நம் படங்களில் மேல் எழுத்துக்களை சேர்க்க சூப்பர் இலவச மென்பொருள்

நம்முடைய பிலாக்கரில் நாம் பதிவு வெளியிடும்  போது அதற்கு சம்பந்தமான படங்களை  வெளியிடுவோம் அப்படி சேர்க்கும் போது  நம்முடைய பிலாக்கில் உள்ள போட்டோக்களை சிலபேர் எடுக்காமல் இருக்க அதன் மீது நம்முடைய பேரோ அல்லது நம் பிலாக்கின் பேரையோ போடுவோம்.  



இதற்க்கு நாம் Ms paint, picasa, Photoshop போன்ற மென்பொருட்களின் உதவியோடு போடுவோம். ஆனால் இவைகளில்  என்ன குறை என்றால் நாம் ஒவ்வொரு படமாக திறந்து அந்தந்த படங்களின் மீது நம் வார்த்தையை எழுதவேண்டும். நீங்கள் பதிவில் ஒன்று இரண்டு படங்கள் சேர்ப்பது என்றால் இது போல் சேர்த்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஏதேனும் புகைப்பட பதிவு போட வேண்டி இருந்தால் நீங்கள் ஒவ்வொரு படமாக திறந்து உங்கள் எழுத்துக்களை சேர்ப்பதற்கு மிகவும் நேரம் எடுத்து கொள்ளும் இதனை தவிர்க்கவே இந்த அருமையான மிகச்சிறிய அதேவேளையில் சிறந்த முறையில் இயங்க கூடிய மென்பொருள் உள்ளது. இதை தரவிறக்க இந்த டவுன்லோட் பட்டனை அழுத்தி 
டௌன்லோட் செய்தவுடன் அந்த பைலை நீங்கள் install செய்ய வேண்டியதில்லை. நேராக ரன் செய்ய வேண்டியது தான் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.

 
உபயோகிக்கும் முறைகள் 
  • Folder Path - இந்த பகுதியில் நாம் இமேஜ் போல்டெர் இருக்கும் பகுதியை தேர்வு செய்து கொள்ளவும்.
  • Text - இந்த இடத்தில் நம் படத்தின் மீது தெரியவேண்டிய எழுத்துக்களை குறிப்பிடவும்.
  •  Opacity - இதில் நம்முடைய எழுத்தின் பிரகாசத்தை குறைக்கவோ கூட்டவோ செய்திடலாம்.
  •  Set Font - இதில் நமக்கு தேவையான பான்ட் தேர்வு செய்து கொள்ளலாம்.  அதற்கு ஏற்ற மாதிரி அளவினையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
  • Water Mark Position - இதில் நம் எழுத்துக்கள் வரவேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
  • Preview - இது நம் படத்தின் மாதிரியை தெரிவிக்க உதவுகிறது.
மேலுள்ள மாற்றங்கள் செய்தவுடன் முடிவில் Apply Watermark என்ற பட்டனை அழுத்தியவுடன் நம் செலக்ட் செய்த போல்டரில் உள்ள படங்களில் நாம் கொடுத்த எழுத்துக்கள் வந்திருக்கும்.


அவ்வளவு தான் இனி நாம் அந்த படங்களை உபயோக படுத்தி கொள்ளலாம் 

டுடே லொள்ளு       
ஏதாவது கமென்ட் இருந்தா போடுங்க அம்மா 

Comments