Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

எனக்குள் நான் பய(ங்கர)டேட்டா - வந்தேமாதரம்

நான்: அப்பா வச்சது சசிகுமார், அம்மா வச்சது சுதாகர், பதிவுலகம் வச்சது வந்தேமாதரம் சசி.

பிறந்த நாள்: 10-05-1984

பிறந்தது: மீஞ்சூரில் உள்ள பாட்டி வீடு.

இருப்பது: இதுவும் மீஞ்சூர் தான்.

படிப்பு: டிப்ளோமா கம்ப்யுட்டர் டெக்னாலஜி, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இதர

வேலை: ஆசையாய் படிச்ச எதுவும் வேலை வாங்கி தரல. அப்பாவின் வற்புறுத்தலுக்காக படிச்சது தான் இப்ப சோறு போடுது. கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் Desinger ஆக உள்ளேன்.

பிடிச்ச விஷயங்கள்: மனைவி, நண்பர்கள், பதிவுலகம் என நிறைய இருந்தாலும் இப்பொழுது என்னுடைய மகள் தான்.

பிடிக்காதது: சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டு வெகு நேரம் காக்க வைப்பவரை ( திரும்பவும் எப்ப கூப்பிட்டாலும் போக கூடாதுன்னு நினைப்பேன்)

நட்புகள்: ஒரு குரல் கொடுத்தால் ஓடி வந்து உதவ நிறைய நண்பர்கள் இருக்காங்க

காதல்: வெற்றி

பாசத்துக்கு: அம்மா தான் எப்பவுமே. அடுத்த இடத்தில் தான் மனைவி.

மறக்க முடியாதது: அம்மாவை

மறக்க நினைப்பது: கவலைகளை

சந்தோஷம்: பணியில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் அப்பா அப்பா என்று ஓடிவரும் அன்பு குழந்தை பார்க்கும் பொழுது.

பலம்: கேட்டவுடனே அல்லது பார்த்தவுடனே ஒரு விஷயத்தை முழுவதுமாக புரிந்து கொள்வது. ஏதாவது பிரச்சினை என்றால் முன்னாடி வரும் நண்பர்கள் (உறவினர்களை விட)

பலவீனம்: எல்லோரையும் நம்பி விடுவது(இப்பொழுது மாறிவிட்டேன்), மறதி

கோபம்: அடிக்கடி வரும் மறையும்(தேவை இல்லாமல் வராது).

ஏமாற்றம்: அதிக எதிர்பார்ப்பு இருந்தால் தானே ஏமாற்றம் வரும். நான் எதையும் அதிகம் எதிர்பார்க்க மாட்டேன். அப்படியும் சொல்லனும்னா வேலை எதுவும் இருக்காது அரைநாள் வீட்டுக்கு வந்துடலாம்னு போனா எதாவது வேலை இருப்பது.

பொழுதுபோக்கு: மனைவி குழந்தையுடன் சேர்ந்து டிவி பார்ப்பது, தற்பொழுது இணையத்தில் உலவுவது

ரசிப்பது: பொய் சொல்ல விரும்பல சார். எனக்கு ரசிப்பு தன்மை கொஞ்சம் குறைவு. குழந்தைகள் பேசுவது பிடிக்கும்.

பிடிச்ச சுற்றுலா தளம்: வயநாடு கேரளா, ஊட்டி

நிறைவேறாத ஆசை: ஒரு நாள் முழுக்க விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இதுவரை நிறைவேறவில்லை.

கடவுள்: எல்லாருமே

பதிவுலக பெருமை: உலவில் சிறந்த பதிவராக வந்தது.

