பேஸ்புக் போட்டோக்களை ஒன்றிணைத்து வீடியோ உருவாக்க - Timeline Movie Maker

பிரபல சமூக இணையதளமான பேஸ்புக்கில் ஏராளமான போட்டோக்கள் தினமும் பகிரப்படுகிறது. நீங்கள் சுற்றுலா செல்லும் போது எடுத்த போட்டோக்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான போட்டோக்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறீர்கள். இந்த போட்டோக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து அட்டகாசமான பேக்ரவுண்ட் மியுசிக்குடன் கூடிய வீடியோவாக உருவாக்குவது எப்படி என இங்கு காண்போம்.

முதலில் இந்த timelinemoviemakerதளத்திற்கு செல்லவும். சென்றால் கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Make your Movie என்ற பட்டனை அழுத்தவும்.

  • இந்த பட்டனை அழுத்தியவுடன் பேஸ்புக் permission கேட்கும் Allow கொடுக்கவும்.
  • பிறகு உங்களுடைய Timeline movie தயாராகும். உங்களுடைய கணக்கில் உள்ள போட்டோக்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வீடியோ தயாரிக்கும். 
  • உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு போட்டோக்கள இல்லை என்றால் போட்டோவை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும். 
  • முடிவில் உங்களுடைய வீடியோ தயாராகிவிடும். இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம். 

இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற பட்டனை அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பகிருங்கள்.  

டிஸ்கி: இந்த வீடியோவை கணினியில் டவுன்லோட் செய்ய முடியாதது சற்று பின்னடைவாக உள்ளது. 

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும்.

Comments