Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

நவீன வசதிகளுடன் கூடிய 2010 க்கான Latest Blogger Templates

நண்பர்களே இங்கு கீழே பல அழகானக மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பிலாக்கர் template களை கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு template ன் கீழே உள்ள demo என்ற பட்டனை அழுத்தினால் அந்த template உடைய நகல் உங்களுக்கு தெரியும். அது பிடித்திருந்தால் பக்கத்தில் உள்ள Download என்ற லிங்க்கை அழுத்தி தேவையான டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

1. Simples Portfolio

2. Apartus

3. Ecosmo

Demo      /      DownLoad


4. Liberation 

5. Woodsy


6. Tech Boxed

7. Blogger Tube8. Ikshan Magazine

9. Greeny

10. Stich Press

11.Ishthyle

12. Emperrors

13. Ekologic


14. Color Bold
Demo  /  Download

15. Allurement 

16. Rock press

17. Rockwell


18. Tutorialicious

19. Mayumi

20. Maamo

உங்களுக்கு தேவையான டெம்ப்ளேட் டவுன்லோட் செய்த உடன் உங்களுடைய பழைய டெம்ப்ளேட் மாற்றி உங்கள் தளத்தை மேலும் அழகு படுத்தி கொள்ளுங்கள்.  சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
உங்களுக்கு மாற்றுவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் இந்த லிங்கில் சென்று பார்த்துகொள்ளுங்கள்.http://vandhemadharam.blogspot.com/2010/03/blog-post_5216.html

மேலும் ஏதேனும் டெம்ப்ளேட் தேவைப்பட்டால் http://vandhemadharam.blogspot.com/2010/02/2010-blogger-templates.ஹ்த்ம்ல் இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

நம்முடைய பிலாக்கரில் GOOGLE BUZZ பட்டன் கொண்டு வர?

நண்பர் முனைவர். இரா. குணசீலன் கேட்டதற்கு இணங்க இந்த பதிவை வெளியிடுகிறேன். இது பலருக்கும் உபயோகமாக இருக்கும்.    நம்முடைய பிலாக்கரில் GOOGLE BUZZ பட்டன் கொண்டு வருவது என்று கீழே காண போகிறோம். இதன் மூலம் நம்முடைய தளம் மேலும் பிரபலமடையும். இதை சேர்ப்பது மிகவும் சுலபமான ஒன்று. 


இதை நம்தளத்தில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள். 
<div style="float:right;padding:4px;">
<a title="Post on Google Buzz" class="google-buzz-button" href="http://www.google.com/buzz/post" data-button-style="normal-count" data-locale="en_IN" rel="nofollow" expr:data-url='data:post.url'></a>
<script type="text/javascript" src="http://www.google.com/buzz/api/button.js"></script>
</div>
அடுத்து உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT -  EDIT HTML - EXPAND WIDGET TEMPLATES சென்று கீழே உள்ள வரியை கண்டுபிடிக்கவும்.
<div class='post-header-line-1'/>
கண்டுபிடித்தபின் நீங்கள் காப்பி செய்த கோடிங்கை நீங்கள் கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்பு பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.


கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை க்ளிக் செய்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அவ்வளவு தான் உங்களுடைய தளத்தில் GOOGLE BUZZ பட்டன் வந்திருக்கும்.

டுடே லொள்ளு   
Photobucket
சாப்பாடு ஒரு மணிநேரம் லேட் ஆனதுக்கா என்ன இப்படி பண்ற! 

நான்

இன்று வரை என்னை பின் தொடரும் உள்ளங்களுக்கும், என் பதிவிற்கு தவறாமல் பின்னூட்டம் அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  


இன்று எனக்கு மிகவும் பிடித்த நாள் இன்று தான் என்னுடைய தாய் என்னை ஈன்றெடுத்த நாள். முதன் முதலில் என்னுடைய பிறந்த நாளை பதிவுலக  நண்பர்களோடு கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கு நானே என்னை பற்றி  ஒரு சிறு அறிமுக படுத்தி கொள்கிறேன்.    
வேலன் சார் வடிவமைத்து கொடுத்தது.    
பெயர் :   சசிகுமார் (யாருக்கும் தெரியாது பாரு)


