புதியவர்களுக்காக: பிலாக்கரில் பதிவின் முதல் எழுத்தை மட்டும் பெரியதாக காட்ட

இது என்னுடைய 100 வது பதிவு. இதுவரை நான் எழுதும் பதிவு ஒவ்வொரு பதிவையும் ரசித்து எனக்கு வாழ்த்துக்களை சொல்லி என்னை நூறாவது பதிவு வரை அழைத்து வந்த என் வாசகர்களுக்கும் என்னை பின்தொடரும் உயர்ந்த உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து. இந்த நூறாவது பதிவை உங்களுக்காக சமர்பிக்கிறேன்.     


நாம் எழுதும் பதிவில் முதல் எழுத்தை மட்டும் நமக்கு தேவையான அளவு எப்படி பெரியதாக்குவது என்று காண போகிறோம். இந்த வசதியை நம் தளத்தில் பெற முதலில் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு
DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE - செல்லவும்.


சென்று கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடிக்கவும்.

]]</b:skin>

கோடிங்கை கண்டு பிடித்த பின் கீழே உள்ள HTML CODE காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு முன்/மேலே பேஸ்ட் செய்யவும்.

.post large { float:left; color: $headerBgColor; font-size:60px; 
line-height:50px; padding-top:1px; padding-right:5px; }


சரியான இடத்தில் பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் இதில் SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தவும்.
 இன்னும் ஒரு சிறிய வேலை உள்ளது. நீங்கள் பதிவு எழுத ஆரம்பிக்கும் போது நீங்கள் பெரியதாக ஆக்க நினைக்கும் எழுத்தை(முதல் எழுத்து)  மட்டும் 


<large>முதல் எழுத்து</large>

உதாரணமாக நீங்கள் "அ" என்ற எழுத்தை பெரியதாக்க நினைத்தால் கீழே உள்ளதை போல கொடுக்க வேண்டும்.

<large>அ</large>


இப்படி கொடுத்த பின் அடுத்த எழுத்துக்களை எப்பவும் எழுதுவதை போல எழுதி கொள்ளுங்கள். அப்புறம் நீங்கள் எழுதியதும் பதிவை பப்ளிஷ் செய்து பார்த்தால் நீங்கள் கொடுத்த எழுத்து மட்டும் பெரியதாக வந்திருப்பதை காண்பீர்கள். 
டுடே லொள்ளு 
running
ஓட்ரா ராஜா ஓட்ரா  

Comments