Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக  நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை.  இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில்  வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை  யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின்  பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின்  கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது! இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக  உதவணும் என்று இவர் முடிவு செய்த போது  இவரது வயது வெறும்  21    
இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!   

இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! 
சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!

கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது 
 இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspx 

 • இதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள். 
 • உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.
 • அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள். 
 • அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.
 • முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும். 
 • பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.
திருமதி கவுசல்யா அக்கா அவர்களின் பதிவை பார்த்து இந்த பதிவை போட எண்ணம் எனக்கு தோன்றியது. அது போல் உங்களுக்கு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் உடனே போடவும். தாமதிக்க வேண்டாம். கடைசி தேதி நவம்பர் 18 வரை மட்டுமே.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

22 comments :

 1. நிச்சயமாக பெருமை பட வேண்டிய விஷயம்... நான் ஓட்டளித்துவிட்டேன்...

  ReplyDelete
 2. ஒரு பெரிய பணி செய்தீர்கள். நன்றி. வோட்டு போட்டு விட்டேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் கிருஷ்ணன்!! ஒட்டு போட்டாச்சு...

  ReplyDelete
 4. க‌ண்டிப்பா உத‌வ‌லாம் ந‌ண்பா ஓட்டளித்துவிட்டேன்...

  ReplyDelete
 5. நன்றி சசி. வாழ்த்துக்கள்...நல்ல விஷயம் தொடரட்டும்...

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி நானும் ஓட்டு போட்டுட்டேன் ...

  ReplyDelete
 7. பகிர்வுக்கு மிக்க நன்றி.ஒட்டு போட்டாச்சு ,சசி குமார்.வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. கண்டிப்பா உதவனும் நண்பரே..! நானும் இப்பதான் நண்பர் சங்கவி மூலம் அறிந்தேன்.,!! எனது வாக்கு பதிவு செய்துவிட்டேன்..! தங்களது சேவைக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா..!!

  ReplyDelete
 9. ஒரு நல்லவருக்கு ஓட்டளித்தேன். ரொம்ப நாளாச்சு.

  ReplyDelete
 10. ராஜ நடராஜன்October 25, 2010 at 7:34 PM

  Good one Sasi!Keep going.

  ReplyDelete
 11. நண்பரே வாக்கு பதிவுசெய்துவிட்டேன்.
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. இவரைப் பற்றி முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன்.... நீங்கள் சொன்ன மாதிரி CNN இல் வோட் போட்டு விட்டேன். உங்களுக்கும்! இரண்டு மூன்று முறை போட்டால் கூட பதிவாகும் போல...!

  ReplyDelete
 13. நானும் ஓட்டுபோட்டுவிட்டேன் நண்பரே
  ”திருமதி கவுசல்யா அக்கா அவர்களின் பதிவை பார்த்து இந்த பதிவை போட எண்ணம் எனக்கு தோன்றியது. அது போல் உங்களுக்கு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் உடனே போடவும். தாமதிக்க வேண்டாம். கடைசி தேதி நவம்பர் 18 வரை மட்டுமே.”

  என் தளத்திலும் பதிவிட்டுள்ளேன் நண்பரே
  நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்
  பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 14. How many times we can vote.They give no. of times and how many they will consider if we vote again and again for our krishnan

  ReplyDelete
 15. ஓட்டு போட்டாச்சு...நிச்சயமாக பெருமை பட வேண்டிய விஷயம்...அதை விட உங்கள் பதிவு எழுத்து அவரை பற்றிய தகவல்களை அழகாக எடுத்து செல்கிறது அவருடன் உங்களுக்கும் என் வாழ்த்துகள் சசி

  ReplyDelete
 16. வாக்களித்து விட்டேன் சசி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. நல்ல மனுஷன்! நானும் (3 முறை) ஓட்டு போட்டுவிட்டேன் சசி!

  ReplyDelete
 18. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 19. ithulayavathu podura ottuku mathippu irukkum. ayya please konjam maranthidama ottu potturunga. Naan pottuten

  ReplyDelete
 20. //போட்டாச்சு !!! போட்டாச்சு//
  REPEAT !!!!!!!!

  ReplyDelete
 21. i vote the great person. such a nice person in the world.arumaiyana pathivu sir. u r the super person like him because ur identified the person. thank u sir. valga tamil and tamilians.

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press