புதியவர்களுக்காக: நம்முடைய பதிவில் எப்படி அனிமேஷன்(.gif) படங்களை இணைப்பது?

 இன்றைய வேண்டுகோள்
நீங்கள் இறந்த பின்பும் இந்த உலகை காண விரும்கிரீர்களா? 

இன்றே உங்கள் கண்களை தானம் செய்யுங்கள்.

      நாம் நம்முடைய பதிவில் அனிமேஷன் படங்களை இணைக்கலாம் என்று நினைப்போம். ஆனால் நம்முடைய பிளாக்கரில் அனிமேஷன் படங்களை இணைத்தால் அது வெறும் சாதாரண படமாகவே(.png) தெரியும். இங்கு நாம் எப்படி கீழே உள்ளதை போல அனிமேஷன் படங்களை இணைக்கலாம் என்று பாப்போம்.


good morning

இதற்க்கு முதலில் http://photobucket.com/ தளத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இதுவரை இல்லை எனில் இன்றே துவக்கி கொள்ளுங்கள் இதில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளது இதற்க்கு எந்த கட்டணமும் கிடையாது.

          அக்கௌன்ட் துவக்கியவுடன் உங்கள் username, password கொடுத்து உள்ளே நுழைந்து  கொள்ளுங்கள். இப்பொழுது upload images& videos என்பதை அழுத்தி உங்கள் படத்தினை தேர்ந்துதெடுத்து கொள்ளவும். அப்லோட் ஆகியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.



இதில் உங்களுக்கு தேவையான டைட்டில் கொடுத்து விட்டு கீழே இருக்கும் Save&Get Links என்ற பட்டனை அழுத்தவும். அதை அழுத்தியவுடன் உங்களுக்கு உங்கள் படத்தின் url மற்றும் Html Code ஆகியவை கிடைக்கும். கீழே படத்தில் பார்க்கவும்.

    

மேலே உள்ள படத்தில் சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டு காட்டியுள்ளது தான் உங்கள் படத்தின் html Code அதை காப்பி செய்து கொள்ளுங்கள். இப்பொழுது  இந்த html கோடினை உங்கள் பதிவின் Edit HTML என்ற பட்டனை அழுத்தி வரும் html mode ல் பேஸ்ட் செய்யவும். அவ்வளவுதான் இப்பொழுது நீங்கள் compose பட்டனை அழுத்தி பார்த்தால் உங்கள் பதிவில்    
அனிமேஷனோடு கூடிய படம் வந்திருக்கும். 

Comments