தற்போதைய சாதனை: இதுல என்ன எழுதுறதுன்னு தெரியலங்க. (ஏதாவது பண்ணா தானே எழுத)


பிடித்த வரிகள்: (இணையத்தில் படித்தது)

"கிளையில் அமர்ந்துள்ள பறவைக்கு காற்றில் கிளைகள் அசைவதால் பயம் இல்லை. காரணம் அவைகள் கிளைகளை நம்புவதில்லை!தன் சிறகுகளை நம்புகின்றன"

"வெற்றிக்கு பின் ஓய்வு எடுக்காதீர்கள் நீங்கள் பெற்றது வெற்றி அல்ல அதிர்ஷ்டம் என சொல்ல பல உதடுகள் காத்து கொண்டிருக்கிறது"

(பெரும்பாலும் நான் எந்த தொடர் பதிவையும் எழுதுவதில்லை என்னை பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதால் இந்த பதிவு. தொடரை எழுத அழைத்த நம்ம வியட்நாம்காரருக்கு நன்றி... )

Tech Shortly

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

41 comments :

 1. என்னது பதிவுலகில் ஒரே டேட்டா வா இருக்கு.

  மீஞ்சூர் எது இந்த கும்பகோணம் டு சென்னை வழியில் வருதே அதா?

  ReplyDelete
 2. நல்லா சொன்னீங்க.....

  //ஒரு நாள் முழுக்க விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இதுவரை நிறைவேறவில்லை.//


  ஏன் இந்த கொலை வெரி

  ReplyDelete
 3. @மனசாட்சி

  இல்ல சார் சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம்...

  ReplyDelete
 4. இது போதுமே சசியை தெரிந்துக்கொள்ள.

  ReplyDelete
 5. உங்களைப்பற்றிய விபரங்கள் தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. அன்பின் சசிகுமார சுதாகர சசி !!!

  மீஞ்சூரான் பதிவில் பய‌ங்கரத்தை தேடி தேடி வாஞ்ஜூருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

  கிட்டியது மகிழ்ச்சி மட்டுமே !!!!

  பெற்றோர்களின் பாசத்துடன்

  மனைவியுட‌ன் பிள்ளையின் நேச பந்தத்துடன்

  வாசகர்களின் குறைவில்லா நல்லுறவையும்

  பெற்றிருக்கும் பாக்கிய‌சாலிக‌ளில் ஒருவரய்யா நீர்.


  வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

  ReplyDelete
 7. மாப்ள கலக்கிட்டீங்க....ஜூப்பரு டேடாய்யா நன்றி!

  ReplyDelete
 8. சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டு வெகு நேரம் காக்க வைப்பவரை ( திரும்பவும் எப்ப கூப்பிட்டாலும் போக கூடாதுன்னு நினைப்பேன்)
  // டேய் இது ஏதோ உள்குத்து மாதிரியே இருக்கு.. ராஸ்கல் வந்தேன்னா பிச்சிபுடுவேன்..பிச்சு..

  ReplyDelete
 9. தங்களைப் பற்றி அறிந்துகொண்டேன் நண்பா .

  தங்களின் அன்பு குணத்திற்கு மிக்க நன்றி

  இந்த பதிவுலகில் நான் முதலில் தொடர்பு கொண்ட நபர் தாங்களாயிற்றே

  என்றென்றும் அன்புடன்

  ரமேஸ் .மு

  ReplyDelete
 10. உங்களைப் பற்றிய டேட்டா அருமை.

  ReplyDelete
 11. தங்களைப் பற்றி அறிந்துகொண்டேன் நண்பா..

  ReplyDelete
 12. அட நல்லாயிருக்கே

  ReplyDelete
 13. Normally you dont write about urself. So it is interesting to read this post.

  ReplyDelete
 14. வணக்கம்,சசி!வாழ்த்துக்கள்!கள்ளமில்லா வெள்ளை உள்ளத்துடன்,முதல்முதலில் ஒரு பயோடேட்டா.

  ReplyDelete
 15. உங்களை பற்றி அதிகம் அறிய முடிந்தது ....

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் சசி, உங்களைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நான் பதிவுகள் பக்கம் வந்த காலத்தில் இருந்து தொடர்ந்து படித்து வரும் பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று. நன்றி!

  ReplyDelete
 17. சூப்பர் நண்பா.சிம்பிள் ஆனா பவர்புல் அப்படின்னு சொல்லுவாங்க.இந்த பதிவு அதுக்கு கரெக்டா பொருந்தும்.

