கூகுள் பிளசில் Translate வசதியை கொண்டு வர [Chrome]

பிரபல சமூக இணையதளமான பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுளால் களமிறக்கப்பட்ட கூகுள் பிளஸ் இணையதளம் நாளுக்கு நாள் அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இந்த வருட முடிவிற்குள சுமார் 400 மில்லியன் வாசகர்களை கூகுள் பிளஸ் பெறும் என இணைய வல்லுனர்கள் கணித்துள்ளனர். மேலும் வாசகர்களை கவர நாளுக்கு நாள் பல்வேறு வசதிகளை கூகுள் பிளஸ் தளத்தில் புகுத்தி கொண்டு உள்ளனர். அந்த வரிசையில் கூகுளின் மிக சிறந்த சேவையான Google Translate வசதியை எப்படி கூகுள் பிளஸ் தளத்தில் கொண்டு வருவது என இங்கு பார்ப்போம்.



முதலில் Google Translate என்றால் என்ன என்பதை பார்த்து விடுவோம். இணையத்தில் பல்வேறு மொழியில் உள்ள தகவல்களை உங்களுக்கு வேண்டிய மொழியில் மொழிமாற்றம் செய்து உங்களுக்கு தெரிந்த மொழியில் படித்து அறிந்து கொள்ள உதவுவது கூகுள் Translator ஆகும்.

கூகுள் பிளசில் Translator வசதியை கொண்டு வர:

  • குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் தற்பொழுது இந்த வசதியை கொண்டு வர முடியும். முதலில் Google Translate for Google+இந்த லிங்கில் கிளிக் செய்து நீட்சியை குரோம் உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு கூகுள் பிளஸ் தளத்தை ஓபன் செய்து பாருங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் முடிவில் Translate என்ற லிங்க் வந்திருக்கும் அதனை கிளிக் செய்தால் அந்த பதிவு ஆங்கிலத்தில் மாறிவிடும். Default Language ஆங்கிலமாக தேர்வு செய்து இருப்பதால் பதிவுகள் ஆங்கிலத்தில் மாறும்.)
Default Language மாற்ற:
  • நீட்சியின் மேல் மவுஸ் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து Options என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் உள்ள Language என்ற பகுதியில் உள்ள மொழியை உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளவும்.
  • மற்றும் மொழி மாற்றத்தின் பின்புற நிறத்தையும் இதில் தேர்வு செய்து கொள்ளலாம். 
இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments