பிரபலமான Cut the Rope விளையாட்டு இப்பொழுது குரோமில் இலவசமாக

ஏதாவது புது புது விஷயங்களை அறிமுக படுத்தி கொண்டே இருப்பதால் தான் அனைவரின் ஆதரவோடு வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது குரோம் உலவி. இப்பொழுது Cut The Rope என்ற பிரபலமான விளையாட்டை அறிமுக படுத்தி உள்ளது. ஆன்ட்ராய்ட் அல்லது ஐபோன் உபயோகிப்பவர்களுக்கு Cut The Rope விளையாட்டை பற்றி தெரிந்து இருக்கலாம். போன்களில் இந்த விளையாட்டை காசு கொடுத்து வாங்கி தான் விளையாட வேண்டும். ஆனால் க்ரோமில் அந்த சிரமம் இல்லை முற்றிலும் இலவசமாகவே விளையாடி மகிழலாம்.


விளையாட்டின் நோக்கம் சுலபம் அங்கு கயிறில் ஒரு பந்து தொங்கி கொண்டிருக்கும் சில நட்சத்திரங்களும் இருக்கும். உங்கள் மவுஸின் மூலம் கயிறை அறுத்து அந்த நட்சத்திரங்களை பெற வேண்டும். உங்கள் பந்து விழுங்கப்படும் முன் எத்தனை நட்சத்திரங்கள் பெருகிறீர்களோ அதுக்கு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொரு படியும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் விளையாட விளையாட ஆர்வம அதிகரிக்குமே தவிர குறையாது.

Cut The Rope கேமை விளையாட குரோம் வெப் ஸ்டோரில் உள்ள இந்த Cut the Rope மென்பொருளை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்த உடனே விளையாட தொடங்கி விடலாம். 


க்ரோமில் ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு அடுத்து இந்த விளையாட்டு பெரும்பாலானவர்களால் விளையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments