Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்

இந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கார்டுகளின் உதவியுடன் இணையத்தை உபயோகித்து கொண்டு வருகிறோம். ஆனால் பயணித்து கொண்டே உபயோகிப்பதால் சரியாக சிக்னல் கிடைக்காமல் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படும். இது பெரும்பாலானவர்களுக்கு பெரும் அவஸ்தையை கொடுத்து வந்தது.


இது போன்று அவஸ்தை பட்டவர்களில் நீங்களும் ஒருவரா அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி இனி இந்திய ரயில்களில் வருகிறது வை-பை இன்டர்நெட். கடந்த சில வருடங்களாக அனுமதிக்காக காத்து கொண்டிருந்த இந்திய ரயில்வேக்கு இஸ்ரோவிடம்(ISRO) இருந்து அனுமதி கிடைத்து உள்ளது. இஸ்ரோ Ku-band என்ற அலைவரிசையின் மூலம் இந்த வசதியை வழங்க இருக்கிறது. இந்திய ரயில்களில் செயற்கை கோளில் இருந்து சிக்னலை பெரும் வகையில் ஒரு ஆன்டனாவை பொருத்தி விடுவார்கள் அதன் மூலம் நாம் அதிவேக இணையத்தை ரயிலில் பயணித்து கொண்டே உபயோகிக்கலாம்.

ரூபாய் 6.30 கோடியில் நடைமுறை படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு பைலட் ப்ராஜக்ட் (Pilot Project) என பெயரிட்டு உள்ளனர். இதை முதன் முதலில் ராஜ்தானி எக்ஸ்பிரசில் சோதனை செய்ய உள்ளனர். இந்த சோதனை முயற்சியின் பொழுது நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வசதிக்காக டிக்கெட் பரிசோதகரை அணுகினால் அவர் ஒரு மொபைல் என்னை தங்களுக்கு வழங்குவார். உங்களின் மொபைலில் இருந்து அந்த நம்பருக்கு ஒரு டயல் செய்தால் வை-பை ஆக்டிவேட் செய்வதற்கான கடவுச்சொல்லை அனுப்புவார்கள். அதன் மூலம் உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ள சாதனத்தில் இருந்து இலவசமாக இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என்பதில் ஐயமில்லை. ஆக நீங்கள் பைலட் ப்ராஜெக்ட் நேரத்தில் ராஜ்தானி ரெயிலில் பயணம் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்ட சாதனத்தை கொண்டு போக மறக்க வேண்டாம்.

source - ET

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

14 comments :

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    நன்றி

    வலையகம்

    ReplyDelete
  2. பார்ரா இந்தியா டெவலப் ஆக ஆரம்பிச்சிருச்சு .., அப்பாலா ஒரு டவுட்டு தல, நான் வச்சிருக்கிறது 1100 நோக்கியா இதில Wi-Fi ஒர்க் ஆகுமா ஹி ஹி ஹி ..!

    ReplyDelete
  3. அப்படியா.. நல்ல செய்தி

    ReplyDelete
  4. நல்ல செய்திதான்....

    பொறுத்திருந்து பார்ப்போம்....

    ReplyDelete
  5. நல்ல விடயம் அப்பிடியே சார்ஸ் செய்வதற்கு மின் இனைப்பும் தந்தால் நீண்ட தூர பயணங்கள் மகிழ்ச்சியாக அமையும்.. ஆனால் ஜன்னல் ஓரத்தில் இருந்து இயற்கையை ரசித்துக்கொண்டு போவதை போல் வருமா சசி?

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  7. சந்தோஷமான விஷயம்தான். ஆனால் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ?

    ReplyDelete
  8. நல்ல தகவல் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  9. நல்ல தகவல் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  10. எப்படியோ கூகுள் செய்திகளைவிட்டு வெளியே வந்துடீங்க? ஒரு 2035 பேர் நல்ல நல்ல செய்திகள் படிக்கலாம். நன்றி.
    அப்பன்.பி.கே.எஸ். ஈரோடு.

    ReplyDelete
  11. நண்பரே எனக்கு DONGAL UNLOCK SOFTWARE I பெற முடியுமா ?
    email id daneshkanth@gmail.com
    from sri lanka

    ReplyDelete
  12. ரயில்வே துறை அறிமுகப்படுத்தும் இந்த திட்டம், கண்டிப்பாக நல்ல வரவேற்ப்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை. பகிர்வுக்கு நன்றி சசி சார்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press