ஒரு நாட்டில் புரட்சி ஏற்படவே காரணமாக இருந்த இந்த ட்விட்டர் தளத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. சமூக தளம் என்ற பெயருக்கு ஏற்ற மாதிரி தன் பணியை மகத்தாக செய்கிறது. (மற்ற நாடுகளை போல நம் நாட்டில் எப்பொழுது கிளர்ச்சி வருமோ). இந்த தளத்தில் நாம் சேர்ந்து நாமும் நம் நண்பர்களின் பட்டியலில் சேர்த்து இருப்போம். அந்த நண்பர்கள் எப்பொழுது ட்விட்டர் அக்கௌண்டில் சேர்ந்தார்கள் என தெரிந்து கொள்ள வேண்டுமா கீழே தொடரவும்.
- ட்விட்டரில் சேர்ந்த தேதியை அறிய வேண்டுமென்றால் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைந்தால் மட்டுமே அறிய முடியும். ஆனால் ட்விட்டரில் உள்ளே நுழையாமலேயே சேர்ந்த தேதியை அறிய முதலில் இந்த லிங்கில் twitter friends date செல்லவும்.
- அடுத்து உங்களுக்கு வரும் விண்டோவில் உங்களின் ட்விட்டர் பயனர் பெயரை கொடுத்து கீபோர்டில் எண்டர் கொடுக்கவும்.
- அடுத்து உங்களுக்கு வரும் பக்கத்தில் உங்கள் மவுசில் ட்ராக் செய்தால் உங்கள் நண்பர்கள் பெயர்கள் வரும் அதில் உங்களுக்கு தேவையான பெயர் மீது க்ளிக் செய்தால் அவர் பெயர், ஊர், எப்பொழுது ட்விட்டரில் சேர்ந்தார் போன்ற விவரங்கள் வரும்.
- இது போன்று நீங்கள் நினைப்பரின் விவரத்தை அறிய முடியும்.
டுடே லொள்ளு
அய்யோ என்ன கொடும சார் இது
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments