Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பேஸ்புக்கில் புதிய வசதி : ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

தொழில்நுட்பம் வளர வளர தீங்குகளும் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் புதிய வைரஸ்கள், மால்வேர்கள் உருவாகி கொண்டே உள்ளது. இவைகளில் இருந்து கணினிகளை பாதுகாக்க நாம் சில ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை நம் கணினிகளில் உபயோகிக்கிறோம். பெரும்பாலானவர்கள் இலவச ஆண்ட்டி வைரஸ் மென்பொருட்களை உபயோகிப்பதால் நம் கணினிகளுக்கு முழு பாதுகாப்பும் அளிக்க முடிவதில்லை. சில வைரஸ்கள் கணினிகளில் உள்ள ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுவதால் நம்முடைய ஆன்லைன் கணக்குகளும் பாதிக்கப்படுகிறது. பிரபல சமூக தளமான பேஸ்புக் ஒரு நாளைக்கு 6 லட்சம் ஹாக்கிங் முயற்சிகள் நடப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆக ஆன்ட்டிவைரஸ் விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். 

5GB இலவச இட வசதியுடன் கூகுள் டிரைவை வெளியிட்டது கூகுள் சிறப்பம்சங்களை அறிய

கடந்த இரண்டு வருடமாக கிளம்பிய புரளிகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது கூகுள் நிறுவனம். கடந்த பதிவில் இன்னும் ஓரிரு நாளில் கூகுள் டிரைவ் வருகிறது என் பார்த்தோம். அதன் படி அதிகாரபூர்வமாக கூகுள் டிரைவ் வசதியை அறிமுக படுத்தியது கூகுள். Google Drive என்பது நம்முடைய வீடியோ, ஆடியோ, PDF, Douments, Photos பைல்களை சேமித்து வைத்து எந்த இடத்தில இருந்தும் எந்த நேரத்திலும் ஓபன் செய்து பார்க்கும் வசதியை அளிப்பது தான் Google Drive. நாம் பார்ப்பது மட்டுமின்றி நண்பர்களுக்கும் பகிரமுடியும். எதிர்பார்த்த மாதிரியே 5GB இலவச இட வசதியுடன் வெளிவந்துள்ளது கூகுள் டிரைவ். அதற்க்கு அதிகமாக இடவசதி வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகை (25GB for $2.49/month, 100GB for $4.99/month or even 1TB for $49.99/month) கட்டி பெற்று கொள்ளலாம்.

பூமியின் அழிவில் இணையத்தின் பங்கு [Infographic]

இப்பொழுது உலக நாடுகள் அனைத்திருக்கும் உள்ள முக்கியமான பிரச்சினை உலக வெப்பமயமாதல். தொழில்நுட்பம் வளர வளர நன்மைகளோடு தீமைகளும் சேர்ந்தே வளர்கின்றது. நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு வாயுவினால் பூமி வெப்பமாகி கொண்டு வருகிறது. இதனால் துருவங்களில் உள்ள பனி கட்டிகள் உறைந்து கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் என்றும் அதனால் உலகின் பெரும்பாலான பகுதிகள் கடல்நீரில் மூழ்கி விடும் என்றும் விஞ்ஞானிகள் கருது கின்றனர். 

இந்த பூமியின் அழிவில் நாம் தினமும் உபயோகிக்கும் இணையத்தின் பங்கும் கணிசமாக உள்ளது. இன்டெர் நெட்டுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்கள? ஒரு சிறிய உதாரணம்

கூகுளின் ஒரு தேடல் மூலம் உருவாகும் CO2 ஒரு கார் மூன்று இன்ச் நகர்ந்தால் உருவாகும் CO2 அளவிற்கு சமமாம்.  மற்றும் ஒரு ஸ்பாம்  மெயில் ௦.3 கிராம் அளவுடைய கார்பன்-டை-ஆக்சைட் வாயுவை வெளியிடுகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 64 ட்ரில்லியன் ஸ்பாம் மெயில்கள் அனுப்ப படுகிறதாம். இந்த ஸ்பாம் மெயில்கள் 1.6 மில்லியன் கார்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்சைடு அளவுக்கு சமமாக CO2 வாயுவை வெளியிடுகிறதாம். 

பிரபல இணையதளமான Wordstream உலக அழிவில் இணையத்தின் பங்கு என்ற தலைப்பில் ஒரு Infographic வெளியிட்டு உள்ளது. 

ஓரிரு நாட்களில் அசத்தலான வசதிகளுடன் வருகிறது கூகுள் டிரைவ்

Cloud Storage பற்றி நீங்கள் அறிந்து இருக்கலாம் நம்முடைய பைல்களை இணையத்தில் சேமித்து வைத்து விட்டால் போதும் உலகத்தில் எந்த மூலையில் இருந்து எந்த நேரத்திலும் கையாளும் வசதியை கொடுப்பது தான் கிளவுட் சேவைகள்.  பல நிறுவனங்கள் இந்த சேவையை கொடுத்தாலும் Dropbox எனப்படும் சேவையை பல லட்சகணக்கான பயனர்கள் உபயோகித்து கொண்டு இருக்கின்றனர். இப்பொழுது இந்த Cloud Storage சேவையில் இணைய ஜாம்பவானான கூகுளும் குதிக்கிறது. Google Drive என்ற புதிய சேவையை துவக்க இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக கூகுள் டிரைவ் பற்றி ஏராளமான வதந்திகள் வந்து கொண்டு இருந்தாலும் இப்பொழுது கிடைத்து இருக்கும் ஆதாரங்கள் இன்னும் ஓரிரு நாளில்(இந்த வாரத்திற்குள்)  கூகுள் டிரைவ் சேவையை வெளியிட இருப்பதை உறுதி படுத்துகிறது. 

புதிய வசதி: கூகுள் டாக்சை பயன்படுத்தி ஜிமெயிலின் புள்ளிவிவரங்கள்(Stats) அறிய

கூகுளின் பல பயனுள்ள தயாரிப்புகளில் பெரும்பாலானவர்களின் அமோக ஆதரவோடு இயங்குவது ஜிமெயில் எனும் இலவச மெயில் சேவையாகும். இலவசம் என்பதாலும், பல பயனுள்ள வசதிகள் இருப்பதாலும் பெரும்பாலான இணைய உபயோகிப்பாளர்கள் ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர். ஜிமெயிலில் ஒரு நாளைக்கு எத்தனை மெயில் அனுப்பி உள்ளீர்கள், உங்களுக்கு எத்தனை மெயில் வந்துள்ளது போன்ற புள்ளி விவரங்களை அறிவது எப்படி என்று இப்பொழுது காணலாம்.

யூடியுப் வீடியோக்களில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பதிவில் பகிர

பல லட்ச்ச கணக்கான வீடியோக்களை உள்ளடக்கிய யூடியுப் தளத்தில் இருந்து வீடியோக்களை பிளாக்கர் பதிவுகளில் பகிர்கிறோம். வாசகர்களுக்கு முழு வீடியோவையும் பகிராமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எப்படி பகிர்வது என பார்ப்போம். இதனால் வாசகர்கள் முழு நீள வீடியோவையும் பார்த்து நேரத்தை செலவழிக்க வேண்டியதில்லை. உதாரனத்திற்க்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள். முதலில் இருந்து ஆரம்பிக்காமல் குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஓட தொடங்கும்.


