப்புவார்கள். 
 • மற்றும் உங்கள் கணக்கின் Secret card உங்கள் முகவரிக்கு அஞ்சலில் அனுப்புவார்கள். அதன் மூலம் நீங்கள் B2 ஆன்லைன் கணக்கை ஆக்டிவேட் செய்து கொண்டு உபயோகித்து கொள்ளலாம். 
மேலும் ஏதேனும் தகவல் வேண்டுவோர் இங்கு சென்று பார்த்து கொள்ளவும்.

(Thanks)

Labels:

11/02/2012

ஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய?

இதுவரை மெயில் டைப் செய்யும் பொழுது மற்ற மெயில்களை பார்க்க வேண்டுமானால் அதை டிராப்டில் சேமித்து இன்பாக்ஸ் பகுதிக்கு வந்து மெயிலை படித்து பின்பு மறுபடியும் ட்ராப்டில் சேமித்து உள்ள மெயிலை திறந்து வேலையை தொடர வேண்டும் இதனால் உங்களுடைய பொன்னான நேரம் தான் விரயம் ஆகும்.

ஜிமெயிலில் வாசகர்களுக்காக புதிய வகையில் Compose விண்டோ உருவாக்கி இருக்கிறார்கள். இந்த புதிய compose விண்டோ chat box போன்றே இருக்கும் இதன் மூலம் நாம் ஏதேனும் ஈமெயில் டைப் செய்து கொண்டிருக்கும் பொழுதே மற்ற மெயில்களை ஓபன் செய்து பார்க்கலாம் அல்லது ஏதேனும் புதிய மெயில் வந்தால் உடனே அறிந்து கொள்ளலாம். மற்றும் ஒரே நேரத்தில் நிறைய compose விண்டோ திறந்து கொள்ள முடியும். இந்த புதிய வசதியினால் வீணாகும் நேரத்தை சேமிக்க முடியும். மேலும் அறிய இங்கு செல்லுங்கள்.


Read more »

Labels:

10/27/2012

விண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விண்டோஸ் 8 மென்பொருளை வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். டேப்லெட், ஸ்மார்ட் போன் என்று கணினி மயமாகி கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் இந்த விண்டோஸ் 8 மென்பொருளை கணினிகள் மட்டுமின்றி டேப்லெட் கணினிகளிலும் உபயோகிக்குமாறு அமைத்துள்ளது இதன் சிறப்பு. உலவிகளில் உபயோகிப்பதை போல விண்டோஸ் 8 கணினிகளில் Apps களை உபயோகிக்கலாம் மற்றும் தொடுதிரை(Touch Screen) வசதியும் உள்ளது.

Read more »

Labels:

10/20/2012

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்

தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) என்பதை பல பேர் கேள்வி பட்டிருப்பீர்கள். RTI என்பது 2005 ல் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தினால் அரசாங்கத்தை பற்றியோ, அரசாங்க அதிகாரிகளை பற்றியோ ஏதேனும் தகவல் தெரிய வேண்டுமெனில் நீதிமன்றத்தை அணுகி பெற்று கொள்ளலாம். இதில் சில விதி விலக்குகளும், வரம்புகள்  உள்ளன.

Read more »

10/18/2012

கூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி?

கூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில் இணைந்தவர்களுக்கு மட்டுமே அளிக்கிறது. அந்த புதிய வசதிகள் என்ன என்பதையும் Gmail Field trial சேவையை எப்படி உங்கள் கூகுள் கணக்கில் ஆக்டிவேட் செய்வது என்றும் கீழே காணலாம்.

Read more »

Labels: ,

10/16/2012

பேஸ்புக்கில் பயனுள்ள சில புதிய வசதிகள்

உலகின் முதன்மையான சமூக இணையதளமான பேஸ்புக்கில் வாசகர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்கள். தற்பொழுது அளித்துள்ள சில புதிய வசதிகளை பற்றி காணலாம்.

Smileys On Comments:
இது பேஸ்புக் பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள வசதி. இதுவரை பேஸ்புக் சேட்டில் மட்டும் பயன்படுத்தி வந்த Smiley வசதி தற்பொழுது பேஸ்புக் கமென்ட்டிலும் உபயோகிக்கலாம்.


Seen count on Facebook Group:
பேஸ்புக்கில் உள்ள Group வசதி பற்றி அனைவருக்கும் தெரியும். நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை உண்டாக்கி பகிருந்து கொள்வது. பேஸ்புக் குழுவில் நீங்கள் பகிரும் பதிவுகளை எத்தனை பேர் பார்த்தார்கள் என அறியும் வசதியை அறிமுக படுத்தியுள்ளது பேஸ்புக் தளம். இந்த வசதி இதற்கு முன் பேஸ்புக் பக்கத்தில் பகிரும் பதிவுகளில் மட்டும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

New Navigation Bar :
பேஸ்புக் தளம் தனது navigation bar ஐ மாற்றி அமைக்க இருக்கிறது. பேஸ்புக்கில் நமக்கு வரும் notifications காட்டும் ஐகான்களை இடது பக்கத்தில் இருந்து மாற்றி வலது பக்கத்தில் கொண்டு வர இருக்கிறது. 


இந்த மாற்றம் இன்னும் யாருக்கும் வரவில்லை இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளது. 

இந்த புதிய வசதிகள் பற்றிய உங்கள் அபிமானத்தை கீழே கருத்துரையில் தெரிவிக்கவும்.

Labels:

10/12/2012

கூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் இடத்தை கண்டறிய

உலகில் மிகப்பெரிய ரயில் நிறுவனங்களுள் இந்திய ரயில்வே துறையும் ஒன்று. சமீப காலமாக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் மேப் உதவியுடன் இந்திய ரயில்கள் தற்போது பயணித்து கொண்டிருக்கும் வசதியை அளித்துள்ளது.

