Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

கூகுள் நவீன உலகில் மனித வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. நமக்கு தேவையான பல அறிய விஷயங்களையும் அறிந்து கொண்டு நம் அறிவை வளர்க்க உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் கூகுள் தேடியந்திரதினால் மனித மூலையில் ஞாபக சக்தியும், யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் Columbia University, Wisconsin-Madison University, Harvard University  உள்ள உளவியல் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


இணையத்தில் ஏதோ ஒரு தகவலை கூகுளில் பார்த்து படித்து தகவலை அறிந்து கொள்கிறார்கள். அதே தகவல் மீண்டும் தேவை பட்டாலும் திரும்பவும் கூகுளுக்கு சென்று தான் தேடுகிறார்களே தவிர மாறாக முன்பு பார்த்ததை ஞாபகம் வைத்து கொள்வதோ அது என்ன தகவல் என யோசித்து பார்ப்பதோ இல்லை. கூகுளில் கொடுத்தால் நொடிப்பொழுதில் தகவலை அறிந்து கொள்ளலாம் அதற்க்கு என் யோசித்து நேரத்தை வீனடிக்கணும் என்ற மன நிலையில் தான் மக்கள் விரும்புவதில்லை. அதே சமயம் அவர்களின் மூளைக்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை ஆதலால் யோசிக்கும் திறந வெகுவாக பாதிக்கப்படுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் மக்கள் ஒரு தகவல் சரியாக தெரிந்திருப்பினும் அதை மற்றவர்களிடத்தில் தைரியமாக கூறாமல் எதற்கும் கூகுளில் தேடி சரியா என பார்த்து கொள்ளலாம் என்று தான் பலபேரின் மனநிலை உள்ளதாம் இதனால் அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கூகுள் மட்டுமல்ல மனித வாழ்க்கையில் இயந்திரங்களின் பங்கு அதிகமாகி விட்டதால் மக்களின் மூளை சோம்பேறியாக மாறிவிட்டது என்பது என் கருத்து. சிறிய உதாரணம் சிறிய கணக்குகளுக்கும் கணினியையும், கால்குலேட்டரையும் தேடும் இன்றைய தலைமுறை சற்றே பின்னோக்கி நம் முந்தைய தலைமுறையை பாருங்கள் மனதிற்குள்ளேயே கணக்கு போட்டு ஒரே வினாடியில் பதிலை சொல்வார்கள். இது போல நிறைய உதாரணங்கள் இருக்கு. நம்மால் ஏன் அது முடியவில்லை நீங்களே சொல்லுங்க நண்பர்களே. 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

19 comments :

 1. //முன்பு பார்த்ததை ஞாபகம் வைத்து கொள்வதோ அது என்ன தகவல் என யோசித்து பார்ப்பதோ இல்லை. கூகுளில் கொடுத்தால் நொடிப்பொழுதில் தகவலை அறிந்து கொள்ளலாம் அதற்க்கு என் யோசித்து நேரத்தை வீனடிக்கணும் என்ற மன நிலையில் தான் மக்கள் விரும்புவதில்லை. அதே சமயம் அவர்களின் மூளைக்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை//

  தலைப்பை பார்த்ததும் பயந்து போய்டேன் - படிச்சேன்...சரிதான் நிதர்சனமான உண்மை

  ReplyDelete
 2. I think, this article came in July of last year in English.
  http://www.ibtimes.com/articles/181620/20110716/google-effect-changes-to-our-brains.htm
  Google effect: change to our brains.

  ReplyDelete
  Replies
  1. http://www.siliconindia.com/shownews/Google_Search_Kills_Human_Memory_-nid-103749-cid-2.html

   I got this news in above link and also mentioned in my post too...

   Delete
 3. கூகுள் பல நேரங்களில் உபயோகமாகவும், சில நேரங்களில் உபத்திரவமாகவும்... நல்ல தகவல்.

  ReplyDelete
 4. இயந்திரங்களின் வருகையால் மனிதனி மூளை மட்டும் அல்ல எல்லாஉறுப்புகளும் செயல் இழக்கும் அபாயம் இருக்கிறது.

  இன்று மனிதன் நாள் ஒன்றுக்கு 100 மீட்டர் அளவுக்கூட நடப்பதில்லை.

  ReplyDelete
 5. மாப்பு..! கூகுளுக்கே ஆப்பா...!!!

  ReplyDelete
 6. ம்ம் நீங்க சொல்றதும் உண்மைதான்.. அது இப்போ இல்ல.. மாப்பு.. எப்போ கார்குலேட்டர் வந்ததோ.. அப்ப இருந்தே மனுசனோட சிந்திக்கும் திறனையும், சிந்திக்கும் திறன்கூட சொல்ல முடியாது..கணிக்கும் திறன் மிகவும் மங்கிவிட்டது. காரணம் நீங்க சொன்னதுதான்.. பகிர்வுக்கு நன்றி மச்சி..!!

  ReplyDelete
 7. நல்ல வரவேற்க்கதக்க பதிவு இது போல் மூளையை கொல்லும் ச(க்)தி முன்பே ஏற்பட்டுவிட்டது எதுவென்றால் கைப்பேசிதான் அது. முன்பு நான் தொலைபேசி எண்களை அதிகளவில் ஞாபகம் வைத்திருந்தேன் ஆனால் கைத்தொலைபேசி வந்தவுடன் அதில் எண்களை சேமித்து வைத்திருப்பதால், என்னுடைய எண்களே சில சமயம் தேடி எடுக்கவேண்டியுள்ளது அந்த அளவுக்கு பாதிப்பு உள்ளது உண்மை.

  ReplyDelete
 8. வணக்கம் நண்பா,
  நல்லதோர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

  எமது மூளையினையும் சின்ன வயசிலிருந்து வேகமாகச் செயற்படும் வண்ணம் பழக்கப்படுத்தி வைத்திருந்தால் நாம் கூகிளைப் போலச் செயற்பட முடியும்.

  இப்போது நமது மூளையினை விருத்தி செய்வது என்பது இயலாத காரியம் அல்லவா?

  ReplyDelete
 9. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.

  ReplyDelete
 10. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.

  ReplyDelete
 11. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds

  ReplyDelete
 12. ம்... நான் ஆய்வுடன் முரண்படுகிறேன்.
  பகிர்வுக்கு நன்றி .

  ReplyDelete
 13. தலைப்பை பார்த்ததும் நான் பயந்து போய்டேன் அண்ணா...இதற்கு அடுத்த தலைமுறையை யோசித்து பாருங்களேன் என்ன நடக்கும் னு....

  ReplyDelete
 14. இப்ப இதுவும் மனித மூளையை கொல்லுதா?

  ReplyDelete
 15. உலகமே கைக்குள் அடங்குவது நல்ல விஷயம்தானே மாப்ள.

  ReplyDelete
 16. உண்மை தான்...
  எந்த ஒரு வசதி வந்தாலும் அது ஏதோ ஒரு விதத்தில் மனிதனைப் பாதிக்கிறது!

  ReplyDelete
 17. வணக்கம்
  சரியாக சொன்னீர்கள்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press