Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய

கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து உள்ளது. அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என கீழே பார்ப்போம்.

இந்த முறையை ஆக்டிவேட் செய்ய நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை  யூடியுப் கணக்கில் கொடுத்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டும். 
  • முதலில் யூடியுப் தளத்திற்கு செல்லுங்கள். 
  • யூடியுப் தளத்தில் மேல் பகுதியில் Browse, Movies, Upload என்ற மூன்று லிங்க் இருக்கும். அதில் Upload என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இதில் கீழ் பகுதியில் Upload HD videos in various formats in 15 minutes என்ற செய்தி இருக்கும். அதற்க்கு அருகில் Increase your limit என்ற ஒரு லிங்க் இருக்கும். அதில் கிளிக் செய்யவும்.
length video files upload on youtube
  • உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நாட்டினை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள கட்டத்தில் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும். 
  • மொபைல் நம்பரை கொடுத்தவுடன் கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு SMS வந்திருக்கும். அதில் Verification Code அனுப்பி இருப்பார்கள். 
  • Verify பட்டனை அழுத்தியவுடன் உங்களின் யூடியுப் கணக்கில் உங்களின் மொபைல் எண் சேர்க்கப்பட்டு விடும்.

இனி யூடியுபில் அப்லோட் பகுதிக்கு சென்றால் 15 நிமிட லிமிட் என்ற செய்தி மறைந்து இருப்பதை காணலாம். இனி நீங்கள் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களை நேரடியாக யூடியுபில் அப்லோட் செய்து கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

டிஸ்கி: சொந்த வீடியோக்களை மட்டும் பகிரவும். திரைப்படங்களை பகிர்வது குற்றமாகும். மீறினால் தண்டிக்கப்படலாம். 

கீழே உள்ள சமூக தளங்களில் (பேஸ்புக், ட்விட்டர், பிளஸ்) பகிர்ந்து மற்றவர்களுக்கும் இந்த தகவலை பகிரவும்.

Techshortly

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

26 comments :

  1. மாப்ள இது அட்டகாசமான விஷயம்யா....இம்புட்டு நேரம் பதிவு பண்ண முடியுமா...அசத்தல் நன்றி!

    ReplyDelete
  2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அண்ணா இதற்கு நாம் நம் சொந்த வீடியோக்களை மட்டுமே Upload செய்ய வேண்டும். இல்லை என்றால் இது மிகப் பெரிய பிரச்சினையில் கொண்டுபோய் விடும். ஒரு முழு நீளப் படத்தை Upload செய்தால் அவ்வளவுதான் நாம் ஜெயில்க்கு தான் போகணும்.

    http://www.google.com/support/youtube/bin/answer.py?answer=71673


    நமது வீடியோ டுடோரியல் போல ஏதேனும் செய்யலாம். எனவே இது மிகவும் பயனுள்ள வசதி எனக்கு. நன்றி

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி..!!

    எனது வலையில்
    உங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள

    நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  6. @Prabu Krishna

    உண்மை தான் பிரபு இதன் மூலம் படங்களை அப்லோட் செய்ய கூடாது... அதற்க்கு தான் முன்னெச்சரிக்கையாக நமது மொபைல் எண்ணை பதிவு செய்கிறார்கள். எச்சரிக்கை போட மறந்துவிட்டேன். ஞாபக படுத்தியதற்கு நன்றி பிரபு...

    ReplyDelete
  7. எச்சரிக்கையுடன் கூடிய பதிவு அருமை.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு சசி

    ReplyDelete
  9. நல்ல விஷயம்தான்..

    தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி...

    ReplyDelete
  10. தயவு செய்து இதை பப்ளிஷ் செய்ய வேண்டாம். சசி.!!

    இது ஒரு கருத்தல்லவே..!! அதனால்தான்..

    தமிழ்மணத்துல ஓட்டு போட்டுட்டேன்.. ஓட்டுப்பட்டைகளின் பயனையும் அறிந்துகொண்டேன்..!! நன்றி சசி!!

    ReplyDelete
  11. புதிய தகவலுக்கு நன்றி..!!

    ReplyDelete
  12. The Best information thank you sasi

    ReplyDelete
  13. நல்ல பதிவு நண்பரே
    த.ம 11

    ReplyDelete
  14. ஆகா..
    இப்படி ஒன்று இருக்கா?

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. அருமையான பயனுள்ள பகிர்வு,நன்றி

    ReplyDelete
  16. மிகவும் உபயோகம் உள்ள விஷயம், நன்றி.
    Upload செய்த பிறகு இதை ஒரு குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் பகிர, ஏதேனும் வழி உள்ளதா. இருந்தால் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கு ...

      பிரைவேட் வீடியோ செய்து உங்கள் நண்பருக்கு மட்டும் அனுப்பலாம்

      Delete
  17. nandri nanbare.......

    from http://pangusanthaielearn.blogspot.com/

    ReplyDelete
  18. but my you tube has showing as Increased limit not available for this account. how to sort out?

    ReplyDelete
  19. நன்றி எல்லா பதிவுகளைப் போல இதுவும் அருமை

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press