Read more »

Labels:

10/10/2012

QR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி

QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:
 • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
 • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
 • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
 • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.

பதிவு பயனுள்ள தாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Labels:

10/09/2012

உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மென்பொருள்

இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது. குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் Android போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்று Android போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம்.

Read more »

Labels: ,

10/08/2012

பேஸ்புக்கில் உங்களின் Search History அழிப்பது எப்படி

பேஸ்புக் இணையதளத்தில் நண்பர்களை கண்டறிய Search வசதியை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறோம். கூகுளை போலவே பேஸ்புக்கும் நம்முடைய தேடல்களை சேமிக்கின்றது. அந்த தேடல்களை பேஸ்புக்கில் இருந்து நீக்குவது எப்படி என்று இங்கு காண்போம்.

பேஸ்புக் தேடல் விவரங்களை அழிப்பது எப்படி:
 • முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மீது கிளிக் செய்து உங்களின் டைம்லைன் பக்கத்தை திறந்து கொள்ளவும்.
 • பிறகு அங்கு உள்ள Activity Log என்ற பட்டன் மீது கிளிக் செய்யவும்.
Read more »

Labels:

10/05/2012

தமிழக அரசின் மழலைக் கல்வி: ஆன்லைனில் குழந்தைகளுக்கான அனிமேஷன் பாடங்கள், கதைகள், பாடல்கள்

இன்று இணையத்தில் உலவி கொண்டிருக்கும் பொழுது கண்ணில் பட்டது இந்த இணையதளம். Tamilvu.org என்ற இணையதளம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த தளத்தின் முக்கிய பயன் என்னவென்றால் இணையத்திலேயே தமிழ் மொழியை கற்கலாம். மற்றும் அதற்க்கான சான்றிதழும் வழங்குகிறார்கள். தமிழில் Diplomo, Degree போன்றவைகளை இணையத்திலேயே கற்க முடியும். தேவையானவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இதில் உள்ள இன்னொரு வசதி மழலைக் கல்வி சிறு குழந்தைகளுக்கு பாடங்கள், பாடல்கள், சிறுகதைகள், எழுத்து பயிற்சி போன்ற அனைத்தையும் எளிதாக புரியும் படி அனிமேஷன் வடிவில் அமைத்து இருக்கிறார்கள்.

Read more »

Labels:

10/03/2012

உலகின் கடினமான மொழிகளை இணையத்தில் சுலபமாக கற்க

ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துக்களை பரிமாறி கொள்வதில் மொழி மிகவும் அவசியமாகிறது. இந்த மொழிகள் மனிதர்கள் மற்றும் அவர்களின் இருப்பிடத்தை பொறுத்து மாறுபடுகிறது. இது போன்று உலகில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மொழிகள் இருக்கிறதாம். இதில் சில மொழிகளே உலகில் பெரும்பாலானவர்களால் பேசப்படுகிறது.


Read more »

9/07/2012

பதிவர்களுக்காக ட்விட்டரின் புதிய பயனுள்ள வசதி

பேஸ்புக்கிற்கு அடுத்த படியாக  ட்விட்டர் மிகப்பெரிய சமூக இணையதளம் ஆகும். சமூக தளங்கள் நம் பதிவுகள் பலரை சென்றைய உதவுகிறது. தற்பொழுது சமூக தளங்களுக்கு இடையேயான போட்டியில் அந்த தளங்கள் புதிய வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி வருகின்றன.  அந்த வரிசையில் ட்விட்டர் சமூக இணையதளம் பதிவர்களுக்காக ஒரு புதிய வசதியை அளித்துள்ளது. இந்த புதிய வசதியின் படி இதுவரை நீங்கள் பகரிந்த ட்வீட்களை விட்ஜெட்டாக உங்க பிளாக்கில் வைத்துக்கொள்ளலாம். இதற்கு முன்னர் இந்த வசதியை சில மூன்றாம் தளத்தின் உதவியுடன் பிளாக்கில் இனி  அந்த வசதியை ட்விட்டர் தளமே அறிமுக படுத்தி உள்ளது.
Read more »

Labels: ,

8/28/2012

Dropbox கணக்கை ஹாக்கர்களிடமிருந்து பாதுகாக்க 2-Step verification வசதியை ஆக்டிவேட் செய்ய

கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை வழங்கும் Dropbox இணையதளம் தற்பொழுது உங்கள் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து பாதுகாக்க 2 Step verification என்ற வசதியை அறிமுக படுத்தி உள்ளது. இந்த வசதியை உங்கள் கணக்கில் எப்படி ஆக்டிவேட் செய்வது என்று கீழே பாப்போம்.2-Step Verification என்றால் என்ன:
ஒரு ஆன்லைன் கணக்கில் நுழையும் பொழுது ஒரு ஐடி மற்றும் பாஸ்வேர்ட் இருந்தால் அந்த சேவையை பயன்படுத்த முடியும். ஆனால் அந்த முறையில் ஹாக்கர்கள் எளிதாக நம் கணக்கை திருடி விடுகிறார்கள் என்பதால் 2 step verification என்ற வசதியை அறிமுக படுத்தினர். இதன் மூலம் உங்கள் கணக்கில் உள்ளே நுழைய உங்களுடைய ஐடி, பாஸ்வேர்ட் மட்டும் இருந்தால் போதாது உங்கள் மொபைலில் வரும்  Secret Code கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும். இதை தான் 2 Step verification என்று கூறுகிறோம்.

Dropbox கணக்கில் 2-step verification ஆக்டிவேட் செய்ய:
 • முதலில் dropbox இணையதளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். வலது பக்க மேலே உள்ள உங்கள் பெயருக்கு அருகில் உள்ள கிளிக் செய்து வரும் மெனுவில் Settings என்பதை கிளிக் செய்யவும். 


