சென்ற மாதத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகள் [Jan 2012]

வலைப்பூவில் தினமும் ஏதாவது ஒரு தலைப்பில் ஏராளமான பதிவுகள் வந்து கொண்டுள்ளது. அனைத்து பதிவுகளும் நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் பல பேர் பயன்பெற வேண்டும் என்று நினைத்தாலும் குறிப்பிட்ட ஒரு சில பதிவுகள் தான் அதிக வாசகர்களை கவர்கிறது. அப்படி சென்ற மாதத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 இடுகைகளை பற்றி பதிவு இது.


பிரபல ஓபன் சோர்ஸ் மென்பொருளான VLC மீடியா பிளேயரில் இருக்கும் வசதிகளை பற்றிய பதிவாகும். இந்த மீடியா பிளேயரை பெரும்பாலானவைகள் உபயோகிப்பதாலும், இந்த வசதிகள் வெளியில் தெரியாமல் மறைந்து இருப்பதாலும் அதிக வாசகர்களை கவர்ந்த இடுகைகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

மலிவு விலை கணினியான ஆகாஷ் டேப்லேட் கணினியின் சாதனையை விளக்கும் பதிவு இது. இரண்டு வாரங்களில் 14 லட்சம் கணினிகள் முன்பதிவின் மூலம் ஐபோனின் சாதனையை முறியடித்தது ஆகாஷ் கணினிகள்.

இலவசம் என்றாலே நமக்கு எப்பவும் ஒரே ஜாலிதான். ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் குவிந்துள்ள இணையத்தில் முக்கியமான மிகவும் பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய பதிப்புகளின் டவுன்லோட் வசதியை கொடுக்கும் பதிவு இது.

இணையத்தில் விக்கிபீடியாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுருக்கமாக தகவல்களின் கட்டற்ற களஞ்சியம் விக்கிபீடியா என்று சொல்லலாம். அதே சமயம் இதில் அதிகம் அறியப்படாத பல பயனுள்ள சேவைகளும் உள்ளது. அதனை பற்றிய பதிவு இது.

எதையுமே கொஞ்ச நாளுக்கு தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்தால் அது நமக்கு பிடிக்காமல் போகும் இது தான் மனித இயல்பு. நாம் தினமும் உபயோகிக்கும் கணினிகள் ஒரே தோற்றத்தில் இல்லாமல் அதனை மாற்றி தினமும் அழகழகான புதிய தீம்களை இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் வழிமுறையை விளக்கும் பதிவு இது. 

கூகுள் இருந்தால் எதையும் சுலபமாக செய்து விடலாம் பல தகவல்களை சுலபமாக இணையத்தில் பெற்று நம் அறிவை வளர்த்து கொள்ளலாம் என்று நினைத்து கொண்டிருக்கையில் கூகுளினால் மனித மூளையின் ஞாபக திறனும், யோசிக்கும் திறனும், தன்னம்பிக்கையும் எப்படி பாழாகிறது என்று விளக்கும் பதிவு இது.

மணிக்கணக்கில் வரிசையில் காத்து கொண்டிருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வழக்கத்தை சுலபமாக்க கொண்டுவந்த e-ticket வசதி மக்களிடையே பெறும் வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக இயங்கி கொண்டு வருகிறது. இதனை மேலும் சுலபமாக்கும் நோக்கில் மொபைல் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை IRCTC அறிவிப்பை பற்றிய பதிவு.

தற்போதைய ஹாட் நியூஸ். மாற்றத்தை செய்கிறேன் என்ற பெயரில் பிளாக்கர் பதிவர்களை கவலைக்கு உள்ளாக்கியதை பற்றிய பதிவு இது. தற்பொழுது 8 வது இடத்தில் இருக்கும் இந்த பதிவிற்கு தொடர்ந்து வாசகர்கள் வருவதால் இதன் இடம் மாறலாம்.

சமூக தளங்களில் முதல் இடத்தில் இருக்கும் பேஸ்புக் தளமும் சென்ற வருடம் வெளிவந்து விளையாட்டு பிரியர்களிடையே அமோக வரவேற்ப்பை பெற்ற Angry Birds விளையாட்டும் ஒன்று சேர்ந்து பேஸ்புக் வாசகர்களும் இனி Angry Birds விளையாடலாம் என்ற அறிவிப்பை தெரிவித்த பதிவு இது.

ஹாக்கர்களிடம் இருந்து கூகுள் கணக்கை பாதுகாக்க கொண்டு வந்த 2- Step Verification எவ்வாறு ஆக்டிவேட் செய்வது என்று விளக்கும் பதிவு இது. பெருமாலானவர்களுக்கு இதன் அவசியம் தேவைப்பட்டதால் இந்த பதிவும் அதிக வாசகர்களை கவர்ந்தது.

இந்த பதிவுகள் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

Comments