Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப வேண்டுமா

தலைப்பை பார்த்தவுடன் என்னடா ஏதோ நம்ம தூத்துக்குடிக்கு அனுப்பறத போல அசால்டா சொல்றானேன்னு நினைக்க வேண்டாம் இது உண்மை தான். அமெரிக்காவின் நாசா அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செயற்கைகோள் அனுப்ப இருக்கிறார்கள். அதில் உள்ள மைக்ரோசிப்பில் நம்முடைய பெயரையும் இணைத்து அனுப்பவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
இது வரை இதில் 9 லட்சத்திற்கு மேல் அவர்களின் பெயர்களை இணைத்து உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 4000 நபர்கள் தங்களின் பெயர்களை இணைத்து உள்ளனர். நாம தான் போக முடியாது நம்முடைய பெயராவது போகட்டுமே.

இதில் நீங்கள் பங்கு கொண்டதற்கு ஆதாரமாக உங்களுக்கு ஒரு எண்ணும் மற்றும் உங்கள் பெயர் பொருந்திய சான்றிதழும் வழங்குகின்றனர்.

  •  சரி நம்ம பேர அனுப்புவோமா அதற்கு முதலில் Send Your Name to Mars இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் நான்கு கட்டங்கள் கொடுக்க பட்டிருக்கும் அதை பூர்த்தி செய்து கீழே உள்ள Submit என்ற அழுத்தவும்.
  • Submit அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அவ்வளவு தான் உங்களுடைய பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்று விட்டது இதற்கு சான்றாக உங்களுக்கு ஒரு சான்றிதழ் தருவார்கள் மேலே வட்டமிட்டுள்ள View and print என்ற லிங்க் அழுத்தி உங்கள் சான்றிதழ் பெற்று கொள்ளுங்கள். 
  • அவ்வளவு தான் என்ன சந்தோசமா நீங்க போனா என்ன உங்க பெயர் போனா என்ன எல்லாமே ஒண்ணு தான்.(நான் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் இணைத்து விட்டேன்) இதுவும் ஒருவித சந்தோஷம் தானே. 
டுடே லொள்ளு 



போரையே சும்மா போக வேண்டியது தானே என்ன ஏண்டா நோண்டுற 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

22 comments :

  1. ஆஹா...! இது நல்லாயிருக்கே..! இன்னிக்கு நான் தான் தமிழ்நாட்டிலிருந்து முதலில் பெயர் அனுப்பப் போறேன். உங்களுககுப்பிறகு.!!! ஹ.. ஹா...

    ReplyDelete
  2. நானும் அனுப்பிட்டேன்...!

    ReplyDelete
  3. நான் முன்னரே அனுப்பி விட்டேன், நன்றி சசி.

    ReplyDelete
  4. நானும் என் பெயரை சேர்த்து விட்டேன். நன்றி அண்ணா! டுடே லொள்ளு சூப்பர்

    ReplyDelete
  5. நாங்க எப்பவோ அனுப்பிட்டோமே!!!!

    ReplyDelete
  6. அனுப்பிடுறேன் சார்.

    ReplyDelete
  7. நானும் அனுப்பி விடுகிறேன்.. நன்றி சசி

    ReplyDelete
  8. நானும் அனுப்பினேன்... மிக்க நன்றி... உங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

    ReplyDelete
  9. இவ்ளோ மேட்டர் எங்க சார் புடிக்கிரிங்க ????

    ReplyDelete
  10. நல்லா வேலை பண்ணின, அனுப்பிட்டு எல்லாத்துக்கும் சொல்லனும்னு தோணுச்ச... அந்த நல்லா மனசுக்கு நன்றி...


    நான் என் குடும்பம் மட்டும் இல்லாம என் நண்பர்களுக்கும் சேர்த்து பதிவு பண்ணிட்டேன்...

    காசா பணமா, கழுத ரெண்டு நிமுசத்துல செவ்வாய்னா சும்மா விடுவோமா...

    Anyway Thanks Man..

    ReplyDelete
  11. நானும் அனுப்பிடறேன்,பகிர்வுக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. மங்குனி அமைசர் said...

    இவ்ளோ மேட்டர் எங்க சார் புடிக்கிரிங்க ????

    waanum நானும் அதையே கேட்கிறேன்,எப்படி சார் இப்படி மேட்டரா போட்டு தாக்கறீஇங்க?

    டுடே லொள்ளு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க ஆள் சேத்த போறோம்.செம.

    ReplyDelete
  13. இப்போ தான் பார்த்தேன்,அலாஸ்கா ரேங்க்கிங்க் 50000 சொச்சமா?அடேங்கப்பா?நான் உங்க பக்கம் வரவே ஒரு வருஷம் ஆகும் போல இருக்கே?

    ReplyDelete
  14. ஆனா நான் 50000 வரும்போது நீங்க 10000 போயிடுவீங்க...அவ் அவ் அவ்

    ReplyDelete
  15. நன்றி.

    இனிய தீபாவளிவாழ்த்துகள்.

    ReplyDelete
  16. நண்பா..வணக்கம்..

    பதிவு வழக்கம் போல மிக அருமை.. எனக்கும் சான்றிதழ் வந்தது..ஆனால் அதை என்னால் சேவ் செய்ய முடியவில்லையே!!! jpg இமேஜ்ல சேவ் செய்ய முடியலையே? வேற எப்படி save செய்றதுன்னு ஒரு ஐடியா தாங்க நண்பா...
    இலங்கையில இருந்து நண்பன்
    Nazmeer

    ReplyDelete
  17. //nazmeer said...
    நண்பா..வணக்கம்..

    பதிவு வழக்கம் போல மிக அருமை.. எனக்கும் சான்றிதழ் வந்தது..ஆனால் அதை என்னால் சேவ் செய்ய முடியவில்லையே!!! jpg இமேஜ்ல சேவ் செய்ய முடியலையே? வேற எப்படி save செய்றதுன்னு ஒரு ஐடியா தாங்க நண்பா..//


    நண்பரே நீங்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  18. நண்பரே மிக்க நன்றி.
    நீங்கள் சொன்னது போல செய்தேன் இப்பொது சான்றிதழ் என்னுடைய டெஸ்க்டாப்பில் இருக்கிறது.
    நன்றி.
    அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

    இலங்கையில் இருந்து நண்பன்
    Nazmeer

    ReplyDelete
  19. hi sir am mohamed manasir iam from srilanka.sir naan unga blog ulla sila subjectan padithen alhamdulillah bye.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press