 • பிறகு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Security Tab கிளிக் செய்யவும்.
 • அடுத்து கீழே உள்ள Two Step Verification - Disable என்று இருக்கும், அதற்க்கு அருகில் உள்ள Change என்ற லிங்கை கிளிக் செய்யவும். 
 • இனி அடுத்து வரும் விண்டோவில் Get Started என்பதை கிளிக் செய்யவும்.
 • அடுத்து உங்களுடைய பாஸ்வேர்ட் கேட்கும் அதை கொடுத்து Next பட்டனை அழுத்தவும். 
 • அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் இரண்டு வகையான வசதிகள் காணப்படும். ஒன்று Sms வழியாக Secret code பெறுவது மற்றொன்று மொபைல் மென்பொருள் மூலமாக உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும். 
 • SMS வழியாக பெறுவது சுலபம் என்பதால் நான் அதை தேர்வு செய்துள்ளேன். Next பட்டனை அழுத்தவும். 
 • அடுத்த விண்டோவில் உங்களின் நாட்டினையும் மொபைல் எண்ணையும் கொடுத்து Next பட்டனை அழுத்தவும். 
 • அடுத்து உங்களுக்கு ஒரு சீக்ரெட் கோட் தெரியும் அதை குறித்து வைத்து கொள்ளவும். உங்களிடம் மொபைல் இல்லாத பொழுது இந்த கோடின் உதவியுடன் நீங்கள் Dropbox கணக்கில் நுழைந்து கொள்ளலாம். 
 • முடிவில் Enable two step verification என்ற பட்டனை அழுத்தினால் கீழே இருப்பதை போல செய்தி வரும். 


அவ்வளவு தான் உங்களுடைய கணக்கில் 2-step verification வசதி ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டது.  இனி ஹாக்கர்கள் பயமில்லாமல் உங்கள் கணக்கை உபயோகபடுத்தி கொள்ளலாம். 

மேலும் ஏதேனும் சந்தேகம் எனில் கீழே கருத்துரை பகுதியில் கேட்கவும்.

(Thanks)

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Labels: ,

8/24/2012

கூகுள் பிளசில் புரொபைல் URL மாற்றும் வசதி

கூகுள் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமூக இணைய தளமான கூகுள் பிளசில் தொடர்ந்து புதிய வசதிகளை புகுத்தி வருகின்றனர். இப்பொழுது கூகுள் நம்முடைய URL மாற்றி கொள்ளும் வசதியை புகுத்தி உள்ளனர்.

அதாவது நீங்கள் கூகுள் பிளசில் ஒரு கணக்கு உருவாக்கும் பொழுது உங்களுக்கென ஒரு 21 இலக்க ஐடிஎண் கொடுத்து கூகுள் பிளஸ் URL அமைக்கப்படும். இதை ஞாபக வைத்து கொள்வது அரிது. ஆனால் பேஸ்புக் தலத்தில் இந்த எண்ணுக்கு பதிலாக நமக்கு விருப்பமான பெயரை கொடுத்து URL மாற்றி கொள்ளும் வசதி உள்ளது. 

இனி கூகுள் பிளசிலும் URL மாற்றி கொள்ளும் வசதி புகுத்தி உள்ளனர். உதாரணமாக 
Read more »

Labels: ,

8/13/2012

கூகுளின் புதிய நுழைவு பக்கம்(Multiple Login Page) ஆக்டிவேட் செய்ய

கூகுளில் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பார். ஒரே நேரத்தில் அனைத்து கணக்குகளையும் உபயோகிக்க கூகுள் வழங்கி உள்ள வசதி Multiple-sign in வசதி. இதை மேலும் சுலப படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் தற்பொழுது புதிய Multiple Accounts Login page வசதியை அறிமுக படுத்த இருக்கிறது.  இனி கூகுள் தளங்களின் நுழைவு பக்கத்தில் பல கூகுள் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். நுழைவு பக்கத்தில் நீங்கள் சேர்த்த அனைத்து கணக்குகளையும் காட்டும் அதில் உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்தால் அந்த கணக்கிற்குள் நுழைந்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ஐடி பாஸ்வேர்ட் தர வேண்டிய அவசியமில்லை.

Read more »

Labels:

8/08/2012

உங்களின் ஹாட்மெயில் கணக்கை Outlook.com தளத்திற்கு மாற்றுவது எப்படி?

சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது மெயில் சேவையான ஹாட்மெயில் சேவைக்கு பதில் அவுட்லுக்.காம் என்ற புதிய ஈமெயில் சேவையை அறிமுக படுத்தி உள்ளது. வெளியிட்ட 8 நாட்களுக்குள் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்கள் பெற்றுள்ளது அவுட்லுக் தளம்.


புதுசா அப்படி என்னதாம்பா இருக்கு அவுட்லுக்லன்னு கேக்குறீங்களா ஒண்ணுமே இல்லைங்கிறது தான் புதுசா இருக்கு. சைட்ல விளம்பரம், மேல விளம்பரம் கீழே விளம்பரம்னு ஜிமெயிலை போல ஒரே விளம்பரமா இல்லாமல் மிகவும் எளிமையாக உள்ளது. முகப்பு பக்கத்தில் மெயிலை தவிர வேறு எதுவும் இல்லை. நான் சொல்வதை விட நீங்களே பயன்படுத்தி பார்த்தல் தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

புதியதாக அவுட்லுக் தளத்தில் கணக்கு உருவாகக் வேண்டுமெனில் இங்கு சென்று உருவாக்கி கொள்ளுங்கள். அல்லது ஏற்க்கனவே ஹாட்மெயிலில் உள்ள கணக்கை (techshortly@hotmail.com) அவுட்லுக் முகவரிக்கு (techshortly@outlook.com) மாற்றுவது எப்படி என பார்ப்போம்.

