URL மாற்றத்தினால் இயங்காத தமிழ்மண ஓட்டு பட்டையில் பதிவை இணைத்து ஓட்டு போடுவது எப்படி

கூகுளின் URL மாற்றத்தினால் தமிழ் திரட்டிகளில் பெருமாலானவர்கள் உபயோகித்து கொண்டிருக்கும் தமிழ்மண திரட்டியில் புதிய பிளாக்கில் இருந்து பதிவுகளை இணைக்க முடியவில்லை. மீண்டும் அப்ரூவல் வாங்க வேண்டும் என்று கூறுகிறது. ஓட்டு பட்டையும் புதிய பிளாக்குகளில் வேலை செய்ய வில்லை. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு கூடுதல் சுமை அளித்துள்ளதால் அனைத்து புதிய பிளாக்கிர்க்கும் அப்ரூவல் வழங்க கால தாமதம் ஏற்படலாம். அதுவரை தற்காலிகமாக இந்த பிரச்சினைகளை தவிர்த்து தமிழ்மணத்தில் பதிவை இணைக்கவும், ஓட்டு பட்டையில் ஓட்டு போடுவது எப்படி எனவும் காணலாம்.



தமிழ்மணத்தில் பதிவை இணைக்க:

1) பதிவர்கள் பதிவை பப்ளிஷ் செய்தவுடன் நேரடியாக பதிவிற்கு செல்லாமல் முதலில் உங்கள் பிளாக்கின் URL உடன் ncr என்பதை சேர்த்து பிளாக்கை ஓபன் செய்யவும்.

உதாரணமாக 


2) இது போல கொடுத்து ஓபன் செய்தால் உங்களுடைய பிளாக்கின் முகப்பு பக்கம் Redirect ஆகாமல் .com சேர்ந்து வரும் அதில் கடைசியாக போட்ட பதிவின் லிங்கை கிளிக் செய்து பதிவை ஓபன் செய்யுங்கள்.

3) இப்பொழுது பதிவில் உள்ள திரட்டி ஓட்டு பட்டைகளை கிளிக் செய்து வழக்கம் போல பதிவை இணையுங்கள். எந்த சிரமும் இன்றி உங்களின் பதிவு இனைந்து விடும். இந்த முறையில் இணைக்கும் பொழுது இன்டலி பரிந்துரை பக்கத்தில் உள்ள பதிவுகளும் சரியாக பரிந்துரை பக்கத்தில் வந்துவிடும்.

4) இப்பொழுது பதிவு இணைத்து விட்டீர்கள் ஆனால் உங்கள் பதிவிற்கு வரும் வாசகர்கள் தமிழ்மணத்தில் வாக்களிக்க முடியாது. அவர்களுக்கு ஓட்டு பட்டை இயங்காது. அதனை தீர்க்க நீங்கள் தமிழ்மணத்தில் ஓட்டு போடும் போது அந்த URL காப்பி செய்து கொள்ளுங்கள். 

பதிவின் முடிவில் "தமிழ்மணத்தில் ஓட்டு போட" என்று லிங்க் கொடுத்தால் வாசகர்கள் அதன் மூலம் ஓட்டு போட முடியும்.

தமிழ்மண ஓட்டு பட்டையின் மாதிரியோடு கூடிய லிங்க் இணைக்க:

தமிழ்மண மாதிரி ஓட்டு பட்டையுடன் கூடிய கோடிங் கீழே உள்ளது. அதில்  சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள இடத்தில் இந்த URL மாற்றி உங்கள் பதிவின் தமிழ்மண URL கொடுக்கவும்.

<a href="http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=11368" target="_blank"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwwZh83zVaco6xJZbhv9xzQA2zhwC4jfuoDh443-8eiEqsB7AabVU6xrE_34kA1HdNQxZAAiuZektD2fY7pB98zySi8q_VT3jUbVhMAPFMcciEKGLxrLrbyFHmhSIcfusnylYN-1bSav0/s1600/tamilmanam+logo.png" /></a>
மாதிரி

இந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் பதிவின் முடிவில் Edit HTML பகுதியில் கொடுத்தால் வாசகர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக இருக்கும். 

Note1: ஒவ்வொரு பதிவிற்கும் தமிழ்மண URL மாறும் ஆகவே ஒவ்வொரு பதிவிலும் இந்த URL கட்டாயம் மாற்ற வேண்டும்.

Note2: உங்கள் பதிவிற்கு எத்தனை தமிழ்மண ஓட்டு வந்துள்ளது என்பதை உங்கள் பதிவில் பார்க்க முடியாது. 

மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே உள்ள கருத்துரைகளில் கேட்கலாம்.

Comments