ஏப்ரல் 27 முதல் இந்தியாவிற்கு வருகிறது ஆப்பிளின் New iPad விலை பட்டியல் உள்ளே

கணினிகளை கையடக்கத்தில் கொண்டுவந்த பெருமை ஆப்பிளையே சாரும். சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் New iPad என்ற புதிய வகை டேப்லெட் கணினிகளை வெளிட்டது. இந்த புதிய டேப்லெட் கணினிகளை வெளியிட்ட நாடுகளில் எல்லாம் போட்டி போட்டு வாங்கினார்கள். வெளியிட்ட மூன்றே நாட்களில் முப்பது லட்சம் கணினிகளை விற்று தீர்ந்தன. இப்பொழுது இந்த புதிய வகை கணினிகளை ஏப்ரல் 27 முதல் கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து உள்ளது.

உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects

கடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது சோதனை பதிப்பில் உள்ள மைக்ரோசாப்டின் புதிய இணையதளம் Touch Effects. தொடர்ந்து வேலை செய்து சோர்வாகி இருக்கும் பொழுது இது போன்ற தளங்களுக்கு சென்றால் உங்கள் மனம் புத்துணர்ச்சி அடையும்.

இந்த தளத்தை ஓபன் செய்தால் புள்ளிகளுடன் ஒரு இணையதளம் வரும் அதில் உங்கள் மவுஸ் கர்சரை பயன்படுத்தி க்ளிக் செய்தும், Drag செய்தும் பாருங்கள். அங்குள்ள புள்ளிகளில் நடக்கும் ஜாலத்தை பாருங்கள். 

கீழே உள்ள போட்டோக்களை பாருங்கள்.


உங்களின் மவுசை திரையின் மீது வைத்து அழுத்தி இழுத்தால் அதற்கேற்ப உங்கள் திரை வண்ணமயமாக ஜொலிப்பதை காணலாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் IE உலவிகளில் நன்றாக வேலை செய்கிறது.


இந்த தளத்திற்கு செல்ல - Touch Effects

தினமும் உங்களுடைய நேரத்தை இணையத்தில் எப்படி செலவழிக்கிறீர்கள்?

தகவல்கள் கொட்டி கிடக்கும் இணையத்தில் காலையில் ஆரம்பித்து மாலை வரை அதிலேயே காலத்தை செலவழிப்பவர்கள் உண்டு. ஒவ்வொருவரும் அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட இணையதளங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்கின்றனர். இப்படி நீங்கள் ஒரு நாளைக்கு இணையத்தில் எவ்வளவு நேரத்தை எந்தெந்த தளங்களில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதை புள்ளி விவரங்களோடு உங்களுக்கு தெரிவிக்க ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது.

ரூபாய் 2,500 மதிப்புள்ள WinX DVD Copy Pro மென்பொருள் முற்றிலும் இலவசமாக

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி Digiarty நிறுவனம் DVD Copy Pro என்ற மென்பொருளை முற்றிலும் இலவசமாக வாசகர்களுக்கு வழங்குகிறது. வழக்கமாக இந்த மென்பொருளின் விலை ரூபாய் 2500 ஆகும். ஆனால் வரும் 16 Apr தேதிக்கு முன்னர் இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள் மூலம் DVD இருந்து DVD காப்பி செய்து கொள்ளலாம். DVD இல இருந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை தனித்தனியாக பிரித்தெடுக்கலாம். DVD யை ISO இமேஜாக மாற்றலாம். மற்றும் பல வசதிகள் உள்ள இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே தொடருங்கள்.

கூகுள் பிளஸ் அசத்தலான தோற்றத்துடன் சில புதிய வசதிகள்

சமூக இணையதளங்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவுவதால் ஒவ்வொரு சமூக தளமும் ஏதாவது ஒரு புதிய வசதிகளை அறிமுகபடுத்தி கொண்டே உள்ளது. வாசகர்களை தக்க வைத்து கொள்ளவும் மேலும் புதிய வாசகர்களை கவரவும் ஏதாவது புதிதாக அறிமுகபடுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்பது கூகுளின் வழக்கம். இப்பொழுது கூகுள் பிளஸ் தளத்தின் தோற்றத்தை முழுமையாக மாற்றி அசத்தலான தோற்றத்தை வெளியிட்டு உள்ளது கூகுள் நிறுவனம்.  இந்த அசத்தலான தோற்றத்துடன் சில புதிய வசதிகளையும் அறிமுகபடுத்தி உள்ளது கூகுள் அவைகள் என்னவென்று கீழே பார்க்கலாம். 