  ReplyDelete
 18. மாப்ளே டேட்டா சூப்பர்.....

  ReplyDelete
 19. உமக்கு மறதி அதிகம் தான்,,,, எனக்கு ஒரு கமிட்மென்ட் தந்துட்டு நீ இப்போ வரை மறந்துட்ட?
  அந்த விசயத்துல கொலவெறியில இருக்கேன்...

  ReplyDelete
 20. //தற்போதைய சாதனை: இதுல என்ன எழுதுறதுன்னு தெரியலங்க. (ஏதாவது பண்ணா தானே எழுத)//


  ரொம்ப தன்னடக்கம்தான் உங்களுக்கு

  ReplyDelete
 21. எவ்ளோ விஷயங்கள்.!!! மிக சுவாரஸ்யம்.

  ReplyDelete
 22. நிறைய விஷயங்களை அடக்கமா சொல்லி இருக்கீங்க நல்லாருக்கு சசி.

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் சசி

  ReplyDelete
 24. அன்பின் சசி - பிடிச்ச விஷயம் - பாசம் இதிலெல்லாம் இரண்டாம் இடம் கொடுத்த சசி பொழுது போக்கிலயாவது மனைவிக்கு முத இடம் கொடுத்தீங்களே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 25. என்ன சசி சாதனை ஒண்ணுமே பண்ணலைன்னு சொல்றீங்க? நான் ப்ளாக் ஆரம்பிச்சதில் இருந்து இப்ப வரை எந்த சந்தேகம் இருந்தாலும் உங்க ப்ளாக்ளதான் வந்து சர்ச் போடறேன்... தொடர்ந்து படிக்கிற ப்ளாக்ல உங்க ப்ளாக்கும் ஒன்னு... கீப் ராக்கிங் :-)

  ReplyDelete
 26. நீங்க எழுதினாலேயே எனக்கு பிடிச்ச பதிவு

  ReplyDelete
 27. //கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் Desinger ஆக உள்ளேன்.//நீங்களும் நம்ம வேலைதானா....நிறைய விசயங்கள் உங்களை பற்றி தெரிந்துகொண்டோம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. nalla arimugam sasi


  www.astrologicalscience.blogspot.com

  ReplyDelete
 29. "கிளையில் அமர்ந்துள்ள பறவைக்கு காற்றில் கிளைகள் அசைவதால் பயம் இல்லை. காரணம் அவைகள் கிளைகளை நம்புவதில்லை!தன் சிறகுகளை நம்புகின்றன"

  "வெற்றிக்கு பின் ஓய்வு எடுக்காதீர்கள் நீங்கள் பெற்றது வெற்றி அல்ல அதிர்ஷ்டம் என சொல்ல பல உதடுகள் காத்து கொண்டிருக்கிறது"

  Very Good Keep it Up....

  ReplyDelete
 30. புதிதாக வலைப் பூவிற்கு வரும் அன்பர்களுக்கு நல்லதொரு நண்பன் சசி ! வாழ்த்துகள் !

  ReplyDelete
 31. தன்னடக்கம் - தன்னம்பிக்கை - என்றும் தனி வழி
  அதான் என் சசி அண்ணா...

  அன்புடன்
  P.ராஜா-சின்னபையன்

  ReplyDelete
 32. நண்பா, உங்களைப் பற்றி, உங்கள் ரசனைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவிய அருமையான பதிவினைத் தந்தமைக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்!

  ஏலேய் மச்சி! குழந்தைங்க என்றால் அம்புட்டுப் பிரியமா?

  ReplyDelete
 33. //பணியில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் அப்பா அப்பா என்று ஓடிவரும் அன்பு குழந்தை பார்க்கும் பொழுது.//

  உண்மைதான் ஆபிஸ்ல என்ன பிரச்சினை இருந்தாலும் குழந்தைகளின் முகம் கண்டால் அனைத்துமே பஞ்சாய் பறந்துவிடும்


  தங்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டேன் நண்பா..

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press