Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

அட்சென்ஸ் பயனாளிகளுக்கு புதிய வசதி கூகுள் வெளியிட்டது - Adsense Publisher Toolbar

இணையத்தில் சம்பாதிக்க ஆயிரம் வழிகள், ஆயிரம் இணையதளங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்புவது கூகுள் அட்சென்ஸ் விளம்பர சேவையாகும். நேர்மையாலும், பணம் அதிகமாக கொடுப்பதாலும் இன்றும் இணையத்தில் சம்பாதிக்க அனைவரின் விருப்பம் அட்சென்ஸ் தான். தற்பொழுது கூகுளின் அட்சென்ஸ் விளம்பரம் மூலம் லட்சக்கணக்கான இணையதளங்கள் வருமானம் தீட்டி வருகின்றன. நாளுக்கு நாள் இணையதளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வர முக்கிய காரணமாக இருப்பது கூகுள் அட்சென்ஸ் என்றால் மிகை அல்ல.


அட்சென்ஸ் உபயோகிப்பவர்கள் தங்களின் ஸ்டேடஸ் பார்க்க ஒவ்வொரு தடவையும் அட்சென்ஸ் தளத்தின் லாகின் செய்து பார்க்க வேண்டும். பிளாக்கர் கணக்கு ஒரு ஈமெயில் ஐடியில் இருக்கும், அட்சென்ஸ் ஒரு ஐடியில் இருக்கும் ஒவ்வொரு முறையும் signout செய்து வேறொரு ஐடிக்கு சென்று பார்க்க வேண்டும் இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூகுள் நிறுவனம் அட்சென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு ஒரு புதிய டூல்பாரை அறிமுக படுத்தி உள்ளது. இந்த க்ரோம் நீட்சியை உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் செய்து கொண்டால் ஒவ்வொரு முறையும் கூகுள் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைய வேண்டிய அவசியமில்லை.


Today Earnings, Yesterday Earnings, Current month Earnings மற்றும் Last month Earnings என அனைத்தையும் அட்சென்ஸ் தளத்திற்கு செல்லாமலே பார்த்து கொள்ளலாம். இவைகள் மட்டுமின்றி இது வரை நீங்கள் அட்சென்ஸ் மூலம் சம்பாதித்த மொத்த தொகை மற்றும் Top Channel ஆகியவையும் இந்த நீட்சியின் உதவியுடன் காணலாம்.

நீட்சியை இணைப்பது எப்படி:
  • முதலில் இந்த லிங்கில் Adsense Publisher Toolbar சென்று குரோம் நீட்சியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • இந்த நீட்சி உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் ஆகியவுடன் அதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Allow என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் உங்களின் அட்சென்ஸ் ஐடியை தேர்வு செய்து கொண்டால் இறுதியில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 

அவ்வளவு தான் இனி எந்த இடத்தில இருந்தும் எப்பொழுது வேண்டுமானலும் இந்த நீட்சியில் கிளிக் செய்து அட்சென்ஸ் ஸ்டேடஸ் பார்த்து கொள்ளலாம்.


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

18 comments :

  1. தமிழ் தளங்களுக்கு adsense பெறுவது எப்படி விளக்கினால் நல்லது

    ReplyDelete
  2. தமிழுக்கு கொடுக்க சொல்லுங்க சார்!

    ReplyDelete
  3. இது addsence வச்சவங்களுக்கு மட்டுமே தேவையான பதிவு......

    ReplyDelete
  4. நமக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை...

    ReplyDelete
  5. வணக்கம் மச்சி,
    கூகிள் விளம்பரச் சகோதர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவினைப் புதிய தகவலூடாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
    ரொம்ப நன்றி நண்பா.

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  7. அட்சென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் பயன்படும்.

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு .. ஆனால் எனக்கு அக்கௌன்ட் தர மாட்டேன் என்கின்றார்கள் என்ன செய்வது

    ReplyDelete
    Replies
    1. யோவ் உனக்கு பிளாக் கொடுத்ததே பெரிய விஷயம்..
      அதுல ஆட்சென்ஸ் வேர வேணுமா...?

      Delete
  9. அட்சென்ஸ் பயனாளிகளுக்கு பயனுள்ள தகவல்...

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு பாஸ்

    ReplyDelete
  11. Very useful infn. But Namakku koduppinai illaiye?!

    ReplyDelete
  12. firefox install panna mudiyuma?

    ReplyDelete
  13. பயனுள்ள பதிவு--AdSense பெறுபவர்களுக்கு! அவர்களுக்கு பாராட்டுக்கள்! நன்றி!

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press