பழைய தோற்றத்தில் மேலே இருந்த மெனு பட்டன்களை இடது ஓரத்தில் கொண்டு வந்து உள்ளது. மற்றும் அந்த பட்டன்களை நமக்கு வேண்டிய படி drag செய்து நகர்த்தி கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் Explore என்ற ஒரு புதிய வசதியும் உள்ளது. அதில் சமீபத்தில் கூகுள் பிளசில் அதிகமாக +1 செய்யப்பட இடுகைகள் பார்த்து கொள்ளலாம்.ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்தை ஆன்லைனில் கண்டறியும் வசதி

இந்தியாவின் மிகப்பெரிய லாபகரமாக இயங்கி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தினமும் 11,000 ரயில்களை இயக்கி கொண்டு உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய வசதிகளை அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகபடுத்தும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே துறை தொழில்நுட்ப மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இனி பயணிகள் ஒரு குறிப்பிட்ட ரயில் சரியாக எங்கு சென்று கொண்டு இருக்கிறது என்று அறிய முடியும்.  

இந்த வசதியின் மூலம் ஒரு ரயில் கடந்து வந்த கடைசி இரண்டு ரயில் நிலையங்களையும், மற்றும் அடுத்த ரயில் நிலையத்திற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இன்னும் எவ்வளவு நேரத்தில் அந்த ரயில் நிலையத்தை அடையும் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். 


ரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருள் முற்றிலும் இலவசமாக

இலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாததால் பெரும்பாலானவர்கள் இலவச மென்பொருளையும் கிராக் வெர்சனையும் உபயோகிக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி Digiarty நிறுவனம் WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. இதன் மதிப்பு $49.95 இந்திய மதிப்பில் சுமார் Rs.2,500 ஆகும்.

பிளாக்கரில் புதிய வசதி- இனி போட்டோ மற்றும் வீடியோவை நேரடியாக Webcam மூலமாக இணைக்கலாம்

கூகுள் நிறுவனம் தற்பொழுது பிளாக்கர் வலைபூக்களுக்கு பல புதிய வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது. சமீபத்தில் Meta tag , Image Properties, Google+ விட்ஜெட் இந்த வரிசையில் தற்பொழுது புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளது. இனி பிளாக்கரில் போட்டோ அல்லது வீடியோக்களை Webcam மூலமாக நேரடியாக உங்கள் வலைப்பூவில் இணைக்கலாம்.

சந்தைக்கு வர இருக்கும் கூகுளின் அதிசய கண்ணாடி [வீடியோ இணைப்பு]

கட்டுபாடில்லா இணையத்தை தனது கட்டு பாட்டில் வைத்து கொண்டிருப்பது கூகுள் நிறுவனம். நீங்கள் இணையத்தை உபயோகிப்பவர்களாக இருந்தால் தினமும் ஏதாவது ஒரு கூகுள் தயாரிப்பை கண்டிப்பாக உபயோக படுத்துவீர்கள். பிளாக்கர், யூடியுப், ஜிமெயில், பிளஸ் இப்படி பல தயாரிப்புகளை வழங்குகிறது கூகுள் நிறுவனம்.  இப்பொழுது கூகுள் நிறுவனம் ஒரு புதிய வகை கண்ணாடியை அறிமுக படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ஒரு நேரடி விசிட் போகலாம் வாங்க! - White House Virtual Tour

கடந்த இரு நாற்றகளுக்கு முன்னர் ஆங்கில பத்திரிக்கைகளில் ஒரு செய்தி பார்த்திருக்கலாம். உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை படம் பிடிக்க கூகுள் அனுமதிக்கப்பட்டது என்று. அவ்வளவு எளிதாக யாராலும் போக முடியாத வெள்ளை மாளிகைக்கு கூகுள் நிறுவனம் அங்குலம் அங்குலமாக படம் பிடித்து உள்ளது. கூகுள் மேப்பில் உள்ள Street View  என்ற வசதியில் சேர்ப்பதற்காகவே இந்த முயற்சிகள்.

white house virtual tour

ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை Track செய்ய

முன்பு ஒரு பதிவில் Right Inbox என்ற நீட்சியை பற்றி பார்த்தோம். ஜிமெயிலில்  மெயில்களை Schedule செய்து குறிப்பிட்ட நேரத்திற்கு தானியங்கி முறையில் அனுப்ப உதவுதவு இந்த நீட்சி. (இதனை பற்றி விரிவாக அறிய முந்தைய பதிவை பார்க்கவும்). இப்பொழுது இந்த நீட்சியில் ஒரு புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளனர். அதாவது இனி இந்த நீட்சி மூலம் ஜிமெயிலில் அனுப்பப்படும் ஈமெயில்களை Track செய்யலாம். நீங்கள் அனுப்பிய ஈமெயிலை மற்றொருவர் ஓபன் செய்த உடன் அதற்கான அறிவிப்பு உங்கள் ஈமெயிலுக்கு வந்து விடும். இனி  " மச்சி நான் உன் மெயிலை பார்க்கவே இல்லடா" யாரும் உங்க கிட்ட சொல்ல முடியாது. நீங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.

track_your_email

உபயோகப்படுத்துவது எப்படி?

  • இதனை உபயோகிப்பது மிகவும் சுலபம். முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து இந்த நீட்சியை உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். (ஏற்க்கனவே இன்ஸ்டால் செய்து இருந்தால் மறுபடியும் இணைக்க தேவையில்லை.)
  • இந்த நீட்சி தற்பொழுது குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற உலவியை உபயோகித்தால் இந்த வசதியை பெற முடியாது. 
  • இந்த நீட்சியை இன்ஸ்டால் செய்த உடன் ஜிமெயிலை ஓபன் செய்து Compose பட்டனை க்ளிக் செய்யுங்கள். 
  • அங்கு Send Later என்ற பட்டனுடன் Track என்ற ஒரு புதிய பட்டனும் வந்திருக்கும். 
  • ஈமெயில் அனுப்புவதற்கு முன் அந்த Track பட்டனை டிக் செய்து அனுப்பி விட்டால் அந்த ஈமெயிலை ஓபன் செய்தவுடன் அந்த விவரங்கள் உங்கள் மெயிலுக்கு வந்து விடும்.
மேலும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


டவுன்லோட் செய்ய 

Right Inbox for Chrome5.0+ டவுன்லோட் 
Right Inbox for Chrome3.6+ டவுன்லோட்


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

5GB இலவச இட வசதியுடன் வரும் கூகுளின் புதிய சேவை Google Drive

Cloud Storage தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வரும் நவீன தொழில்நுட்பம் ஆகும். Cloud Storage என்பது நாம் நம்முடைய பைல்களை ஆன்லைனில் சேமித்து கொள்ளும் வசதி. இப்படி ஆன்லைனில் சேமிக்கும் பைல்களை எங்கிருந்தும் எந்த நேரத்திலும் ஓபன் செய்து கொள்ளலாம். மற்றும் ஸ்மார்ட் போன்களில் இருந்தும் நேரடியாக உபயோகித்து கொள்ளலாம். சிடி மற்றும் பென்டிரைவில் சேமித்து கொண்டு கூடவே எடுத்து போக வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சேமிக்கும் பைல்களை உங்கள் நண்பர்களுக்கும் share செய்யும் வசதி உள்ளதால் அந்த பைலை அட்டாச் செய்து மெயில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இப்படி பல பயனுள்ள வசதிகளை கொடுப்பது தான் Cloud Storage சேவை எனப்படும்.

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press