7/09/2011

பிளாக்கரின் புதிய தோற்றம் மற்றும் வசதிகள் ஒரு விரிவான அலசல்

நாளுக்கு நாள் இணைய உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. பிளாக்கர் தளம் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதற்கு முன்னர் சோதனை ஓட்டமாக டிராப்ட் தளத்தில் முதலில் வெளியிடும். வாசகர்களின் வரவை பொருத்து அந்த சேவை முழு பயன்பாட்டிற்கு வரும். அதன் படி பிளாக்கர் டிராப்ட் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.  பழைய தோற்றத்திற்கும் புதிய தோற்றத்திற்கும் நிறைய மாற்றங்கள் காணப்படுகின்றன. இதனால் பிளாக்கர் டிராப்ட் உபயோகிப்பவர்கள் வசதிகளை தேடுவதில் சற்று சிரமம் ஏற்ப்படுகிறது. இந்த புதிய தோற்றத்தின் வசதிகளை பற்றி ஒரு விரிவான அலசலை பார்ப்போம்.

புதிய மாற்றங்கள் இல்லாதவர்கள் இந்த புதிய தோற்றத்தை பெற இந்த லிங்கில் http://draft.blogger.com/ செல்லுங்கள்.

புதிய மாற்றத்தில் உங்கள் Dashboard பகுதிக்கு என்றால் உங்களின் ஒவ்வொரு பிளாக்கிற்கு கீழேயும் உங்கள் பிளாக்கின் மொத்த Pageviews மற்றும் எத்தனை பதிவு போட்டுள்ளீர்கள். கடைசியாக எப்பொழுது பதிவு போட்டீர்கள் என்ற விவரங்கள் வருகின்றது. மற்றும் அதில் பென்சில் போன்ற அமைப்பு இருக்கும் அதை கிளிக் செய்தால் புதிய போஸ்ட் பகுதிக்கும் அடுத்து இருக்கும் பகுதியில் உள்ள அம்பு குறியை கிளிக் செய்தால் Posts,comments, Stats, Earnings, Layouts, Template, Setting போன்ற வசதிகள் காணப்படும். இதில் ஒவ்வொரு வசதியாக விரிவாக காண்போம்.

1) Posts
இந்த போஸ்ட் பகுதியில் சென்றவுடன் நம்முடைய பழைய போஸ்ட் அனைத்தும் கானாப்ப்டும். இந்த வசதி பழைய தோற்றத்தில் Edit Posts என்று இருந்தது. மற்றும் புதிய தோற்றத்தில் ஒவ்வொரு பதிவிற்கு அருகிலும் அந்த பதிவு வாங்கியுள்ள கமெண்டு எண்ணிக்கை மற்றும் அந்த பதிவிற்கு கிடைத்த ஹிட்ஸ் (Page Views) ஆகியவை தெரிவதால் நாம் பழைய பதிவிற்கு எவ்வளவு ஹிட்ஸ் கிடைத்தது என்பதை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம். இந்த வசதி முன்பு இல்லை.

இந்த புதிய தோற்றத்தில் ஆறு உட்பிரிவுகள் உள்ளன அவையாவன All, Draft, Scheduled, Import, Published,Pages.
 • All- மேலே உள்ள பதில் உள்ளது இந்த All பகுதிதான். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இது Posts பகுதியின் முகப்பு எனலாம். 
 • Draft- இந்த பகுதியை கிளிக் செய்தால் ட்ராப்டில் உள்ள அனைத்து பதிவும் காண்பிக்கப்படும்.
 • Scheduled- நாம் ஏதாவது பதிவை Automatic publish ஆக வேண்டும் என்று தேர்வு செய்திருந்தால் இந்த பகுதியில் அந்த பதிவு தெரியும்.
 • Imported - பதிவுகள் ஏதாவது Import செய்திருந்தால் இந்த பகுதியில் தெரியும்.
 • Published- பப்ளிஷ் செய்த பதிவுகள் மட்டும் இந்த இடத்தில் தெரியும்.
 • Pages - நாம் ஏதாவது பக்கம் உருவாக்கி இருந்தால் இந்த பதிவில் தெரியும். 
2) Comments
இந்த பகுதியில் நம்முடைய பிளாக்கில் உள்ள பதிவுகளுக்கு வந்துள்ள மொத்த கமெண்ட்டுகள் இந்த இடத்தில் இருக்கும். கமென்ட் யார் போட்டது, எந்த பதிவிற்கு போட்டுள்ளார், எந்த தேதியில் போட்டுள்ளார் மொத்தம் எத்தனை கமென்ட் வந்துள்ளது என அனைத்து தகவல்களையும் இந்த இடத்தில் அறிந்து கொள்ளலாம்.


