பிளாக்கரில் Static Page-ல் தெரியும் Vote பட்டன்களை மறைக்க

நம்முடைய எழுத்துக்களையும் சிந்தனைகளையும் உலகறிய செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பிளாக்கர் இணையதளம் நாம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். இந்த பிளாக்கர் தளம் இருப்பதாலே நம்மால் ஒருவரின் நிறைகுறைகளை நடுநிலைமையாக சுட்டி காட்ட முடிகிறது. இந்த பிளாக்கர் தளம் அதன் வாசகர்களுக்கு தினம் தினம் புதுபுது வசதிகளை வழங்கி கொண்டு உள்ளது. 

அதன் படி இதிலுள்ள ஒரு வசதி தான் Static Page. இந்த Static Page-ல் நம்மை பற்றிய குறிப்புகள், விவரங்கள், தொடர்பு வசதிகள் போன்றவைகளை உருவாக்க பயன்படுத்துகிறோம். இதில் ஒரு பிரச்சினை உள்ளது. நாம் நம் பிளாக்கில் இணைத்துள்ள திரட்டிகளின் பட்டன்கள் இந்த Static Page-லும் தெரிகிறது. இது பார்ப்பதற்கு அழகற்று காணப்படுவது மட்டுமல்லாமல் நாம் திரட்டிகளில் இதை இணைக்க வில்லை என்றாலும் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்கள் இந்த பட்டன்களில் அழுத்தி திரட்டிகளில் இணைத்து விடுகிறார்கள். ஆகவே இதற்க்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க நம்முடைய Static Page-ல் தெரியும் ஓட்டு பட்டைகளை எவ்வாறு நீக்குவது என பார்ப்போம்.
  • இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பின்னர் Design- Edit Html - Expand Widget Template - செல்லவும்.
  • ள்ளுங்கள். பின்னர் உங்கள் திரட்டிகளின் ஓட்டு பட்டைகளுக்கான கோடிங்கை கண்டறியவும். (உதாரணமாக: CTRL+F கொடுத்து வரும் விண்டோவில் Indli என டைப் செய்தால் Indli ஓட்டு பட்டனுக்கான கோடிங்கை கண்டறியலாம்)
  • அல்லது நாம் பெரும்பாலும் ஓட்டு பட்டைகளை பதிவிற்கு கீழே தான் பொருத்தி இருப்போம் அப்படி இருந்தால் இந்த வரியை <data:post.body/> கொடுத்து தேடலாம். 
  • தேடலாம். கோடிங்கை கண்டறிந்தவுடன் கீழே உள்ள இரண்டு வரிகளுக்கு நடுவில் உங்களுடைய ஓட்டு பட்டைக்கான கோடிங் இருக்கும் படி கோடிங்கை அமைக்கவும். 
<b:if cond='data:blog.pageType != "static_page"'>
ஓட்டு பட்டனுக்கான கோடிங்
</b:if> 
  • மேலே நான் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில் உங்களுடைய ஓட்டு பட்டனுக்கான கோடிங் இருக்க வேண்டும்.
  •  உதாரனத்திற்க்கு கீழே உள்ள படத்தில் இன்ட்லி ஓட்டு பட்டனை மறைக்க எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று காண்பிக்கப்பட்டுள்ளது. 
  • மேலே படத்தில் உள்ளது போல உங்கள் கோடிங்கை சேர்த்தல் Static Page-ல் அந்த பட்டன் மறைக்கப்படும்.
  • உங்களுடைய பிளாக்கில் ஓட்டு பட்டன்கள் எல்லாம் ஒரே இடத்தில் சேர்த்து இருந்தால் அந்த அனைத்து பட்டன்களுக்கும் சேர்த்தும் இந்த இரண்டு வரி கோடிங்கை சேர்த்தல் போதும். தனித்தனியாக சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
டிஸ்கி 1- என்னால் விளக்க முடிந்தவரை முயற்சி செய்துவிட்டேன். இன்னும் கோடிங் சேர்ப்பதில் சிக்கல் இருந்தால் கமென்ட் பகுதியில் தெரிவித்தால் அதை தீர்த்து வைக்கிறேன். 
டிஸ்கி 2 : இந்த முறையில் ஓட்டு பட்டன்கள் மட்டுமின்றி விட்ஜெட்டுக்களையும் மறைக்கலாம். 
டுடே லொள்ளு 
எவன்டா கண்டுபிடிச்சான் இந்த ஹோம் வொர்க் பண்றத, இத எழுதறதுக்குள்ள முழி பிதுங்கி வெளியே வந்துடும் போல இருக்கு.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments