5/01/2011

பேஸ்புக்கில் நண்பர்களின் புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இந்த பேஸ்புக் தளம் மூலம் நம் நண்பர்களின் வட்டம் பெருகிக்கொண்டே போகிறது. நண்பர்கள் அவர்கள் கணக்கில் அவர்களுக்கு பிடித்தமான போட்டோக்களை போட்டு இருப்பார்கள். அந்த போட்டோக்களை காணவேண்டும் என்றால் ஒவ்வொரு கணக்கில் சென்று பார்க்க வேண்டும்.   உங்கள் நண்பர்கள் லிஸ்டில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும். இது நடக்கிற காரியம் இல்லை. ஆகவே உங்கள் பேஸ்புக் நண்பர்களின் ஒட்டுமொத்த புகைப்படங்களை எப்படி ஒரே இடத்தில டவுன்லோட் செய்வது என காண்போம்.
 • இதற்க்கு முதலில் இந்த லிங்கில் க்ளிக் செய்து அந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
 • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Login with Facebook என்ற பட்டனை அழுத்தவும்.

 • அந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow என்பதை க்ளிக் செய்யவும்.


 • அவ்வளவு தான் பேஸ்புக் நண்பர்களின் புகைப்படங்களை அந்த தளம் காண்பிக்க தொடங்கும். சற்று காத்திருக்கவும்.
 • லோடிங் ஆகி முடிந்ததும் உங்களுடைய பேஸ்புக் நண்பர்களின் ஒட்டுமொத்த போட்டோக்களும் அந்த தலத்தில் காணப்படும்.
 • உங்களுக்கு வேண்டிய நண்பரை க்ளிக் செய்து அவருடைய போட்டோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
\
 • இது போன்று ஒவ்வொரு நண்பர்கள் பெயரையும் க்ளிக் செய்தால் அவர்களின் போட்டோக்கள் தெரியும்.
 • அந்த போட்டோக்களை டவுன்லோட் செய்ய அந்த குறிப்பிட்ட போட்டோ மீது இருக்கும் அம்புக்குறியை க்ளிக் செய்தால் அந்த போட்டோ உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம். 
 • மற்றும் அந்த குறிப்பிட்ட நண்பரின் ஒட்டுமொத்த போட்டோக்களையும் ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் அதற்க்கு அருகே உள்ள download என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

 • இதில் நீங்கள் விரும்பிய வசதியை தேர்வு செய்து கொண்டு போட்டோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
 • இதில் உள்ள இன்னொரு வசதி நீங்கள் போட்டோக்களை டவுன்லோட் செய்யும் போது PDF ஆக மாற்றி டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
டுடே லொள்ளு 
இருங்கப்பா நம்ம தலைவரு டெல்லிக்கு லெட்டரு எழுதுறாரு சீக்கிரம் 
'இலங்கையில போர்நிறுத்தம் ஏற்ப்படலன்னா ராஜினாமா' செய்யப்போறாராம்.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home