 • முதலில் உங்களின் ஹாட்மெயில் ஈமெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
 • Options பகுதியில் கிளிக் செய்து Upgrade to outlook.com என்பதை கொடுக்கவும். 

 • அடுத்து இன்னொரு விண்டோ வரும் அதில் Upgrade to outlook என்ற பட்டனை அழுத்தவும். 
 • இப்பொழுது உங்களுடைய ஈமெயில் தோற்றம் புதிய அவுட்லுக் தோற்றத்திற்கு மாறிவிடும். ஆனால் உங்களுடைய ஹாட்மெயில் முகவரி மாறி இருக்காது(techshortly@hotmail.com) என்று தான் இருக்கும். 
 • ஈமெயில் முகவரியை மாற்ற Options ஐகானை கிளிக் செய்து more mail settings என்பதை கிளிக் செய்யவும். 
 • இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Rename your  email address என்பதை கிளிக் செய்யவும். 

 • பிறகு ஈமெயில் முகவரியை மாற்றுவதற்கான விண்டோ ஓபன் ஆகும் அதில் outlook.com என்பதை தேர்வு செய்து பிறகு உங்களின் ஈமெயில் பயனர் பெயரை கொடுத்து Save செய்து விட்டால் போதும் உங்களின் கணக்கு முதிய முகவரிக்கு மாறிவிடும். 

இப்பொழுது உங்கள் கணக்கு புதிய ஐடிக்கு மாறிவிடும். 

மற்றும் அவுட்லுக் மெயிலில் உபயோகிக்கும் அனைத்து ஷார்ட்கட் கீங்களை பற்றி அறிந்து கொள்ள இந்த லிங்கில் Outlook.com shortcut keys செல்லவும்.  Labels:

8/07/2012

கூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photoshop-களில் உபயோகிப்பது எப்படி?

உங்கள் கணினியில் ஒரே மாதிரியான எழுத்துருக்களை உபயோகித்து போர் அடிக்குதா? நீங்கள் உபயோகிக்கும் டிசங்களுக்கு புது வகையான எழுத்துருக்கள் தேவை படுகிறதா அதுவும் இலவசமாக? ஆம் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. கூகுள் இணையதளம் Web Fonts என்ற ஒரு அருமையான சேவையினை வழங்கி வருகிறது. இதில் சுமார் 500 க்கும் அதிகமான புதுவகையான எழுத்துருக்கள் நிறைந்து காணப்படுகின்றன.  இதனை எப்படி உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து வேர்ட், போட்டோஷாப் போன்ற மென்பொருட்களில் உபயோகிப்பது என பார்ப்போம்.

Read more »

Labels:

8/03/2012

ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய பதிப்புகள் டவுன்லோட் செய்ய

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.
Read more »

8/01/2012

கூகுள் பிளசில் Bold, Italic, Stikethrough போன்ற டெக்ஸ்ட் பார்மட்களை உபயோகிப்பது எப்படி?

ஒரு சில பதிவுகளை பகிரும் பொழுது அதில் முக்கியமான வார்த்தையை Bold ஆக கொடுப்பது நம் வழக்கம். அப்படி தருவதனால் நீங்கள் சொல்ல வரும் கருது மற்றவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.  ஆனால் கூகுள் பிளஸ் போன்ற சமூக தளங்களில் டெக்ஸ்ட் பார்மட்களை நேரடியாக உபயோகிக்க முடியாது. ஆனால் ஒரு சில ரகசிய குறியீடுகளை உபயோகிப்பதன் மூலம் Bold, Italic மற்றும் Strike through போன்ற ஸ்பெஷல் பார்மட்களை உபயோகிக்க முடியும்.
Read more »

Labels:

7/31/2012

கூகுள் பிளசில் பிரபலமான Hangouts வசதி இனி ஜிமெயில் பயனர்களுக்கும்

கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் என்ற சமூக வலைதளத்தை வெளியிட்டு ஏறக்குறைய ஓராண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. குறிகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை கூகுள் பிளஸ் இணையதளத்தில் பல்வேறு பயனுள்ள வசதிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானதும்  மிகப்பிரபலமான வசதி என்றால் அது Hangouts என்ற வீடியோ சேட்டிங் வசதி தான். கூகுள் பிளஸ் நண்பர்களுக்கு இடைய மணிக்கணக்கில் இலவசமாகவும், ஒரே சமயத்தில் பல்வேறு நண்பர்களுடன் உரையாடலாம் இப்படி மேலும் பல பயனுள்ள வசதிகள் உள்ளதான் ஹாங்அவுட்ஸ் மிகவும் பிரபலமாகி உள்ளது.


இப்பொழுது கூகுள் நிறுவனம் ஹாங்அவுட்ஸ் வீடியோ சேட்டிங் வசதியை ஜிமெயிலிலும் சேர்த்து உள்ளனர். ஜிமெயிலில் பழைய வீடியோ சேட்டிங் வசதியை நீக்கி விட்டு புதிய தொழில் நுட்பத்தினாலான ஹாங்அவுட்ஸ் வசதியை இணைத்துள்ளனர். இனி ஜிமெயிலில் உள்ள நண்பர்கள் மற்றும் கூகுள் பிளசில் உள்ள நண்பர்களுடன் ஜிமெயிலில் இருந்துகொண்டே வீடியோ சேட்டிங் செய்யலாம்.

ஒரே நேரத்தில் ஒன்பது நண்பர்களுடன் சேட்டிங் செய்ய முடியும் மற்றும் சேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது யூடியுப் வீடியோக்களை பார்க்கவும் நண்பர்களுக்கு பகிரவும் முடியும்.


இந்த வசதியை கூகுள் நிறுவனம் படிப்படியாக அனைவருக்கும் வழங்கி கொண்டு உள்ளது. ஆகவே ஒரு சில வாரங்களில் அனைத்து ஜிமெயில் கணக்கிற்கும் இந்த வசதி சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Source

Labels:

7/26/2012

கூகுள் தேடுபொறியில் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

தேடியந்திரங்களில் யாரும் தொட முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது கூகுள் இணையதளம் ஆகும். மொபைல்களில் இன்டர்நெட் வசதி வந்த பிறகு கிராமங்களில் கணினியை உபயோகிக்காதவர்கள் கூட மொபைல் மூலம் கூகுளின் வசதியை அறிந்துள்ளனர். இவ்வளவு பேரையும் கவர்ந்திழுக்க காரணம் அதிலுள்ள வசதிகள்.

அதுமட்டுமில்லாமல் தேய்ந்து போன ரெக்கார்டை திரும்ப திரும்ப தேய்க்காமல் வாசகர்கள் பயன்பெறும் வகையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய வசதிகளை புகுத்தி வருவதே கூகுளின் சிறப்பு. அந்த வகையில் தற்பொழுது சில புதிய வசதிகளை கூகுள் தேடியந்திரந்தில் அறிமுக படுத்தி உள்ளனர். அவைகளை கீழே பார்ப்போம்.
Read more »

Labels:

7/24/2012

26 அக்டோபரில் வெளி வருகிறது Windows 8 சலுகை விலையில் அப்டேட் செய்ய


கணினி துறையில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் இயங்கு தளமான விண்டோசின் அடுத்த பதிப்பை வெளியிட இருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். முந்தைய பதிப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தொடுதிரை வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள Windows 8 இயங்கு தளத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்க்கு முன் விண்டோஸ் 8 -இன் Consumer Preview மற்றும் Release Preview என்ற சோதனை பதிப்புகளை வெளியிட்டு இருந்தது. இந்த இரண்டு பதிப்புகளையும் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கியது. பயனர்களின் கருத்துக்களின் படி அதில் இருந்த பிழைகளை நீக்கி வரும் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி இந்த Windows 8 மென்பொருள் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

ஆகவே விண்டோஸ் 8 சோதனை பதிப்புகளை உபயோகப்படுத்தி கொண்டிருக்கும் பயனர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் அதனை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமெனில் விண்டோஸ் 8 மென்பொருளின் புதிய வெர்சனை உங்கள் கணினியில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் விண்டோசின் முந்தைய பதிப்புகலான XP, Vista, Windows 7 ஆகியவைகளை உபயோகித்து கொண்டிருந்தால் இந்த புதிய விண்டோஸ் 8 மென்பொருளை சலுகை விலையில் அப்டேட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.

அதாவது வரும் 31 January 2013 முன் விண்டோஸ் 8 மென்பொருளை $39.95 (around Rs. 2000) கொடுத்து ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம். நேரடியாக ஸ்டோர்களில் சென்று DVD யாக வாங்கினால் $69.99 (around Rs. 4000) பெற்று கொள்ளலாம். 

இந்த சலுகை விலை மேற்கூறிய தேதிக்குள் அப்டேட் செய்பவர்களுக்கு மட்டுமே.  ஆகவே உங்களுக்கு விண்டோஸ் 8 மென்பொருள் வேண்டுமென்றால் வெளியிட்ட தேதியிலிருந்து மேலே குறிப்பிட்ட தேதிக்குள் அப்டேட் செய்து கொள்ளவும். மற்றொரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் விண்டோசின் ஒரிஜினல் வெர்சன் உபயோகிப்பவர்கள் மட்டுமே இந்த சலுகை வசதியை பெற முடியும்.

Labels:

7/21/2012

இந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்

கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று நம்மிடம் பணம் இல்லாத நேரத்திலும் ஏதேனும் முக்கியமான பொருள் வாங்க வேண்டி இருந்தால் அக்கம் பக்கம் கடன் கேட்டு அலைய வேண்டியதில்லை.  கிரெடிட் கார்ட் இருந்தால் ஆன்லைனில் பொருட்களை வாங்க முடியும். மற்றும் ஏராளமான பயன்களை கிரெடிட் கார்ட்கள் வழங்குகிறது.


கிரெடிட் கார்ட் வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. கிரெடிட் கார்ட் வாங்க அனைத்து தகுதிகள் இருந்தாலும் அப்ப்ளிகேஷன் கொடுத்து அப்ரூவலுக்காக நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும். (எனக்கு Barclays bank கார்ட் வர இரண்டு மாதம் ஆச்சு). ஆனால் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் அப்படி இல்லை ஆன்லைனில் கிரடிட் கார்ட் அப்ளை செய்து அதற்கான அப்ப்ரூவலையும் உடனே பெற்று கொள்ளலாம். 


இப்பொழுது இந்தியாவிலும் இந்த திட்டம் வர இருக்கிறது. பிரபல வங்கியான  Standard Chartered Bank முதன் முதலில் அறிமுக படுத்த இருக்கிறது. இனி கிரெடிட் கார்ட்களை ஆன்லைனில் அப்ளை செய்வது மட்டுமின்றி அப்ரூவலையும் சில நிமிடங்களிலேயே பெற முடியும். அதற்க்கான வழிமுறைகளை கீழே காண்போம். 


ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி: 

இந்த வசதியை உபயோகிக்க முதலில் Standard Chartered Bank இந்த லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான கார்டை தேர்வு செய்து அதற்க்கு கீழே இருக்கும் Apply Now என்ற பட்டனை கிளிக் செய்யவும். 


