Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

நான்

இன்று வரை என்னை பின் தொடரும் உள்ளங்களுக்கும், என் பதிவிற்கு தவறாமல் பின்னூட்டம் அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  


இன்று எனக்கு மிகவும் பிடித்த நாள் இன்று தான் என்னுடைய தாய் என்னை ஈன்றெடுத்த நாள். முதன் முதலில் என்னுடைய பிறந்த நாளை பதிவுலக  நண்பர்களோடு கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கு நானே என்னை பற்றி  ஒரு சிறு அறிமுக படுத்தி கொள்கிறேன்.    

வேலன் சார் வடிவமைத்து கொடுத்தது.    
பெயர் :   சசிகுமார் (யாருக்கும் தெரியாது பாரு)


பிறந்த தேதி :  10-05-1984 (இது பள்ளியில், உண்மையில் 1983)


என்னை பிடித்தது :  அப்பாவுக்கு (நான் நன்றாக படித்ததால் ஹி ஹி ஹி ) 


எனக்கு பிடித்தது :  அம்மா (வீட்ல படிக்க சொல்லி தொந்தரவு செய்யாததால்)


படித்தது :  BBA, CCCA, ACDFT , and Web Designing (டே கேக்கறதுக்கு ஆள் இல்லேன்னா  என்னவென்னாலும் போட்டுபியா)

படிக்க நினைத்தது : (அத வுடுங்க என்னென்னவோ நெனச்சோம்)

மறக்க முடியாதது :   கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் என் அம்மாவும், அக்காவும் அதே இடத்திலேயே இறந்தது. இதற்க்கு மேல் சொல்லி என்னுடன் சேர்த்து உங்களையும் அழவைக்க விரும்பவில்லை. (நண்பர்களே இதை பற்றி யாரும் கமென்ட் போட வேண்டாம்)  

மறக்க நினைப்பது :   மறக்க முடியாததை.

 பிடித்தது : அன்று அம்மா ஊட்டி விட்டது , இன்று என் மனைவி ஊட்டி விடுவது.

கடவுளிடம் வேண்டியது : எந்த குறையும் இல்லாமல் குழந்தை( கொடுத்த அந்த
இறைவனுக்கு நன்றி )
பெயர் : யுதிஷா. என் குழந்தை  

மகிழ்ச்சி: அன்பான மனைவி அமைந்தது. பெயர் சுனிதா.

என் மனைவி    


தற்போதைய பெருமை 

என்னவோ  படிச்சிட்டு வேலை தேடிகொண்டிருந்த எனக்கு கடைசியாக ஏனோ தானோ வென்று படித்த இந்த FASHION TECH. தாங்க சோறு போடுது. படித்தது எல்லாம் வீணாக போச்சே என்று கவலை பட அப்போது தான் எனக்கு இந்த ப்ளாக் ஆரம்பித்து அதிலே சில டிப்ஸ் போடலாமென்று யோசனை வந்தது. சரி ஒரு பக்கம் ஆதரவு இருக்குமா என்று சந்தேகம் வேறு. இப்பொழுது நான் எதிர் பார்த்ததை விட எனக்கு ஆதரவும், அன்புள்ள நண்பர்களும் கிடைத்து உள்ளனர். இப்பொழுது தினமும் குறைந்தது 5 நபர்களாவது மெயில் மூலமாகவும், போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு பிளாக்கில் சந்தேகங்களை கேட்டு கொண்டு இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஒரு நண்பர் சவுதியில் இருந்து போன் மூலம் தொடர்பு கொண்டார். (வீணாக தற்பெருமை அடித்து கொள்கிறேன் என்று கருத வேண்டாம் அந்த அளவிற்கு சந்தோசமாக உள்ளது நண்பர்களே.)  

வாழ்த்து:  இன்று என்னை போல பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.                

