3/16/2012

இந்திய தொலைக்காட்சி சீரியல்களை யூடியுபில் காண [19000+ Episodes]

 இந்தியர்கள் பெரும்பாலும் சினிமா மற்றும் தொலைக்காட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக வீட்டினில் இருக்கும் பெண்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர். சீரியல் எல்லாமே நடிப்பு என்பதை மறந்து அதனுடன் ஒன்றிப்போய் துக்க காட்சிகளுக்கு வருத்தப்படுவதும், சந்தோச காட்சிகளுக்கு சந்தோசப்படும் அளவுக்கு சீரியல்கள் இவர்களை அடிமையாக்கி உள்ளது.  வீடியோக்களின் தகவல் களஞ்சியமான யூடியுப் தளத்தில் சுமார் 19,000 க்கும் அதிகமான இந்திய தொலைக்காட்சி சீரியல் வீடியோக்கள் கொட்டி கிடப்பதாக யூடியுப் தளம் அறிவித்து உள்ளது. மின்சார பிரச்சினையால் சீரியல்களை தவற விட்டாலோ அல்லது பழைய எபிசோட்களை பார்க்க விரும்பினாலோ இனி யூடியுப் தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான பகுதிகளை பார்த்து கொள்ளலாம்.


முடிந்து போன சீரியல்களின் முழு தொகுப்பும் இங்கு உள்ளது. இந்திய மொழிகளில் சுமார் 6 மொழிகளில் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்சிகளை கண்டு களிக்கலாம். 

அனைத்து மொழிகளிலும் காண - Indian Serials on Youtube

தமிழ் நிகழ்சிகளை காண - Tamil Serials on Youtube

தொடர்புடைய இடுகை

டிஸ்கி: தமிழில் பெரும்பாலான சீரியல்களின் ராதிகா போட்டோ தான் இருக்கு. ஒருவேளை இவுங்க தான் சின்னத்திரை சூப்பர் ஸ்டாரோ?

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home