அடுத்து அதற்க்காக கொடுக்கப்படும் படிவத்தை உங்களின் சரியாக விவரங்களுடன் பூர்த்தி செய்து Proceed கொடுத்தால் போதும். அடுத்த சில நிமிடங்களின் உங்களின் கிரெடிட் கார்ட் அப்ரூவல் செய்தியை ஆன்லைனில் பார்த்து கொள்ளலாம்.  உங்களின் கிரெடிட் கார்ட் அப்ரூவல் ஆகிவிட்டால் அந்த வங்கியில் நபர்கள் உங்களை அணுகி உங்களின் சான்றிதழ்களை பெற்று கொள்வார்கள். 

அந்த சான்றிதழ்களை உங்கள் வங்கிக்கு அனுப்பி உங்களின் கடைசி கட்ட அனுமதியையும் வழங்கி விடுவார்கள். இந்த லிங்கில் application statusசென்று உங்களின் விவரங்களை கொடுத்தால் உங்களின் கிரெடிட் கார்ட் செயல்கள் எந்த நிலையில் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். 

இனி எந்த கால விரையமுமின்றி கிரெடிட் கார்ட்களை ஆன்லைனில் அப்ளை செய்து பெற்று கொள்ளலாம். கிரெடிட் கார்டில் எந்த அளவு பயன் உள்ளதோ அதை விட இரு மடங்கு ஆபத்தும் உள்ளது. சரியாக பணம் கட்ட தவறினால் மீட்டர் வட்டி கணக்கில் உங்களுக்கு அபராதம் விதிப்பார்கள். கவனமாக இருக்கவும்.

இன்று நடைபெறும் இந்தியா vs இலங்கை விளையாடும் கிரிக்கெட் போட்டியை ஆன்லைனில் காண இங்கே செல்லவும். 

Labels:

7/17/2012

மவுசை தொடாமலே இணைய பக்கங்களில் உள்ள லிங்கை திறக்க [பிரவுசர் ட்ரிக்ஸ்]

ஒவ்வொரு இணைய பக்கங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக  மற்ற பதிவுகளின் லிங்க் கொடுத்து இருப்பர். மவுஸின் மூலம் அந்த லிங்கை கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட பதிவிற்கு அல்லது மற்ற இணையதளங்களுக்கு செல்ல முடியும். இது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது அந்த மவுசை தொடாமலே குறிப்பிட்ட லிங்கை எப்படி கிளிக் செய்வது என்று பார்க்கலாம். கேட்பதற்கே சுவாரஸ்யமா இருக்குல்ல வழிமுறையை அறிய கீழே தொடருங்கள்.

கூகுள் குரோம் பயனர்கள்:

குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் இந்த Dead Mouse நீட்சியை உங்கள் குரோம் உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டால் ஆகியதும் குரோம் உலவியை reload செய்யுங்கள். பிறகு ஏதேனும் இணைய பக்கத்தை திறந்து அந்த பக்கத்தில் உள்ள லிங்கில் முதல் எழுத்துக்களை டைப் செய்யுங்கள். டைப் செய்ததும் அந்த எழுத்தில் உள்ள லிங்க் மேலும் கீழும் அசைவதை காணுங்கள்.

உதாரணமாக bbc news என்று லிங்க் கொடுத்து இருந்தால் நீங்கள் bbc என்று டைப் செய்தால் போதும். அந்த லிங்க் மேலும் கீழும் அசையும். உங்கள் கீபோர்டில் Enter அழுத்தினால் அந்த லிங்க் திறக்கும். புதிய டேபில் திறக்க Shift + Enter கொடுக்கவும்.


ஒரே பெயரில் நிறைய லிங்க் இருந்தால் Tab அழுத்தி சரியான லிங்கை தேர்வு Enter கொடுக்கவும். 


பயர்பாக்ஸ் பயனர்கள்:
பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்களுக்கு இது மிகவும் சுலபம் இதற்காக எந்த நீட்சியையும் உபயோகிக்க தேவையில்லை. பயர்பாக்ஸ் பிரவுசரை திறந்து ஏதேனும் இணைய பக்கத்தை ஓபன் செய்து "/" slash கீயை அழுத்தி பிறகு அந்த லிங்க் எழுத்தை அழுத்தினால் அந்த லிங்க் highlight ஆகும். பிறகு Enter கீயை அழுத்தினால் அந்த லிங்க் ஓபன் ஆகும். 

உதாரணமாக world cup என்று ஒரு லிங்க் இருக்கிறது என வைத்து கொள்வோம். / அழுத்தினால் ஒரு சிறிய விண்டோ வரும் அதில் wor என்று டைப் செய்தால்  போதும் அந்த லிங்க் ஹைலைட் ஆகும் பிறகு Enter கீயை அழுத்தினால் அந்த லிங்க் திறந்து விடும். 


இந்த வழிகளில் மவுசை தொடாமல் இணைய பக்கங்களில் உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.

Labels: ,

7/13/2012

நீட்சி உதவியின்றி குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக சேமிக்க

உலவிகளுக்கான போரில் கூகுள் குரோம் வெல்ல காரணம் அடிக்கடி வெளியிடப்படும் புதிய வசதிகள். இதற்க்கு முன் இணைய பக்கங்களை PDF பைல்களாக மாற்ற சில நீட்சிகள் மற்றும் இணையதளங்களின் உதவியை நாட வேண்டி இருந்தது. ஆனால் கூகுள் குரோம் பயனர்கள் எந்த நீட்சியின் உதவியின்றி சுலபமாக இணைய பக்கங்களை PDF பைல்களாக தங்களுடைய கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதற்க்கான வழிமுறையை கீழே பார்ப்போம்.
Read more »

Labels:

7/11/2012

கூகுள் குரோமில் Video Chatting மற்றும் சில பயனுள்ள வசதிகள்

குரோமின் புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். இந்த புதிய பதிப்பில் Video Chatting, Improved Cloud Printer போன்ற முக்கியமான வசதிகளை புகுத்தி உள்ளது.