பிறந்த தேதி :  10-05-1984 (இது பள்ளியில், உண்மையில் 1983)


என்னை பிடித்தது :  அப்பாவுக்கு (நான் நன்றாக படித்ததால் ஹி ஹி ஹி ) 


எனக்கு பிடித்தது :  அம்மா (வீட்ல படிக்க சொல்லி தொந்தரவு செய்யாததால்)


படித்தது :  BBA, CCCA, ACDFT , and Web Designing (டே கேக்கறதுக்கு ஆள் இல்லேன்னா  என்னவென்னாலும் போட்டுபியா)

படிக்க நினைத்தது : (அத வுடுங்க என்னென்னவோ நெனச்சோம்)

மறக்க முடியாதது :   கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் என் அம்மாவும், அக்காவும் அதே இடத்திலேயே இறந்தது. இதற்க்கு மேல் சொல்லி என்னுடன் சேர்த்து உங்களையும் அழவைக்க விரும்பவில்லை. (நண்பர்களே இதை பற்றி யாரும் கமென்ட் போட வேண்டாம்)  

மறக்க நினைப்பது :   மறக்க முடியாததை.

 பிடித்தது : அன்று அம்மா ஊட்டி விட்டது , இன்று என் மனைவி ஊட்டி விடுவது.

கடவுளிடம் வேண்டியது : எந்த குறையும் இல்லாமல் குழந்தை( கொடுத்த அந்த
இறைவனுக்கு நன்றி )
பெயர் : யுதிஷா. என் குழந்தை  

மகிழ்ச்சி: அன்பான மனைவி அமைந்தது. பெயர் சுனிதா.

என் மனைவி    


தற்போதைய பெருமை 

என்னவோ  படிச்சிட்டு வேலை தேடிகொண்டிருந்த எனக்கு கடைசியாக ஏனோ தானோ வென்று படித்த இந்த FASHION TECH. தாங்க சோறு போடுது. படித்தது எல்லாம் வீணாக போச்சே என்று கவலை பட அப்போது தான் எனக்கு இந்த ப்ளாக் ஆரம்பித்து அதிலே சில டிப்ஸ் போடலாமென்று யோசனை வந்தது. சரி ஒரு பக்கம் ஆதரவு இருக்குமா என்று சந்தேகம் வேறு. இப்பொழுது நான் எதிர் பார்த்ததை விட எனக்கு ஆதரவும், அன்புள்ள நண்பர்களும் கிடைத்து உள்ளனர். இப்பொழுது தினமும் குறைந்தது 5 நபர்களாவது மெயில் மூலமாகவும், போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு பிளாக்கில் சந்தேகங்களை கேட்டு கொண்டு இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஒரு நண்பர் சவுதியில் இருந்து போன் மூலம் தொடர்பு கொண்டார். (வீணாக தற்பெருமை அடித்து கொள்கிறேன் என்று கருத வேண்டாம் அந்த அளவிற்கு சந்தோசமாக உள்ளது நண்பர்களே.)  

வாழ்த்து:  இன்று என்னை போல பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.                

புதியவர்களுக்காக: நம்முடைய பிலாக்கரில் Background Music கொண்டுவர

ண்பர்கள் பலர் மெயில் மூலமாகவும், பின்னூட்டங்கள் மூலமாகவும் எப்படி நம் பிலாக்கரில் எப்படி  Background Music சேர்ப்பது என்று கேட்டதனால் இந்த பதிவை நான் இங்கு போட கடமை பட்டுள்ளேன்.   நம்முடைய பிலாக்கரில் background Music கொண்டுவருவது என்று இங்கு காணலாம்.