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

29 comments :

 1. HAPPY BIRTHDAY, Sasikumar! Yudhisha is very cute. Thank you for your family photos.

  ///வாழ்த்து: இன்று என்னை போல பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.////

  ......ஏங்க .... ஒரு மூணு நாள் கழிச்சு பிறந்த நாள் கொண்டாடுறவங்களுக்கு வாழ்த்து சொல்ல மாட்டீங்களா? ஹி,ஹி,ஹி,ஹி,...

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சசி,
  தன் சோகம் சொல்லி தனக்குள்ளே சுருண்டுபோகாமல்,
  "கவிதை" எழுதி கரைந்து போகாமல், தன் முன்னே உள்ளதை,
  அறிந்து அறிவுடன் செயல்படும் திறமையால்இன்று மனமகிழ்வுடன்
  இருகின்றீகள்.

  மீண்டும் அன்புடன் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 4. சுயபுராணம் சூப்பர் சசி... குழந்தை அழகாயிருக்கு.. ஆழ்ந்த இரங்கலை சொல்லலாம் என்று நினைத்தால் யாரும் கமெண்ட் போட வேண்டாம் என்று சொன்னதால் போடவில்லை. இன்பத்தையும் துன்பத்தையும் எங்களிடம் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி..

  ReplyDelete
 5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சசிகுமார். யுதிஷா குட்டி செம க்யூட்.

  ReplyDelete
 6. எல்லா வளமும் பெற்றுச் சிறந்தோங்க அழகுக் குழந்தை யுதிஷாவுக்கு வாழ்த்துகள்.

  குழந்தை யுதிஷாவின் அன்புத் தாய்க்கு வாழ்த்துகள்.

  (சரி, போனால் போகிறது; யுதிஷாவை முன்னிட்டு)உங்களுக்கும் வாழ்த்துகள்.

  அன்புடன்
  அ. நம்பி

  ReplyDelete
 7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி.

  ReplyDelete
 9. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
  வருடம் முழுவதும் நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே

  by
  அகல்விளக்கு சார்பாக ஈரோடுவாசி

  ReplyDelete
 12. பதிவுலகில் எனக்கு கிடைத்த நண்பர் சசிகுமாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .
  உங்களோட குழந்தை புன்னகை அருமை

  ReplyDelete
 14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி.

  ReplyDelete
 15. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி

  unmaivrumbi.
  Mumbai

  ReplyDelete
 16. piarantha naal vaazthukkal nanbare!

  ReplyDelete
 17. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே..

  ReplyDelete
 18. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி.

  ReplyDelete
 19. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி.

  ReplyDelete
 20. wish u a happy birthday sasi!! cute baby & thxs for sharing ur family photos!!

  ReplyDelete
 21. உங்கள் நல்ல மனதுக்கு யாவும் சிறப்பாக அமையும். பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே...தாங்கள் வாழ்த்தலாம் வாங்க தளத்திற்கு வருவீர்கள் என நினைத்தேன் வரவே இல்லை.வந்து செல்லவும்:-http://vazthalamvanga.blogspot.com/2010/05/blog-post_09.html வாழ்க வளமுடன்,வேலன்.

  ReplyDelete
 23. மனமார வாழ்த்துக்கள் அண்ணே

  ReplyDelete
 24. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே..

  உங்களுடைய ப்ளாக் மிகவும் அருமை
  தொடருங்கள்
  அழகான குடும்பம் நண்பரே

  ReplyDelete
 26. ஆஹா உங்கள் பதிவ படிக்கமுடியாம போச்சே,

  நேரமின்மையால் பின்னூட்டத்துக்கு கடைசிபெஞ்சு தான்,

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் .இன்னும் உங்கள் புகழ் மேன் மேலும் வளற வாழ்த்துக்கள். என்ன (நான் சுட்ட தோசை எனக்கே வா என்கிறீர்களா)


  சாந்தமான மனைவி (சுனிதாவிற்கும் வாழ்த்துகக்ள்)
  அழகான குட்டி தேவதை. யுதிஷாவிற்கும் வாழ்த்துக்கள்/

  ReplyDelete
 27. லேட்டா வாழ்த்துகள் மச்சி...

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press