ஒன்று இது நாள் வரை மென்பொருட்கள் மற்றும் இணைய தளங்கள் மூலம் கிடைத்த வீடியோ சேட்டிங் வசதி இனி எந்த மென்பொருளின் துணையுமின்றி கூகுள் குரோமிலே பெற்று கொள்ளலாம். getUserMedia Api என்ற மென்பொருள் மூலம் இந்த வசதியை புகுத்தி உள்ளது.இந்த வசதிகளை   Magic Xylophone மற்றும் webcam toy போன்ற தளங்கள் மூலம் சோதிக்கலாம்.  இந்த புதிய பதிப்பில் Video Rotate, motion detection, face detection போன்ற வசதிகள் உள்ளது. 


ஒவ்வொரு நாளும் லட்ச கணக்கானவர்கள் உபயோகிக்கும் இந்த வீடியோ சேட்டிங் வசதி குரோம் உலவியிலேயே வந்தது பெரும்பாலானவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். 

இந்த பீட்டா வெர்சனில் பிரிண்டிங் விண்டோவில் உங்களின் கிளவுட் பிரின்டர்களை டீபால்டாக இணைத்துள்ளது. ஆகவே நீங்கள் சுலபமாக கிளவுட் பிரிண்டர்களில் பிரின்ட் செய்ய முடியும். இந்த புதிய வசதிகளை பெற Chrome Beta 21.0 வெர்சனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


Labels:

7/09/2012

ஜிமெயில் மூலம் அனுப்ப முடியாத பைல் வகைகளின் பட்டியல் விவரங்களுடன்


ஜிமெயிலில் 25MB அளவுடைய பைல்களை அட்டாச் செய்து மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு சில பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக ஜிமெயில் நிறுவனம் சில பைல் வகைகளை தன் மூலம் அனுப்புவதை அனுமதிப்பதில்லை (உ-ம் .exe).  சுமார் இந்த பைல்வகைகளை Zip செய்து அனுப்பினாலும் சரியாக கண்டறிந்து தடுத்து விடும். 


அது போன்று ஜிமெயில் மூலம் அனுப்ப முடியாத 29 பைல்வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

ExtensionTypeDeveloper
.ADEAccess ProjectMicrosoft
.ADPAccess ProjectMicrosoft
.BATDOS batch fileMicrosoft
.CHMHTML Help fileMicrosoft
.CMDWindows CommandMicrosoft
.COMDOS Command FileN / A
.CPLWindows Control PanelMicrosoft
.EXEWindows Executable FileMicrosoft
.HTAHTML ApplicationMicrosoft
.INSInternet Settings FileMicrosoft
.ISPIIS Internet Provider settingsMicrosoft
.JSEJScript Encoded FileMicrosoft
.LIBGeneric Data LibraryN/A
.MDECompiled Access Add-inMicrosoft
.MSCConsole Snap-in Control Microsoft
.MSPWindows Installer PatchMicrosoft
.MSTInstaller Setup TransformMicrosoft
.PIFProgram Information FileN/A
.SCRWindows ScreensaverMicrosoft
.SCTScitex Continuous Tone FileScitex
.SHBWindows Document ShortcutMicrsoft
.SYSWindows System FileMicrosoft
.VBVBScript FileMicrosoft
.VBEVBScript Encoded Script FileMicrosoft
.VBSVBScript FileMicrosoft
.VXDVirtual Device DriverN/A
.WSCWindows Script ComponentMicrosoft
.WSFWindows Script FileMicrosoft
.WSHWindows Script Host SettingsMicrosoft

இந்த பட்டியலில் உள்ள ஒரு சில பைல்வகைகளை File type Rename செய்து அனுப்பினால் ஜிமெயில் மூலம் அனுப்ப முடியும். உதாரணமாக .exe என்பதை .jpg என்று மாற்றி மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். உங்களின் நண்பர் அதை பழைய படி .exe மாற்றி விட்டால் போதும் அந்த மென்பொருளை உபயோகித்து கொள்ளலாம். 

Thanks

Labels:

7/06/2012

9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற

இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.

DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது.  உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.இப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம்  DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.

இப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம்.  இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.

உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய: 
உங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்கு  www.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.


இந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :
ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும்.  உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:

DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.


ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும். 

மேக்(Mac) கணினிகளுக்கு: 

மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.

Source - www.fbi.gov

குறைந்த கால அவகாசமே இருப்பதால் இந்த தகவலை சமூக தளங்களில் பகிர்ந்து கூடிய விரைவில் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். 

7/04/2012

கூகுள் தேடலில் ஏற்கனவே பார்த்த பக்கங்கள் மீண்டும் வருவதை தவிர்க்க


இணையத்தில் கொட்டி கிடக்கும் தகவல்களை நொடிப்பொழுதில் நமக்கு வழங்கும் தேடியந்திரங்களில் கூகுளின் சேவை சிறப்பானதே. கூகுளில் ஏதேனும் தீவிர மாக தேடி கொண்டிருக்கும் பொழுது நாம் ஏற்க்கனவே பார்த்த பக்கங்களும் சேர்ந்தே வரும். இதனால் ஒரே பக்கத்தை திரும்ப திரும்ப பார்க்க வேண்டிய சூழல் உண்டாவதுடன் நமக்கு தேவையான தீர்வை கண்டறிய அதிக நேரம் செலவழிக்க வேண்டியாகி உள்ளது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க ஏற்க்கனவே பார்த்த பக்கங்களை மறுபடியும் கூகுள் தேடலில் காட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கீழே பாப்போம்.
Read more »

