Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

சந்தைக்கு வர இருக்கும் கூகுளின் அதிசய கண்ணாடி [வீடியோ இணைப்பு]

கட்டுபாடில்லா இணையத்தை தனது கட்டு பாட்டில் வைத்து கொண்டிருப்பது கூகுள் நிறுவனம். நீங்கள் இணையத்தை உபயோகிப்பவர்களாக இருந்தால் தினமும் ஏதாவது ஒரு கூகுள் தயாரிப்பை கண்டிப்பாக உபயோக படுத்துவீர்கள். பிளாக்கர், யூடியுப், ஜிமெயில், பிளஸ் இப்படி பல தயாரிப்புகளை வழங்குகிறது கூகுள் நிறுவனம்.  இப்பொழுது கூகுள் நிறுவனம் ஒரு புதிய வகை கண்ணாடியை அறிமுக படுத்தியுள்ளது.என்னெங்க கண்ணாடியை வெளியிட்டதை போய் ஒரு பெரிய இதுவா பேசுறீங்க எங்க ஊருல தெருவுக்கு தெரு கண்ணாடி விக்குராங்கன்னு சொல்றது எனக்கு கேக்குது ஆனால் இது வெறும் கண்ணாடி இல்ல பல அதி நவீன வசதிகள் அடங்கிய கண்ணாடி.

சிறப்பம்சங்கள்:
 • இந்த கண்ணாடி மூலம் பிடித்த பாட்டு கேட்கலாம்.
 • இந்த கண்ணாடிகள் கூகுள் மேப் உதவியுடன் உங்களுக்கு சரியான வழியை காட்டும். 
 • இந்த கண்ணாடி மூலம் நினைத்த இடத்தை படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரலாம். 
 • கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ காலிங் வசதி.
 • அந்த கண்ணாடியை அணிந்தால் தட்ப வெட்ப நிலை உங்கள் கண் முன்னே மற்றும் பல அறிய வசதிகள் 
இதெல்லாம் நான் சொல்றதை விட கீழே உள்ள வீடியோவை பாருங்க இந்த கண்ணாடிகள் இன்னும் சந்தைக்கு வரவில்லை கூடிய விரைவில் வரலாம். இந்த கண்ணாடியின் விலை $250 இருந்து $600 வரை இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

Tech Shortly - [Microsoft new Freeware] Set bing images as your desktop wallpaper


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

13 comments :

 1. இன்னும் என்ன என்னதான் செயவானுகளோ இந்த கூகிள் காரங்க...

  ReplyDelete
 2. இது ஏப்ரல் முதல் தேதி கூகுள் வெளியிட்ட செய்தி இல்லையே? :-))

  ReplyDelete
 3. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

  Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

  ReplyDelete
 4. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

  Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

  ReplyDelete
 5. very nice story thank you for news i am bookmarking my browser thank you my website please visit http://www.kollywoodthendral.in

  ReplyDelete
 6. @ தமிழ்மகன்

  கூகுள் சேவை சரியில்லை என்றால் நான் உடனே எவ்வித பிரச்சனைகளுமின்றி இன்னொரு சேவைக்கு மாறிவிட முடியும். இது அவர்களுக்கும் தெரிவதால்தான் அவர்களின் வருமானத்தில் கணிசமான பங்கினை புதிய சுவாரஸ்யமான பயனுள்ள சேவைகளை அறிமுகப்படுத்தி பயனர்களைத் தக்கவைத்துக்கொள்வதோடு புதிய பயனர்களையும் ஈர்க்கிறார்கள். நான் அவர்களின் சேர்வை எனக்குப் பயன்படுகின்றது என்ற ஒரே (சுயநல) நோக்கோடுதான் கூகுளைப் பயன்படுத்துகின்றேனே தவிர அவர்களுக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காகவல்ல. இந்த பிசினஸில் நானும் திருப்தியடைகின்றேன், அவர்களும் திருப்தியடைகின்றார்கள். ஆனால் நீங்கள் சொல்லும் சேவையானது எனது தேவைகள் எதையும் தீர்ப்பதாகப்படவில்லை. அத்துடன், பிற தளங்களில் தோன்றும் ஏமாற்றிக் காசுபறிக்கும் விளம்பரங்களையும் இவர்கள் வெளியிடுகின்றார்கள். இணையத்தின் நீக்கு போக்கு தெரிந்தவர்களுக்கு இவ்வாறான சேவைகள் எம்மிடமிருப்பதைப் பிடுங்க மட்டுமே உதவும் என்பதை இலகுவில் கண்டுபிடிக்க இயலும்.

  1. Non-Professional design
  2. Comments in almost all Website reputation sites

  நீங்கள் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால் இச்சேவையைப் பற்றி விசாரிக்காமல் தவறாக விளம்பரப்படுத்தாதீர்கள். அத்துடன், காசுக்கு ஆசைப்பட்டு அவர்களை நாம் பயன்படுத்தத் தொடங்கினால் அவர்களின் ரேங்கிங் தானாக உயர்ந்து வேறு பலரும் ஏமாறும் வாய்ப்புக்கள் உண்டு.

  ReplyDelete
 7. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. "அம்மா"விடம் சொல்லி இதனை இலவசமாக மன்னிக்கவும் "விலையில்லா" கண்ணாடியாக வழங்கினால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்..

  ReplyDelete
 9. தங்கள் பணி வியப்பாக உள்ளது! வளரும் வலைப் பதிவர்களுக்கு தங்களின் வலைப்பதிவுகள் மிகவும்

  பயன்தரும்!
  எனக்கொரு உதவி,
  என் வலையும் பல வலைகளும் சில நேரம் தவிர
  பெரும்பான்மையான நேரம் திறப்பததில்லை
  நான்கைந்து நாட்களுக்கு மேலாக தொல்லை
  தருகிறது தாங்கள் சரிசெய்ய இயலுமா!?
  அல்லது என்ன செய்ய வேண்டுமென்பதை
  மின் அஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன்
  jram1932@gmil.com
  சா இராமாநுசம்

  ReplyDelete
 10. பதிவுக்கு மிக்க நன்றி மேலும் உங்களின் இந்த பதிவு 06/05/2012 இன்று சிங்கப்பூர் தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ளது

  ReplyDelete
  Replies
  1. Thanks for this sweetable info....

   Delete
 11. நல்ல தகவல் நன்றி

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press