இதில் மூன்று உட்பிரிவுகள் உள்ளன. Published, Awaiting moderation, Spam மூன்று வசதிகளும் பழைய தோற்றத்திலும் இருந்தாதால் இது என்ன வசதிக்கு என உங்களுக்கே தெரியும்.

3) Stats 
இது நம் பிளாக்கில் வரவு செலவு கணக்கை பார்க்க உதவும் பகுதி. ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் வந்தார்கள், எந்த உலவியில் இருந்து வந்தார்கள், எது மூலமாக வந்தார்கள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த வசதியில் குறிப்பிடும் படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

4) Earnings
இந்த பகுதி இன்னும் வேலை செய்யவில்லை Comming soon என்ற அறிவிப்பு செய்தி தான் வருகிறது. பழைய தோற்றத்தில் இந்த வசதி Monetize என்று இருந்தது. தற்பொழுது இதன் பேரை மாற்றி Earnings என்று வைத்துள்ளனர்.

5) Layout
இந்த பகுதி நாம் விட்ஜெட்டுக்களை சேர்க்க உதவும் Design பகுதி இதை தற்பொழுது பெயரை மாற்றி Layout என்று வைத்துள்ளனர்.


இந்த Design என்று பெயர் மாற்றுவதற்கு முன்னர் இது Layout என்று தான் இருந்தது. பின்னர் Design என்று மாறியது இப்பொழுது பழைய படி Layout என்று மாற்றி உள்ளனர். கூகுளுக்கு ஏன் இந்த குழப்பம் என தெரியவில்லை.


6) Template
இந்த டெம்ப்ளேட் பகுதியில் பிளாக்கரின் டிபால்ட் டெம்ப்ளேட் காணப்படுகிறது. அது மட்டுமில்லாமல் Edit Html பகுதி இந்த பகுதியில் தான் உள்ளது.

இந்த வசதியில் மேலும் மூன்று உட பிரிவுகள் உள்ளன.
 • Backup/Restore Template - நாம் உபயோகித்து கொண்டிருக்கும் டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் அல்லது வேறு ஏதாவது நல்ல டெம்ப்ளேட்டை நம்முடைய பிளாக்கிற்கு மாற்றவும் இந்த வசதி பயன்படுகிறது. 
 • Edit Template - இந்த பகுதி நம்முடைய டெம்ப்ளேட்டின் Edit Html பகுதி. இந்த இடத்தில் நம்முடைய டெம்ப்ளேட்டில் கோடிங்கில் ஏதாவது மாற்றங்கள் செய்ய விரும்பினாலோ புதிதாக ஏதாவது கோடிங்கை சேர்க்க விரும்பினாலோ இந்த பகுதியில் தான் செய்யவேண்டும். 
 • Revert to Classic Template - இந்த வசதி நம்முடைய புதிய டெம்ப்ளேட்டில் இருந்து பிளாக்கரின் classic டெம்ப்ளேட் நேரடியாக மாற்றம் செய்ய முடியும்.
7) Settings
நம்முடைய பிளாக்கின் அமைப்புகளை மாற்றம் செய்ய இந்த வசதி பயன்படுகிறது. இந்த பகுதியில் உள்ள வசதிகளில் எந்த பெரிய மாற்றமும் இல்லை.


இந்த பகுதியில் ஐந்து உட்பிரிவுகள் காணப்படுகிறது.
 1. Basic
 2. Posts and comments
 3. Mobile and email
 4. Language and formatting 
 5. Other
இதில் அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப அமைப்புகளில் மாற்றம் செய்து கொள்ளலாம். 

டிஸ்கி- இந்த புதிய தோற்றத்தை விரும்பாதவர்கள் draft பகுதியில் உள்ள Make blogger in draft my default என்பதில் உள்ள டிக் மார்க்கை நீக்கி விட்டு பிளாக்கர்.காம் சென்றால் பழைய தோற்றம் கிடைக்கும். 

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home