Labels: ,

7/03/2012

ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான VLC மீடியா பிளேயர் மென்பொருள் டவுன்லோட் செய்ய

VLC மீடியா பிளேயர் கணினிகளில் உபயோகப்படுத்தப்படும் மிகச்சிறந்த மீடியா பிளேயர் மென்பொருளாகும். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினிகளில் உபயோகிக்க கூடிய மென்பொருளை உலகம் முழுவதும் சுமார் 1 பில்லியன் பயனர்களுக்கு மேல் உபயோகிக்கின்றனர். கணினி வெர்சனில் பிரபலமான இந்த மென்பொருள் தற்பொழுது ஆன்ட்ராய்ட் மொபைல்களில் பயன்படுத்த ஏதுவாக புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளனர். இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா நிலையில் உள்ளது.ஆடியோ வீடியோ உட்பட அனைத்து வகை மீடியா பைல்களையும் சப்போர்ட் செய்ய கூடியது. ஆன்ட்ராய்ட் 2.1 இருந்து இதற்க்கு மேல் உள்ள அனைத்து மொபைல்களுக்கும் சப்போர்ட் செய்கிறது. சப்போர்ட் செய்யும் மொபைல்களை கண்டறிய கீழே உள்ள பட்டியலை பாருங்கள். 


7.1 MB அளவுடைய இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்து உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களில் உபயோகபடுத்தி கொள்ளலாம். பீட்டா நிலையில் உள்ள இந்த மென்பொருளை மேலும் பல மாற்றங்களை செய்து விரைவில் stable வெர்சன் வெளியிட இருக்கிறது. 

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - VLC for Android

Labels: , ,

7/02/2012

இந்தியாவில் 53 மொழிகள் உட்பட உலகில் அழியும் நிலையிலுள்ள 3000+ மொழிகளை காக்க கூகுளின் புதிய திட்டம்

மனிதர்கள் தங்களது கருத்துக்களை மற்றவர்களிடத்தில் பரிமாறி கொள்ள உருவாக்கி கொண்டது தான் மொழிகள். மொழி உருவாக அடிப்படை காரணம் ஒன்று என்றாலும் இனத்தை பொருத்தும் வாழும் இடத்தை பொருத்தும் மொழிகள் பலவேறு வகைகளாக பிரித்து வித்தியாசமான எழுத்து வடிவங்களை கொடுத்து வேறுபடுத்தி பேசி, எழுதி வருகின்றனர்.உலகில் அதிக மொழிகளை பேசும் நாடு என பெருமை கொண்ட இந்தியாவில் மட்டுமே சுமார் 1652 மொழிகள் பேச்சு வாக்கில் உள்ளதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது. தொழில் நுட்ப மாற்றங்களாலும், குறிப்பிட்ட மொழி பேசும் இனத்தவர்களின் அழிவினாலும் உலகம் முழுவதும் சுமார் 3000 க்கும் அதிகமான மொழிகள் அழிவு நிலையில் உள்ளதாம். இந்தியாவில் மட்டும் சுமார் 53 மொழிகள் அழிவு நிலையில் இருக்கிறதாம்.  ஓரிரு தலைமுறையில் இந்த மொழிகள் அழிந்து விடும் அபாயத்தில் இருக்கிறதால் பின்னர் வரும் சந்ததியினருக்கு இவைகளை பற்றி தெரியாமலே போய் விடும்.

இந்த அழிவு நிலையில் உள்ள மொழிகளை காக்க பின்னர் வரும் சந்ததியினரும் இந்த மொழிகளை பற்றி அறிந்து கொள்ள கூகுள் Linguistic Diversity நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது. அதற்காக www.endangeredlanguages.com என்ற புதிய தளத்தை உருவாக்கி உள்ளது. இந்த தளத்தில் சென்று Explore பட்டனை அழுத்தி உலக வரைபடம் வரும் அதில் எந்தெந்த நாடுகளில் எத்தனை மொழிகள் அழிவு நிலையில் உள்ளது என்ற முழு பட்டியலையும் பார்த்து கொள்ளலாம்.


ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அந்த அந்த புள்ளி போன்ற ஐகான் மீது கிளிக் செய்தால் அந்த மொழியின் பெயரை காட்டும். அந்த மொழியின் மீது கிளிக் செய்தால் அந்த மொழியை பற்றி சில விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில் பச்சை நிறத்தில் உள்ள மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ள மொழிகளாகும். 


இப்படி ஒவ்வொரு நாட்டிலும் அழிவின் இருக்கும் மொழிகளை பட்டியலிட்டு காட்டுகிறது கூகுளின் வரைபடம். 

நாம் செய்ய வேண்டியது என்ன :
இந்த அழிவு நிலையில் உள்ள மொழிகளை காப்பாற்ற கூகுள் உங்களின் உதவியை நாடுகிறது. ஒருவேளை இந்த மொழி பேசுபவர்களை கண்டால் அவரின் போட்டோ மட்டுமே வீடியோவை எடுத்து இந்த தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். மற்றும் இந்த மொழிகளின் எழுதிய பக்கங்கள் ஏதேனும் கிடைத்தாலும் அதை ஸ்கேன் செய்து இந்த தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். நீங்கள் அனுப்பும் ஆவணம் அந்த குறிப்பிட்ட மொழிக்குள் சேர்க்கப்பட்டு விடும். இனி எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த விவரங்களை வரும் சந்ததியினர் பார்க்க ஏதுவாக இருக்கும்.தங்களால் முடிந்தால் வருங்கால சந்ததியினருக்கு உதவி செய்வோம். மற்றும் சமூக தளங்களில் பகிர்ந்து நண்பர்களுக்கும் தெரிவித்தால் மேலும் பல நண்பர்களை சென்றடையும்.

Source - Google blog

Labels: