6/21/2012

கூகுள் பிளசில் சில புதிய பயனுள்ள வசதிகள்

சமூக இணையதளமான கூகுள் பிளஸ் தளத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக உள்ளது கூகுள் நிறுவனம். அடிக்கடி புதிய வசதிகளை கூகுள் பிளஸ் தளத்தில் புகுத்தி வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது சில புதிய வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது. அந்த வசதிகள் என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம்.

Sharing from your Profile:
இனி பதிவை பகிர முகப்பு பக்கத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் பிளஸ் தளத்தின் புரொபைல் பக்கத்தில் இருந்து நீங்கள் பகிர முடியும். புரொபைல் பக்கத்திலும் தற்பொழுது Share Box சேர்த்து உள்ளனர். ஆனால் இந்த புதிய Share Box வசதியை புரொபைல் பக்கத்தில் நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். மற்றவர்களுக்கு இந்த வசதி தெரியாது.


Cover Photo Gallery:
உங்கள் புரொபைல் பக்கத்தை அலங்கரிக்க அழகான கவர் போட்டோக்களை தேடி இணையத்தில் அலையாமல் கவர் போட்டோ கேலரி என்ற புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது கூகுள். அதில் அழகிய கவர் போட்டோக்களை புகுத்தி உள்ளது. உங்களுக்கு வேண்டுமென்றால் இதிலிருந்தே ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் ப்ரோபைல் பக்கத்தை அலங்கரிக்கலாம். இதற்க்கு உங்களுடைய புரொபைல் பக்கத்திற்கு சென்று Change Cover Photo என்பதை கிளிக் செய்தால் சில அழகிய போட்டோக்களுடன் கூடிய Cover Photo Gallery பகுதியை நீங்கள் காணலாம். Instant resizing and adjustment:
கேலரியில் உள்ள போட்டோக்கள் உங்களுக்கு பிடிக்காமல் இணையத்தில் இருந்து ஏதேனும் போட்டோவை கவர் போட்டோவாக வைக்க எண்ணி அப்லோட் செய்து அளவு சரியில்லை என்று வெட்டவோ, ஓட்டவோ தேவையில்லை உங்கள் மவுஸின் மூலம் இழுத்து (Drag) சரியான பகுதியை தேர்வு செய்து கொள்ளலாம்.


Cover Photo Albums:
ஏற்க்கனவே ஒரு கவர் போட்டோவை வைத்திருந்து நாளடைவில் அது பிடிக்காமல் கவர் போட்டோவை மாற்ற விரும்பினால் பழைய போட்டோவை டெலிட் செய்ய வேண்டிய அவசியமில்லை.உங்களுடைய அனைத்து கவர் போட்டோக்களும் Cover Photo Albums என்ற பகுதியில் சேர்ந்து விடும்.

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home