Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் சில சுவாரஸ்யமான தகவல்கள்

இணையம் என்பது தற்போதைய உலகில் ஒரு மிகப்பெரிய ஊடகமாக மாறிவிட்டது. முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுபாட்டில் வைத்துள்ளது. இணையம் இருப்பதால் தான் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இந்த இணைய பயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி வருகிறது. கணினியிலும் மொபைல் போன்களிலும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்து கொண்டே உள்ளது. அதை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம்.

இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் சில தகவல்கள்:
  • செப்டெம்பர் 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 112 மில்லியனாகும். இதில் 88மில்லியன் நகரங்களில் இருந்தும் 24 மில்லியன் மக்கள் கிராமங்களில் இருந்தும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
  • கடந்த வருடத்தோடு ஒப்பிட்டு பார்த்தல் எண்ணிக்கையில் 13% வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. இதே வளர்ச்சி நீடித்தால் டிசம்பர்2011 க்குள் இந்த எண்ணிக்கை 121 மில்லியன் பயனாளர்களை தாண்டும். 
  • இந்த 112 மில்லியன் பயனாளர்களில் 90மில்லியன் பேர் மாதத்திற்கு ஒரு முறையாவது இணையத்தை உபயோகிக்கின்றனர்.
  • 26.3 மில்லியன் மக்கள் தங்கள் மொபைல் மூலமாக இணையத்தை உபயோகிக்கின்றனர்.
  • இளைஞர்கள் தான் இணையத்தை அதிகமாக உபயோகிக்கின்றனர். மற்றும் 18 வயதுக்கு குறைவான பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
  • இணையத்தில் ஈமெயில்(89%),சமூக வலைத்தளங்கள்(71%), கல்வி சம்பந்தமாக(64%), பாடல்,வீடியோ(49%) மற்றும் நண்பர்களுடன் அரட்டை(55%) போன்ற வசதிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • 79மில்லியன் பயனாளர்கள் இணையத்தை வாரம் ஒருமுறை இணையத்தை உபயோகிக்கின்றனர். 
  • இந்தியாவில் மும்பையில் தான் அதிகளவு (8.1 மில்லியன்) இணையத்தை பயன்படுத்துகின்றனர். சென்னை நான்காம் (2.9 மில்லியன்) இடத்தில் உள்ளது.

மேலும் விரிவாக அறிய இந்த லிங்கில் செல்லுங்கள் - icube Research Report

TechShorly

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

18 comments :

  1. நல்ல தகவல் நண்பரே...

    ReplyDelete
  2. இனைய பயன்பாடு அதிகமாவது மகிழ்ச்சியே,அது ஆரோக்கியமான விசயங்களுக்கு பயன்படும் வரை!

    ReplyDelete
  3. சுவராசியமான தகவல்.

    ReplyDelete
  4. அட,..
    தகவல்களுக்கு நன்றி மாப்ள..

    ReplyDelete
  5. //முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுபாட்டில் வைத்துள்ளது. //

    மாப்ள, இணையம் கண்டுபிடிச்சது அமெரிக்கா இல்லை..ஸ்பெயிந் என்று ஞாபகம்..கூகுள்ல தேடிச் சொல்லுங்க..

    ReplyDelete
  6. அறிய தகவல்களுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  7. இணைய வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  8. இணையம் வளர்ச்சி அடைவது நன்மைக்கே...!!!

    ReplyDelete
  9. மிகவும் சுவாரசியமான தகவல் வாழ்த்துக்கள் மிக்க நன்றி
    பகிர்வுக்கு ..........

    ReplyDelete
  10. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  11. இது எங்க போய் முடிய போகுதோ!

    ReplyDelete
  12. சுவையான புள்ளிவிவரங்கள்.

    ReplyDelete
  13. நல்லதோர் ஆய்வுப் பதிவு நண்பா.

    ReplyDelete
  14. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. அருமையான தகவல் தந்திர்கள் அண்ணா ரொம்ப பிடித்து இருந்தது...

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press