பிலாக்கரில் வாசகர்களே நம் பதிவின் எழுத்துக்களை பெரியதாக்கி கொள்ள

ம்முடைய தளத்தில் நமக்கு தெரிந்ததை நாம் பதிவாக வெளியிடுகிறோம். அது மற்றவர்களுக்கு உபயோகமானதாகவும் இருக்கலாம் அல்லது நம்முடைய கற்பனையாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி வாசகர்கள் தரும் ஆதரவினை பொறுத்தே அந்த பதிவின் வெற்றி தோல்வி அமைகிறது. ஆகவே வாசகர்களே நம்முடைய தளத்தின் முதுகெலும்பு ஆகும். நமக்கு வரும் வாசகர்கள் சிலபேர் நம்முடைய பதிவின் எழுத்துக்கள் சிறியதாக இருக்கிறது சற்று பெரியதாக ஆக்குங்கள் என்று பின்னூட்டம் போடுவார்கள். ஆனால் வேறு சிலரோ பார்ப்பதற்கு பெரியதாக உள்ளதால் அதை சிறியதாக மாற்றவும் என்று பின்னூட்டம் போடுகிறார்கள். (எனக்கு ஒருமுறை இந்த அனுபவம் உண்டு). சரி எப்படி இந்த பிரச்சினையை தீர்ப்பது என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு.

என்னுடைய பதிவில் சாதரணமாக வந்த எழுத்துக்கள் கீழே 


மாற்றம் செய்தவுடன் வந்த அளவு


இப்படி படத்தில் காட்டியுள்ளதை போல் நம்முடைய சைடுபாரில் அமைத்து கொண்டால் நம்முடைய வாசகர்கள் அவர்களுக்கு தேவையான வடிவில் நம்முடைய பதிவின் எழுத்துக்களை மாற்றி கொள்ளலாம்.  தேவைப்பட்டால் font family கூட மாற்றி கொள்ளலாம். இந்த widget நிறுவி வாசகர்கள் நம்முடைய பதிவை மாற்றும் போது அந்த பாக்கம் திரும்பவும் லோடு ஆகாமல் செலக்ட் செய்த உடன் பெரியதாக காட்டுவது இந்த விட்ஜெட்டின் சிறப்பம்சமாகும். சரி இதை எப்படி நம்முடைய பதிவில் இணைப்பது என்று காணலாம்.

        இந்த விட்ஜெட்டை இணைக்க உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML/JAVA SCRIPT செல்லவும்.  சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.        
         

<script>
function go1(){
if (document.selecter2.select2.options
[document.selecter2.select2.selectedIndex].value != "none") {
document.getElementById('main').style.fontSize
=document.selecter2.select2.options
[document.selecter2.select2.selectedIndex].value
}
}

function go2(){
if (document.selecter2.select3.options
[document.selecter2.select3.selectedIndex].value != "none") {
document.getElementById('main').style.fontFamily
=document.selecter2.select3.options
[document.selecter2.select3.selectedIndex].value
}
}
</script>
<form id="forma" name="selecter2" method="POST">

<select onchange="go2()" style="font-family:verdana;font-size:8pt" name="select3" size="1">
<option value="Times New Roman"/>Times New Roman
<option value="Arial"/>Arial
<option selected value="Book Antiqua"/>Book Antiqua
<option value="Bookman Old Style"/>Bookman Old Style
<option value="Century Gothic"/>Century Gothic
<option value="Comic Sans Ms"/>Comic Sans Ms
<option value="Tahoma"/>Tahoma
<option selected value="Trebuchet Ms"//>Trebuchet Ms
<option value="Verdana"/>Verdana
</select>
<select onchange="go1()" style="font-family:verdana;font-size:8pt" name="select2" size="1">
<option value="8px"/>8
<option value="9px"/>9
<option value="10px"/>10
<option value="11px"/>11
<option selected value="12px"/>12
<option value="14px"/>14
<option value="16px"/>16
<option value="18px"/>18
<option value="22px"/>22
</select></form><a href="http://vandhemadharam.blogspot.com/2010/05/blog-post_04.html" target="_blank"><font size="1">Get This</font></a>
பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தி உங்கள் தளத்தில் வந்து பார்த்தால் நீங்கள் நிறுவிய விட்ஜெட் வந்திருக்கும். இனிமேல் வாசகர்கள் அவர்களுக்கு தேவையான வடிவில் நம்முடைய பதிவின்  எழுத்துக்களை மாற்றி கொள்ளலாம்.

டுடே லொள்ளு


யார் கிட்ட வந்து ஸ்டைலா நடந்து போற 


நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும்.  

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press